ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

செடிகள் வளர்க்கலாம்‌ வாங்க - பகுதி 16


#Mother_of_thousand_plant

#கட்டிப்_போட்டால்_குட்டி_போடும் அல்லது #ஆயிரம்_ஆலைகளின்_செடி

Devils backbone, mother of thousands or millions, alligator plant என்று விதவிதமாக அழைக்கப்படும் இந்த தாவரம் ஒரு குற்றுச்செடி. மடகாஸ்கர் இதன் பூர்வீகம். Botanical name: Bryophyllum daigremontianum.

இது முழுக்க முழுக்க poisonous plant. இது வெறும் அழகுக்கு மட்டும் தான். வெயில் தாங்க கூடியது. கட்டி போட்டால் குட்டி போடும் செடிகளில் இன்னும்‌ நிறைய வகை உண்டு. ரணகள்ளியும் இதன் வகையறா தான்.

மேலே இருக்கும் அதன் சிறு சிறு இலைகள் உதிர்ந்து தானாக முளைக்க கூடியது. வேண்டுமென்றால் நாமும் உதிர்த்துவிடலாம். 

மண் உலர்மண்ணாக இருத்தல் நலம்.

பக்கத்தில் வைக்கும் தொட்டி முழுக்க இதன் குட்டிகள் நான். தொட்டாச்சிணுங்கியை போல பொழுதை கழிக்க இதன் இலை குட்டிகளை தொட்டு உதிர்த்து விளையாடுவது என்‌ பொழுதுபோக்கில் ஒன்று. 

செல்லப்பிராணிகள், குழந்தைகள் இதனை உட்கொள்ளாமல் இருத்தல் நலம். 

பால் வரும் அத்தனை செடிகளுமே ஒருவித விஷத்தன்மை உடையது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...