வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

செடிகள்_வளர்க்கலாம்_வாங்க - பகுதி 15

#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க

மணத்தக்காளி கீரை

பகுதி 15

#மணத்தக்காளி_கீரை
#black_night_shade

இது செடியாக(herbs) மட்டுமே வளரக் கூடியது.

இதன் பூர்வீகம் Eurasia.  ஆனால் காடு மேடுகளில் தானாகவே முளைத்திருக்கும்.

மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, சுக்குட்டிக் கீரை, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.

இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள்.

ஓராண்டு தாவரம்.

பயன்கள்: 

1. உடலுக்கு குளிர்ச்சி தரும்.
2. வாய்ப்புண், வயிற்றுப்புண் போக்கும்.
3. வாயில் புண் இருந்தால் நான்கு இலையை பறித்து வெறும் வயிற்றில் மென்று தின்றால் போதும். இரண்டு நாட்களில் வாய்ப்புண் காணாமல் போகும்.
4. அல்சர் உள்ளவர்கள் இந்த கீரையை கூட்டு செய்து சாப்பிடலாம்.
5. சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை உள்ளவர்கள் இதில் சூப் செய்தும் சாப்பிடலாம்.
6. சிறு சிறு தக்காளிப் போல இருக்கும் இந்த பழத்தை அப்படியே பறித்தும் சாப்பிடலாம். 
7. இதன் பழத்தை காய வைத்து வத்தக்குழம்பில், மொச்சக்கொட்டை குழம்பில் இடித்து தாளித்து போட்டு சாப்பிட்டால் திவ்யமாக இருக்கும்.
8. இதன் பழத்தை காயவைத்து வைத்தால் விதையாக பயன்படுத்தலாம்.
9.சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும்.
10.  நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது.
11.  கர்ப்பிணி பெண்கள் இதை குறைவாக பயன்படுத்தலாம்.

சமையலில்:
1. கீரையை துவையலாக அரைத்து உண்ணலாம்.
2. கீரை கூட்டு
3. சாம்பாரில் தாளித்து போடலாம்.
4. பொரியல் செய்யலாம்.
5. இதன் பழங்களை காய் வைத்து வத்தக் குழம்பில், கார்க் குழம்பில் சேர்த்து சமைக்கலாம்.

இந்த கீரையை பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் பின்னூட்டத்தில் பகிரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...