சிலர் அழகுக்காகவும், சிலர் அதன் மூலம் பயன் பெறவும் செடி, கொடி, மரங்களை வளர்க்கின்றோம்.
நான் எல்லாம் முதலில் ஆசைகளுக்காக பற்பல செடிகளை வைத்து ஆசை தீர ரசித்துவிட்டு பிறகு பயன்பாட்டிற்காக செடிகளை வைக்க ஆரம்பித்தவள்.
செடி, விதைகளை காசு கொடுத்து வாங்கி வைப்பதை விட நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்தே விதைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
நீங்கள் வாங்கும் புதினாவில் கீரையை மட்டும் கிள்ளிவிட்டு பார்த்தால் அதில் சிறு சிறு வேர்கள் முளைத்திருக்கும். அந்த காம்பை நீள் வாக்கில் மண்ணில் புதைத்தீர்களானால் அதிலிருந்து புதினா முளைத்திட ஆரம்பிக்கும். தேவையான பொழுது கீரையை மட்டும் கிள்ளிக் கொள்ளலாம். இதற்கு என்று தனி தொட்டி கூட வேண்டியதில்லை. பூச்சி அடிக்கும் செடிகளோடு இந்த தண்டுகளை நட்டு வைத்தால் புதினா முளைக்க முளைக்க அந்த செடிகளில் பூச்சி அடிக்காது.
புதினாவின் மருத்துவ பயன்கள்:
1. சளி, கப கோளாறுகளுக்கு புதினா ஒரு நல்ல மருந்து.
2. புத்துணர்ச்சியை கொடுக்கும்.
3. உடல் சூட்டைத் தணிக்கும்.
4. மூட்டுவலியை கட்டுப்படுத்தும்.
5. இதை அரைத்து பற்று போட்டால் தலைவலி குணமாகும், தொண்டைப்புண் குணமாகும்.
சமையலில் புதினா:
1. தேனீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
2. பிரியாணியில் சேர்க்கலாம்.
3. துவையல் அரைத்தும் சாப்பிடலாம்.
4. குளிர்பானத்தில் கலந்து குடிக்கலாம்.
இன்னும் பல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக