#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க
#pointsettia
#wild_pointsettia or #christmas_flower or #japanese_pointsettia
#Euphorbia_cyathophora_Murray or #Euphorbia_heterophylla
1.முதல் புகைப்படத்தில் இருக்கும் தாவரத்தை நான் 12th படிக்கும்போது எங்கள் வீட்டில் இருந்தது. ஒரு காய் வெடித்து நான்கு விதைகள் விழுந்து அப்படியே வெறித்தனமாக பல்கி பெருகும். கண்ணுக்கு விருந்தாகும். மலமிளக்கியாகவும் இதன் கீரையை சமைத்து தந்திருக்கிறார் என்னோட அம்மா.
2.இரண்டாவது மற்றும் மூன்றாவது புகைப்படத்தில் இருக்கும் செடியை நர்சரியில் Christmas flower என்று அழைக்கப்படும் poinsettiaவை பார்த்த போது எங்கள் வீட்டில் அப்போது வளர்ந்திருந்த பால்பெருக்கி(wild poinsettia) நியாபகம் வந்தது.
சரி அதே மாதிரி கொஞ்சம் வித்தியாசமா அழகாக பெரிய பெரிய இலைகளோடு இருக்கின்றதே என்று கேட்டபோது 350ரூபாய் என்றார்கள். அடேய் காட்டுல வளர்ற செடிக்கு இம்புட்டு அலப்பறையா என்று நினைத்தேன். ஆனாலும் Christmas flower or pointsettia 100 நிறங்களில் கிடைக்கின்றது. இந்தியாவில் சிவப்பு மற்றும் ரோஜா வண்ணத்தில் மட்டுமே கிடைக்கின்றது.. ஆனால் பல வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.
3.நான்காவது மற்றும் ஐந்தாவது புகைப்படம் japanese pointsettia or Devils backbone என்று மற்றொரு பெயரும் உள்ளது இதற்கு. நிறைய இடங்களில் அழகுக்காக வைத்திருப்பார்கள். நிழலில் பச்சைப் பசேல் என்றும் வெயிலில் இலைகள் அற்று சிவப்பு கிளிமூக்கு போன்று இலைகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.
இவை அனைத்தும் euphorbiacea familyயை சார்ந்தது.
இணையத்தகவல்:
#பால்பெருக்கி இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கள்ளி குடும்ப தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ நாட்டின் பகுதியாகும். மேலும் கலிபோர்னியா, டெக்சஸ், மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. பருத்தி உற்பத்தி சாகுபடிகளின் ஊடாக களை போல் வளரும் தன்மை கொண்ட இத்தாவரம் தாய்லாந்து, இந்தியாவில் பல பகுதிகளில் அலங்கார தாவரமாக தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது.
சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் தாமாக வளரும் தன்மைகொண்ட இத்தாவரம் 30 செமீ, முதல் 70 செமீ வரை உயரம் கொண்டதாக உள்ளது.
#தித்திலிப்பூ அழகு வண்ணம் கொண்டதால் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது; புண்களை ஆற்றும் மருத்துவக் குணமும் இதற்கு உண்டு.
Internet source:
Euphorbia cyathophora, known by various names including dwarf poinsettia, fire-on-the-mountain, and paintedleaf, is native to North and South America and naturalized elsewhere. They belong to the Cyathium type of inflorescence. Here, the inflorescence axis is convex in shape.
The dwarf poinsettia has green stems and alternate lobed leaves, the uppermost with irregular red blotches near the base. The terminal flowers are yellowish with 1-2 small glands or nectaries.
Fire-on-the-mountain is a member of the spurge family (family Euphorbiaceae). Spurges are commonly herbs, with milky sap; in the tropics also includes shrubs or trees. There are about 290 genera and 7,500 species, mostly of warm or hot regions. Among the valuable products of the family are rubber, castor and tung oils, and tapioca. Most members of the family are poisonous, and their milky sap will irritate the membranes of the eyes and mouth.
Arumai ji
பதிலளிநீக்கு