சனி, 27 மே, 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 22 தலைப்பு: மனநலம் காப்போம்.

சருகுகளின் சபலங்கள்


பகுதி - 22


தலைப்பு: மனநலம் காப்போம்.

எல்லாரும் நினைக்கிறா மாதிரி மன அழுத்தம் சாதாரண விஷயமல்ல. 

மன அழுத்தத்திற்கான காரணிகளாக பொருளாதார ஸ்திரமின்மை, காதல் தோல்வி, உறவுகளின் பிரிவு, நம்பிக்கை துரோகங்கள், ஏமாற்றப்படுதல் இப்படி எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். 

மன அழுத்தம் ஏற்பட்ட மனம் நாளாக நாளாக தற்கொலையை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் மட்டுமே அதிகம். 

அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு எப்போதும் போல ஒரு வாழ்வை வாழ்வது என்பது சுலபமானதும் அல்ல. 

அதிலும் தன்னம்பிக்கை உடைந்த மனதை சரி செய்து பழைய படி வாழ்வதற்கும், வேலைக்கு செல்வதற்கும் பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியதிருக்கும்.

தற்போதெல்லாம் மன நலம் கெட்டு போக வேறெங்கும் செல்ல வேண்டாம். சோஷியல் மீடியாவில் புழங்கினாலே போதுமானதாக இருக்கின்றது. 

ஒரு காலத்தில் மக்களை மக்கள் பார்த்துக் கொள்வதும் அரிது. பார்த்துக் கொண்டாலும் இத்தனை அளவளாவது குறைவு. 

மனநலம் கெட்டால் உடல் நலமும் குன்றிப் போய்விடும்.

ஒருத்தனுக்கு விபத்து ஏற்படுத்துனா அது வெளியே தெரியும். அதற்கேற்றவாறு மருந்தும் அனுசரணையும் தந்து தேத்திவிட முடியும். மனதில் ஏற்படும் விபத்து அதாவது மன அழுத்தமானது வெளியே தெரியவே தெரியாது.   

இரண்டுமே காயங்கள் தான் புற காயங்களுக்கு எப்படி மருந்து உட்கொள்கிறோமோ அது அளவு அகத்தின் காயங்களுக்கும் மருந்தும் அனுசரணையும் ஆறுதலான வார்த்தைகளும் தேவை.

அது தேர்வின் தோல்வியாக இருக்கலாம், வேலையில்லா திண்டாட்டமாக இருக்கலாம், பண நெருக்கடியாக இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்துக் கொள்பவர்கள் அந்த நொடியில் அந்த முடிவெடுத்து விடுவதில்லை. 

மன அழுத்தங்கள் நெடுங்காலமாகவே அவர்கள் மனதை அரித்துத் தின்றுக் கொண்டிருக்கும். மன அழுத்தம் அதீதமாகி மைண்ட் ப்ளாக் கண்டிஷன் ஏற்படுகையில் இதை தவற வேறு வழி தென்படுவதில்லை அவர்களுக்கு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதீத மன அழுத்தம் காதலையோ காமத்தையோ கூட தேடாது. அப்ப தான் கவலையா இருக்கிற அவங்க கிட்ட போய் sex chatற்கோ wet chatற்கோ அழைப்பவர்களும் உண்டு. நான் நல்ல மனநிலையில் இல்லை என்றால் உன்னை கூல் பண்ண தான் உன்ன பண்ண கூப்பிடுகிறன் என்பார்கள். 

பொருளாதார ரீதியாக சிக்கி சின்னபின்னமாகி கொண்டிருக்கும் ஆணிடம் சென்று காமத்தை நோக்கி காத்திருக்கும் மனைவியருக்கு கிடைக்கும் பொல்லா வார்த்தைகளுக்கு பல சமயம் காரணம் கூட இதே. அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான். அதை குறைக்க பொருளாதார ரீதியாக எதாவது முன்னேற உதவலாம். அதை விட்டுட்டு என்னை எதுவும் செய்யவே மாட்டேன்கிறான் என்று மூன்றாம் தர ஆண்களிடம் சென்று சிக்கி சீரழியும் பெண்கள் அதிகமாகி வருகிறார்கள். 

ஆக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு பிதற்றுபவர்களை நீ என்ன மனநோயாளியா என்று கேட்டு ஒதுக்கி வைக்காமல் அவர்களுக்கான ஆறுதலையும் மருந்துகளையும் உட்கொள்ள செய்தல் மட்டுமே மன‌ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

மனநல மருத்துவமனை பெருகிவிட்டது. ஒரு காலத்தில் மனநல பிரச்சினை என்று அறியாமல் பில்லி, சூனியம், பேயோட்டுதல், சாமியாடுதல் போன்ற நிகழ்வுகளை நாம் காண முடியும்.‌ அத்தனையும் மனநலம் சார்ந்த பிரச்சினையின் விளைவே. என்ன அந்த காலத்தில் மன நலம் சார்ந்த பிரச்சினைகளை பற்றி அறிவதற்கான புற வெளி இல்லை.‌

ஆனால் இக்காலத்தில் மனநலமே உடல்நலம். ஆக உடலை பேணும் அளவிற்கு மனதையும் பேணி உடல் உள்ள ஆரோக்யம் காக்க வேண்டியது அவசியமாகிறது.

மனநலம் குறைய குறைய மக்களுக்குள் வன்மங்களும், காழ்ப்புணர்ச்சியும், துவேஷங்களும் அதிகரிக்கும்.‌அது அதிகரிக்க அதிகரிக்க ஒருவரை ஒருவர் கத்தியின்றி ரத்தமின்றி வார்த்தைகளாலும் புரளிகளாலுமே வெட்டிக் கொண்டு மனநலம் குன்றிய சாய்வர்.

ஞாயிறு, 21 மே, 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 21 தலைப்பு: உறவுகள் உடைபடும் காலமிது

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 21

தலைப்பு: உறவுகள் உடைபடும் காலமிது

இப்போது எல்லாம் உறவுகளுக்கிடையே சகிப்புத்தன்மை குறைந்து காணப்படுகிறது. எவரும் எவரோடும் அனுசரித்து வாழ தயாராகவே இல்லை.  அப்படி அனுசரித்து வாழ தயாராக இருப்பவரின் உணர்வுகள் emotional abuseற்கு ஆளாக்கப்படுகின்றது என்றால் மிகையாகா.

முக்கியமாக திருமணம், காதல் போன்ற intimacyயான வாழ்விற்கு முக்கிய தேவை ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துக் கொள்ளுதல். இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டாலும் ஒருவருடைய wavelength மற்றவரோடு ஒத்து போகவில்லை என்றால் அந்த உறவுக்கு ஆயுள் குறைவு மட்டுமே.

ஒரு காலத்தில் ஆண் dominantஆக இருந்தான். பெண்ணும் ஆண் வெளியே சென்று வேலை செய்துவிட்டு வருகிறானே என்று அத்தனையும் பொறுத்து போனாள். அவனுக்கேற்றவாறு இல்லத்தை நிர்வகித்தாள். அத்தனையும் சீராகவே போய் கொண்டிருந்தது. அவள் விட்டுக் கொடுக்கிறாள், அனுசரித்து செல்கிறாள் என்பதை புரியாத ஆண் இனம் அவளை அவள் அன்பை இளக்காரமாக கருதி அடிமையாக நடத்த ஆரம்பித்ததின் விளைவு தான் தற்காலத்தில் உறவுகள் எளிதில் உடைபடுவது.  திருமணம் என்பது ஒரு வண்டியில் பூட்டிய இரு மாடுகள் கதை தான். இரண்டு மாடுகளும் ஒத்திசைந்து சீரான வேகத்தில் சென்றால் மட்டுமே வாழ்க்கை என்ற வண்டி கவிழாமல் இருக்கும். 

ஆணை பொருத்தவரை வெளியே வேலைக்கு சென்று வருவது மட்டுமே உழைப்பு. பெண் அத்தனை உழைப்பை போட்டாலும் வருமானம் வராத உழைப்பு என்பதால் அவள் சும்மா கிடப்பதாகவே நினைக்கிறான். ஏன்னா அவன் வீட்டில் இருக்கையில் என்ன செய்கிறான், சும்மா‌ தானே இருக்கிறான். ஆகையால் தான் வேலைக்கு செல்லாமல் அதிகாலையில் இருந்து இரவு வரை பெண் உழைக்கும் உழைப்பை வீட்டில் சும்மா தான் இருக்கேன் என்று பதத்திற்கு அவளை அவளே வெளியில் வீட்டில் சும்மா தான் இருக்கேன் என்று சொல்லும் அளவு இட்டு செல்கின்றான்.‌

பல காலமாக பெண் இனம் ஆண் இனத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அனுசரித்து சென்று கொண்டிருந்தது. எத்தனை காலம் அனுசரித்து செல்வது அத்தனையையும் என்று பெண் இனம் தன் சுயமரியாதையை, சம உரிமையை, தன் தேவைகளுக்கென்று முக்கியத்துவம் தர முடிவு செய்துவிட்டனர். 

பல காலமாக பெண் சமைத்து போட்டு, துணி துவைத்து போட்டு வீட்டை பராமரித்து, பிள்ளையை பெற்றுப் போட்டு வெளியே வேலைக்கு சென்று வரும் ஆணுக்கு சகலவிதத்திலும் தன்னை தியாகம் செய்துக் கொண்டிருந்த வரை எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்தது. 

தனக்கென்று ஆசா பாசங்கள் உண்டு, தன்னாலும் சம்பாதித்து தன்னந்தனியாக சுயமரியாதையோடு வாழ முடியும் என்ற எண்ணங்கள் பெருவாரியான பெண்களுக்கு துளிர்த்த பின் உறவுகளுக்கும் உணர்வுகளுக்குமான விதிகள் மாற்றம் கொண்டிருக்கின்றன.‌

இனி வாழ்க்கை எனும் வண்டி நிலைகுலையாமல் ஓடணும்னா ஆணும் அனுசரித்து வாழ தான் செய்ய வேண்டும். 

ஆக ஒரு தலைமுறையே அப்படியே தலைக்கீழாக மாற்றம் பெற்று கொண்டு இருக்கின்றது. பெண்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.‌ ஆக இனிமேலும் காதல் என்றும், கடவுள் என்றும், தியாகி என்றும் கொண்டாடி பெண்ணின் உழைப்பை, உடலை சுரண்டி வாழ முடியாது என்பதை ஆண்களும் புரிந்துக் கொள்ள வேண்டும். 

ஆக இனி காதல் அல்லது திருமணபந்தங்கள் நெடுங்காலம் நீட்டிக்க வேண்டும் என்றால் அம்மா மாதிரி பொண்ணு தேடாதீங்க. கிடைக்காது. ஏன்னா இன்றைய தலைமுறை பெண்கள் கலாச்சார மாற்றத்தில் அத்தனை வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறார்கள். 

நெடுங்காலம் அடைத்து வைத்திருந்த பறவை கூண்டிலிருந்து விடுபடுகையில் ஏற்படும் ஆர்பரிப்பைப் போல.‌ அவள் சுற்றி திரிய ஆசைப்படுகிறாள். சுதந்திரமாக திரிய ஆசைப்படுகிறாள்‌. கிடைத்த சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்போது அவள் எந்த எல்லைக்கும் சென்று காப்பாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறாள். 


இன்னமும் போய் அவளிடம் சென்று குடும்ப பொம்பிளைன்னா இப்படி தான் இருக்கணும் என்று வரைமுறை தீட்டினீர்கள் என்றால் போய்யா பூமர் அங்கிள்‌ என்று உறவுகளை அத்தனை சீரியசாக எடுத்துக் கொள்ள தயாராக இல்லாமல் உறவை அறுத்து எறிந்துவிட தனக்கேற்ற மற்றொரு துணையை தேர்ந்தெடுக்க அவள் தயாராகவே உள்ளாள்.

ஆக இத்தனை காலம் பெண்கள் அனுசரித்து ஆண்கள் சுகபோகமாய் வாழ்ந்து வந்தீர்கள். இனி ஆண்கள் அனுசரித்து மட்டுமே செல்ல வேண்டும். அது மட்டுமே உங்கள் கண் முன்னே இருக்கும் only choice.

அக்காலத்தில் கல்வி, வேலை என்று இயங்காத பெண்கள் தற்காலத்தில் அத்தனையிலும் சிறந்து விளங்குகிறாள். அதன் விளைவு சுயபுத்தியுடன் இருக்கும் பெண்ணை பழைய காலங்கள் போல நடத்த முற்படுகையில் ஏற்படும் கோளாறுகள் உறவும் பாலங்களை சல்லி சல்லியாக உடைக்கப்படுகின்றன.‌எதிர்காலத்தில் சிங்கிள் பேரண்ட்ஸ் அதிகரிப்பதை எவராலும் தடுக்க இயலாது.

புதன், 17 மே, 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 20 online அனர்த்தங்கள்


சருகுகளின் சபலங்கள்

பகுதி - 20

online அனர்த்தங்கள்

நிதர்சன வாழ்க்கையில் நண்பர்கள் இருவர் சண்டையிட்டு கொள்கிறார்கள், கொஞ்ச நேரம் கழித்தோ கொஞ்ச காலம் கழித்தோ வாடா மச்சான் என்று பழசை மறந்து மறுபடியும் கூடிக் கொள்வதை காண முடிகின்றது. 

இதுவே சோஷியல் மீடியாவில் இருவர் சண்டையிட்டு கொண்டால் நிரந்தரமாக அவர்களுக்குள் உறவுகள் அற்று போய்விடுகின்றதே ஏன் என்று கேட்டால் தோழி ஒருத்தி.

நிதர்சனம் தான். இருவர் சண்டையிட்டு கொண்டு மீண்டும் கூடி வாழ உண்மை அன்பு ஒன்றே போதுமானது. அது நிஜ உலகமோ, நிழல் உலகமோ அல்லது மாய உலகமோ. 

அன்பின் பொருட்டு சண்டையிட்டுக் கொண்டால் அங்கு சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால் சமூகவலைதளத்தை பொருத்தவரை எந்த ஒரு விஷயத்தை இங்கு உங்கள் டைம்லைனில் போட்டாலும் அது பன்மடங்கு exaggerated செய்து காண்பிக்கப்படும். 

ஏன்னா நிஜத்தில் நீங்க இரண்டு பேரு போடற சண்டையை உதாரணத்துக்கு கட்டிப் புரண்டு நடுரோட்டில் உருண்டு புரண்டு அடிச்சிக்கிட்டு சண்டை போடறீங்கனு வச்சுக்கோங்க அதை குறைந்தபட்சமாய் ஒரு பத்து பேரு பார்ப்பான். 

ஆனால் சோஷியல் மீடியாவில் நீங்கள் பதியும் ஒவ்வொரு பதிவும் சண்டையிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு வார்த்தையும் பல பேரால் படிக்கப்படுகின்றது. 

அதாவது நிஜ உலகில் பத்து பேரு உங்க சண்டையை பார்த்து நூறு பேருக்கு அந்த விஷயம் போய் சேருதுன்னா சோஷியல் மீடியாவில் நீங்கள் போடும் சண்டை followersகளின் அளவுகோலை வைத்து பலரால் கவனிக்கப்படுகின்றீர்கள். 

ஆக பொதுவில் வார்த்தையை கையாளும் முன் ஒரு முறைக்கு நூறு முறை நீங்கள் யோசித்து தான் எழுத வேண்டும். 

அந்த நேரத்து வன்மத்தை தீர்த்தால் போச்சுன்னு பலர் பார்க்க உங்கள் நண்பனை திட்டினீங்கன்னா மீண்டும் நீங்க பழக முற்படுகையில் உங்களை கண்காணித்தவர்கள் அந்த தீயை அணையாதவாறு பார்த்துக் கொள்வார்கள். 

என் டைம்லைன் என் இஷ்டப்படி கண்டதையும் எழுதுவேன் மற்றவர்களை பற்றி தரக்குறைவாக எழுதுபவர்கள் பிறரை பற்றிய ஒரு தவறான பிம்பத்தை பிறரது ஆழ்மனதிற்குள் விதைக்கிறார்கள். 

உதாரணத்திற்கு சமூகவலைதளத்தில் உங்களுக்கு ஒரு பெண்ணை பிடிக்காமல் அவளுக்கு தே*வடியா பட்டம் கட்டி இன்புற்றீர்களானால் கடைசி வரை அவளுக்கு அந்த பெயர் பல்கி பெருகி அவ்வளவு எத்தனை உத்தமியாக இருந்தாலும் நிரூபிக்க முயன்றாலும் நீங்கள் விதைத்து விட்டுப்போன அவப்பெயர் பல்கி பெருகி இன்னும் மோசமான அவப்பெயராகிவிடக்கூடும்.

அதே தான் ஆணுக்கும் முன்ன பின்ன யோசிக்காமல் பதிவிடும் முன் யோசியுங்கள். எத்தனையோ புரளிகள் நம் காதை எட்டும் தான். அதற்கு செவி சாய்த்து தான் ஆக வேண்டிய அவசியமில்லை. நாம் நம் பொருட்டு உணராத ஒன்றை பொதுவெளியில் வைக்க வேண்டிய அவசியமில்லை.  நாம் உணர்ந்து ஒன்றை தண்டிக்க வேண்டிய ஒன்றை பொதுவெளியில் வைத்தாலும் தவறில்லை.

ஆனால் இங்கு வன்மத்தை காட்ட மனிதர்கள் எடுக்கும் ஆயுதமே ஒழுக்கம் மட்டும் தான்.  அதற்காக கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல் பொய் பகட்டோடு வன்மத்தை தெறிக்கவிட்டீர்கள்னா அது பல்கி பெருகி அந்த அவப்பெயர் வெவ்வேறு மனிதர்கள் மூலம் வெவ்வேறு ரூபங்கள் எடுக்கும். அவர்களோடு பழகுபவர்கள் கூட எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனேயே பழகும் அவலம் ஏற்படும். இல்லாததை சொல்வது தான் அபத்தம்.‌இருப்பதை சொல்லுதல் அபத்தமாகாது.

தவறே செய்யாத திடமுள்ள மனது இதை அப்படி இப்படி என்று தூசு தட்டுவதைப் போல தட்டிவிட்டு போய்விடும். தவறு செய்பவனும் பெரும்பாலும் அதை பற்றி கவலையுறுவதில்லை. பெரும்பாலும் ஆண்களுக்கு அதற்கான புறவெளிகளும் திடமும் உண்டு. ஏன்னா அவங்க பொருளாதார ரீதியாகவும் வெளி உலக பிரச்சினைகள் பலவற்றையும் அசால்ட்டாக சமாளித்து வெளி வந்திருப்பார்கள்.

ஒழுக்கத்தில் முன்ன பின்ன இருக்கும் ஆண்களை தான் பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும். குண்டலகேசி, நீலகேசி போன்ற கதைகள் மட்டுமல்ல பற்பல சினிமாக்கதைகளும் நிதர்சனங்களும் அதை தான் ஊர்ஜிதப்படுத்துகின்றன. 

ஒரு பெண் கிட்ட போய் அந்த ஆண் மோசமானவனு சொல்லி பாருங்கள். அவள் அவன்பால் ஈர்க்கப்படுகிறாள். இது பெண்ணின் உளவியல். பெண்ணுக்கு தன்னை கொண்டாடும் ஆண் தான் தேவை. அவன் நல்லவனா என்பது எல்லாம் அவளுக்கு தேவைப்படுவதில்லை.

ஆனால் ஆண் அப்படியல்ல அவன் ஒழுக்கமான பெண்ணை தேடித் தேடி தான் ஓய்வான். 

ஆக ஒரு ஆணின் மீது அவப்பெயரை ஏற்படுத்துவதும் பெண்ணின் மீது ஏற்படுத்துவதும் ஒன்றல்ல. 

ஆனால் வீட்டிற்குள்ளே உழலும் பெண்கள் அதிலும் நாலு சுவற்றிற்குள்ளேயே உள்ள பெண்களை, பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற பெண்களை, பிறரை அண்டி வாழும் நிலையில் இருக்கும் பெண்களை, புற உலக அனுபவம் குறைந்த பெண்களை தவறானவளாக சோஷியல் மீடியாவில் சித்தரிக்கும் போது அவள் அதை எதிர்க்கொள்ள இயலாமல் தடுமாறுகிறாள். அதிலும் குடும்ப அனுசரணை இல்லாத பெண்கள் தற்கொலைக்கு செல்லும் அளவு மன அழுத்தம் ஏற்பட்டு மனநோயாளி ஆவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். 

ஒழுக்கத்தை இந்த சமூகம் ஆண்களிடம் எதிர்பார்ப்பதில்லை. நான் அப்படி தான்டி வெண்ணை மவளே என்று அசால்ட்டாக தெனாவட்டாக சொல்லிவிட்டு கடந்து போய்விடுவான். ஏன்னா இங்கே ஒழுக்கம் எல்லாம் சமுதாயம் எதிர்பார்ப்பது பெண்ணிடம் மட்டும் தானே. 

ஆக நிஜ உலகில் இருவர் பேசிக் கொள்வது சம்பந்தப்பட்டவர் காதுகளுக்கு கூட எட்டாமல் போகலாம். ஆனால் சோஷியல் மீடியாவில் நீங்கள் ஒருவரை பற்றி பேசுவது பூதாகரமாகி சம்பந்தப்பட்டவருக்கே சென்று சேர்ந்து அவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும்.

சோஷியல் மீடியாக்கள் ஒரு வகையில் செய்தித்தாள்கள்‌ மற்றும் செய்தி சேனல்கள் போன்றவை. 

இங்கு கடுகை போட்டால் அது மலையாக்கிவிடுவார்கள். 

ஆக பதிவிடும் கடுகை நல்ல எண்ணத்தோடு நல்ல வார்த்தைகளோடு பதிவிடுங்கள்.

எழுத்து சுட வேண்டிய அவசியமில்லை. மயிலிறகாய் வருடிக் கொடுக்கட்டும். 

ஏன்னா உடல், உணர்வு, உயிர் என்று எதையும் அழிப்பது எளிது. உருவாக்குவது தான் கடினம்.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 19 Online பொறுக்கிகள்


சருகுகளின் சபலங்கள்

பகுதி - 19

Online பொறுக்கிகள்

சமூக‌ வலைதளங்களில் inboxஐ நோக்கி படையெடுக்கும் ஆண்களை தான் பொறுக்கி என்று முத்திரை குத்தி ssகள் பகிரப்படுகின்றன. 

உதாரணத்திற்கு hi hello sapitiya போன்ற உப்பு சப்பற்ற conversation செய்பவர்களையும் நேரடியாக hi sexy, beauty, do you like sex போன்ற சாட் செய்பவர்களையும் கண்டு எரிச்சலைடைந்து ப்ளாக் செய்துவிடுவதோ, ss போட்டுவிடுவதோ பெண்கள் சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் காணும் உண்மை. 

கொஞ்சம் யோசித்து பார்த்தோம்னா தத்திங்க அல்லது பெண்களை கரெக்ட் பண்ண தெரியாத பொறுக்கிகள் தான் இது போன்ற உத்திகளை பயன்படுத்தி பெண்களிடம் செருப்படி வாங்குவது. 

ஆனால் இங்கு இருக்கும் intellectual பொறுக்கிகளிடம் தான் பெண்கள் சிக்கி சின்னாபின்னமாகி வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்றால் மிகையாகாது. இந்த intellectual பொறுக்கிகளை எப்படி கையாள்வது என்பதை பற்றி பெரும்பாலான பெண்களுக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது.


இந்த intellectual பொறுக்கிகள் மிகவும் திறமைசாலிகள். இங்கு இவர்கள் வருவதே பெண்களை வேட்டையாட மட்டுமே என்பதை பெண்கள் அவ்வளவு எளிதில் உணரவே முடியாது. ஏன் என்றால் இவர்கள் ஏமாற்றுவதற்கான அடித்தளமே பெண்கள் இவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை சும்மா வந்துவிடுவதில்லை. இவர்களின் புத்திசாலித்தனத்தினால் உருவாக்கப்படுகின்றது.

பெண்கள் என்றால் எல்லா பெண்களையும் இவர்கள் வேட்டையாடுவதில்லை. எந்த பெண்ணை வீழ்த்தினால் பின்னாடி பிரச்சினை ஏற்படுமோ அந்த பெண்களை இவர்கள் மரியாதையான நட்பு பட்டியலில் வைத்துவிடுவார்கள்.‌ அவர்களை எந்த காரணம் கொண்டும் sexual trap செய்ய முயலமாட்டார்கள். ஆனால் எல்லோரிடமும் ஒரு சகஜமான நட்பு பேணும் ரீதியாகவும் வீழ்த்தும் பின்னூட்டங்களையும் எழுதுவார்கள். ஆக அவன் என்னை பின்னூட்டத்தில் தவிர்த்து வேறு எங்கேயும் இடைஞ்சல் தருவதில்லை என்ற நம்பிக்கையையும் நல்ல எண்ணத்தை உருவாக்கிவிடுதல் இவர்கள் குறிக்கோள்.

முக்கியமாக அரைவேக்காட்டு பெண்ணியவாதிகளும், சமூக விழிப்புணர்வு அற்ற குழப்பநிலை கொண்ட பெண்களும் தான் இவர்களுடைய எளிதான டார்கெட். எவள் எதிர்த்தால் யாரும் அவள் பக்கம் வந்து குரல் கொடுக்கமாட்டார்களோ, எவளை ஏமாற்றினால் வெளியே சொல்ல அவமானத்திற்கு பயந்து காணாமல் போய்விடுவாளோ அவர்கள் தான் இவன்கள் டார்கெட். வாழ்க்கையில் தொடர்வலிகளில் வாழ்ந்து வரும் பெண்கள் இவன்கள் வலைகளில் எளிதில் விழுந்துவிடுவார்கள். இவன்கள் அவள்களை நேசிக்கும் போது காண்பிக்கும் முகமூடி வேறு. நிராகரிக்கும் போது காண்பிக்கும் முகம் வேறு. 

ஆரம்பத்தில் தேவதை என்பதும் பிற்பாடு பயன்படுத்தி அலுத்து போய் தூக்கி எறிய முற்படும்போது தே*டியா என்று வார்த்தைகளால் சல்லடையாக்கி அனுப்புவதும் இவர்கள் சாமர்த்தியசாலிகள்.

அதாவது ஏற்கனவே மோசமான குடும்ப சூழல், பக்கபலமற்றவர்கள், அன்புக்கு ஏங்கி சாகும் பெண்கள் தான் இவர்கள் ஏமாற்றும் கோட்டுக்குள் வந்துவிடுவார்கள். Sometimes நன்றாக சம்பாதிக்கும் கணவர்கள் வைத்திருக்கும் மனைவிகளும் கூட இதில் வந்துவிடுவார்கள். நீங்க திருமணம் தாண்டிய காதலில் ஈடுபடும் பெண்களை மட்டும் தானே செ*ருப்பை கழட்டி அடிப்பீங்க. Psycho, toxic, possessiveness பட்டம் சூட்டி அழகு பார்ப்பீங்க. மாறாக அப்படி செய்யும் ஆண்களுக்காக வரிசையில் நட்பிற்காக கேடுகெட்டு காத்திருப்பீர்கள். அவன்களை ஒற்றை வார்த்தையாவது நாக்கை பிடுங்குமாறு கேள்வி கேட்பதற்கு இங்கு எந்த பெண்ணியவாதிக்கும் தைரியம் இல்லை. மாறாக கேட்பவளை அவமானப்படுத்தி அவளுக்கு தே*டியா பட்டம் அளித்து மூலையில் உட்கார வைக்கும் மூளைக்கார பெண்கள் உள்ள கிரிஞ்ச் உலகம் தானே இது.


ஏற்கனவே சந்தோஷமான வாழ்க்கையை வாழும் பெண்கள் மனோதிடம் உடையவர்களாகவே இருப்பதால் அந்த பெண்களிடம் பின்னூட்டத்தில் விளையாட்டாக கிண்டலடிக்கும் பின்னூட்டங்கள் மூலமும், இவர் எல்லாரிடமும் விளையாட்டாய் ஹாஸ்ய உணர்வோடு தான் விளையாடுகிறார், மத்தபடி இன்பாக்ஸ் பக்கம் வந்ததே இல்லை என்ற நம்பிக்கையை முதலில் ஊட்டுவது தான் இவர்களில் முதலீடு. பெண்கள் ஏதாவது சாதிக்கும் பதிவுகளில், பிறந்தநாள் பதிவுகளில் எல்லாம் முதலாக இருப்பர். அறிமுகமற்ற பெண்கள் துவளும்போது கை கொடுக்கும் தோழனாக ஒரு பிம்பம் ஏற்படுத்துவார்கள்.  

இவர்கள் சமூக வலைதளங்களில் இவர்களை பற்றி உருவாக்கும் பிம்பங்கள். 

1. அவ்வளவு எளிதில் பெண்களோடு இவர்கள் இன்பாக்ஸில் உரையாடுவதில்லை. (இந்த கீரை முண்டைகளை கமெண்டுகளிலேயே படிய வைத்துவிடலாம் என்ற எண்ணம் இருக்கையில் இன்பாக்ஸ் எதற்கு. அது தானே போய் இவன்கள் மடியில் விழும் பெண்களுக்கான வரவேற்பரை ஆயிற்றே).

2. பெண்களுக்கு பொதுவாக எப்படிபட்ட ஆண்களை பிடிக்கும். தகுதி உடைய ஆண்களை பிடிக்கும். இவர்கள் நிச்சயம் தகுதி வாய்ந்தவர்களாக திறமைமிக்கவர்களாக இருப்பார்கள். அந்த தகுதிக்காகவே பெண்கள் பின்னே செல்வார்கள். உதாரணத்திற்கு வைரமுத்து போன்றவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தும் அவர்கள் கவிதைக்கான அவரை தூக்கி வைத்து கொண்டாடுவதில்லையா. அது போல.

3. பெண்களிடம் தனியாக இன்பாக்ஸிலோ, அல்லது நேரில் சந்தித்து பேசுகையிலோ இருவருக்கும் பொதுவான கருத்தை அளவளாவுதல். நிச்சயம் நடுவில் நடுவில் மானே, தேனே போன்று அவர்களை வீழ்த்தும் மந்திரங்களும் வார்த்தைகளும் கண்டிப்பாக இடம்பெறும். மெதுமெதுவாக வீழ்த்தப்படுவதை பெண்கள் உணர்வதேயில்லை அல்லது ஒரு ஆண் தன்னை வீழ்த்துவதை அவர்கள் மனம் விருப்பத்தின் செய்கிறது.

4. நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மகனாக, நல்ல குடும்பஸ்தனான பிம்பங்கள் இவர்கள் மீது பெரும் மதிப்பை உருவாக்கும்.‌

5. சிரிக்க வைக்கும் உணர்வோடு இவர்கள் உரையாடல் பெரும்பாலும் இருக்கும். ஆண் பெண் பாலின பேதமின்றி இவர்களோடு உரையாட ஆசைப்படும் உத்திகளை கையாள்வார்கள். அதெல்லாம் நீங்கள் அலுத்துக் போகும் வரை மட்டுமே. இவர்களுக்கு அலுத்துக் போகாதவாறு பார்த்துக் கொள்வது மிகக் கடினம். ஏன் என்றால் வேட்டை நா*மக்களின் கண்கள் எப்போதும் புதிது புதிதாய் வேட்டையாடுவதிலேயே குறியாயிருக்கும். எதிலும் நெடுங்காலம் திருப்தியுற மாட்டார்கள் இவர்கள்.

6. இவர்கள் எல்லா பெண்களையும் பழகும் வட்டத்திற்குள் கொண்டு வந்த பின் ஒருமையில் அழைப்பதும் பெயரை செல்லமாக அழைப்பதையும் பெண்களே விரும்பும் வண்ணம், எதிர்ப்பு தெரிவிக்காதவண்ணம் அவர்கள் பெண்கள் தங்களை நோக்கி நகர வைக்கும் வண்ணம் ஒரு ஆல்பா ஆணாக காட்சியளிப்பார்கள். 

இந்த பிம்பங்கள் ஓரிரு நாட்களில் அவர்கள் கட்டமைப்பதில்லை‌. பற்பல வருடங்களாக இதுவே அவர்கள் மேனரிசமாக மாறிப் போயிருக்கும். திருத்தவே முடியாது. தவறு என்று உணர்ந்தால் தானே திருந்துவதற்கு.

7. சமூக கட்டுப்பாடுகளுக்கும், ஒழுக்க நெறிகளை பின்பற்றும் பெண்களை இவர்கள் மரியாதையாகவே நடத்துவார்கள். 

8. இவர்கள் பத்து, பனிரெண்டு வருட பதிவுகளும் பின்னூட்டங்களும் அந்த பெண்களிடையே சென்று இவர் இட்ட பின்னூட்டங்களையும் அலசி ஆராய்ந்தால் நட்பு பட்டியலில் இவர்கள் வைத்திருக்கும் பெண்கள் நீண்ட காலமும், இவர்கள் உடலால் பயன்படுத்திய பெண்கள் காணாமலும் சென்றிருப்பார்கள். ஒரு உறவை போற போக்கில் பல வருடங்கள் காத்திருந்து பயன்படுத்தும் இவன்கள் அதை கழட்டிவிட்டுகையில் நேரம் எடுத்துக் கொள்வதில்லை. எமோஷனல் அபியூஸ் செய்து அந்த பெண்களையே குற்றம் சாட்டி ஓட வைக்கும் கில்லாடிகள்.

9. ஒரு உறவில் சேர்த்துக் கொள்ளும் போது அந்த பெண்களின் சின்ன சின்ன திறமைகளை பாராட்டி சீராட்டி கிடந்த இவர்கள் அந்த பெண்ணுடனான லௌகீக வாழ்க்கை அலுத்துப் போன பின் குறைகளை தேடி தேடி குற்றம் காண்பதும், அவர்களோடு பழகிய போது ஒப்புவித்த அந்தரங்க விஷயங்களையும், அவள்கள் பகிர்ந்த அவளது எதிரிகளோடும் சேர்ந்துக் கொண்டு கூத்தடித்துக் கொண்டு emotional imbalanceற்கு இவர்களை ஆட்படுத்துவார்கள். அதாவது மனப்பிறழ்வு ஏற்படும் நிலை.‌ சின்ன சின்ன விஷயத்துக்கு கூட சப்போர்ட் பண்ணி உனக்கு நான் இருக்கேன், கவலைப்படாதே என்று தோள் கொடுத்த இவன்கள் பெரும் துயரிலும் ஈவு இரக்கமற்று இருப்பான்கள். அசிங்கமான வார்த்தைகளால் அவர்களை திட்டி வதை செய்வார்கள். அவர்கள் தன்னம்பிக்கையை உடைத்து போடுவார்கள். 

உடல் சுகத்திற்காக அந்த பெண்களை தேடி தேடி வேட்டையாடிய பின்பு விலக நினைக்கையில் தயவு தாட்சண்யமின்றி ஒரு மிருகத்தின் சாயலில் நடந்துக் கொள்வார்கள். 

உனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கானு அவமானப்படுத்துவார்கள். பேசுவதற்கான வாய்ப்பே வழங்கிடமாட்டார்கள். அப்படி பேசினாலும் அவர்கள் தவறுகளை பற்றி கேள்வி கேட்கவே விடாமல் உங்களை அவமானப்படுத்தும் வார்த்தைகளும் உங்களை ஒரு தே*டியா என்றும் சொல்ல தயங்குவதில்லை. மற்றவர்களிடம் அந்த பெண்களே இவர்கள் கைப்பிடித்து இழுப்பதாய், இழுத்ததாய் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் போய் சொல்வதில் சாமர்த்தியசாலிகள்.

என்ன பிரச்சினை என்றால் இந்த emotional traumaவில் பெண்கள் விழுந்து எழுவதற்குள் செத்து பிழைக்க வேண்டும். இவன்கள் தேவைகள் தான் அங்கு முடிந்துவிட்டனவே. 

10. அதிலும் அம்மா பாசத்திற்கு ஏங்கும் ஆண்களிடம் சற்று ஜாக்கிரதையாகவே இருங்கள். ஒவ்வொரு பெண்ணின் காலுக்கு இடையில் தான் இவர்கள் அம்மா பாசத்தை தேடிக் கொண்டிருப்பார்கள்.

சிங்கமாவது ஒரு நேரத்தில் ஒரு புள்ளிமானை தான் வேட்டையாடும். இவன்கள் ஒரே நேரத்தில் பல பெண்களை வேட்டையாடுவதில் கில்லாடிகள்.  

இவன்கள் பாவ புண்ணியத்தை பற்றி எல்லாம் பெரிதும் நினைப்பதில்லை. ஆனால் ஏமாற்றுவதில் கில்லாடிகளான இவர்கள், பேச்சில் வல்லவர்களாக இருப்பர். இவர்களை எத்தனை பலமான மனோதிடம் உள்ளவள்களாலும் எதுவும் செய்திட முடியாது. 

மாட்டிக் கொள்ளாதவாறு தவறு செய்வதில் born criminalகளை ஒன்றுமே செய்திட முடியாது.

இவன்கள் அரிப்புக்கு பல பெண்கள் பலியானாலும் அவள்களால் வாய் திறந்து கத்தி அழக் கூட முடியாது. ஏன்னா சமூகம் அவற்றை மட்டுமே பழி சொல்லும் திறன் பெற்றது.

ஏன் தெரியுமா? ஏமாந்து போய் விரக்தி அடைந்து எதிர்த்து பேச வாய் திறக்கும் பெண்களை, அடுத்ததாக அவனிடம் ஏமாற இருக்கும் பெண்களும், நட்பு ரீதியாக மட்டுமே அவன்களுடன் பழகும் பெண்களும் சேர்ந்து வார்த்தைகளால் சல்லடையாக்கி விடுவதன் காரணமாக யாராலும் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது.

 Playboy பிம்பங்கள் மீது காதலும் நேசமும் தோன்றும்வரை துன்பக் கடலில் மூழ்கும் பெண்களை யாராலும் காப்பாற்றிவிட முடியாது. 

இங்கு எவனும் திரௌபதியை காப்பாற்றிய கிருஷ்ணன் இல்லை என்ற தெளிவு இருந்தால் போதுமானது.  

எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. அந்த விலை உங்கள் உயிராகவோ, எதிர்கால வாழ்வாகவோ இல்லாதிருக்கட்டும்.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...