சருகுகளின் சபலங்கள்
பகுதி - 22
தலைப்பு: மனநலம் காப்போம்.
எல்லாரும் நினைக்கிறா மாதிரி மன அழுத்தம் சாதாரண விஷயமல்ல.
மன அழுத்தத்திற்கான காரணிகளாக பொருளாதார ஸ்திரமின்மை, காதல் தோல்வி, உறவுகளின் பிரிவு, நம்பிக்கை துரோகங்கள், ஏமாற்றப்படுதல் இப்படி எதுவாக வேண்டுமானால் இருக்கலாம்.
மன அழுத்தம் ஏற்பட்ட மனம் நாளாக நாளாக தற்கொலையை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் மட்டுமே அதிகம்.
அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு எப்போதும் போல ஒரு வாழ்வை வாழ்வது என்பது சுலபமானதும் அல்ல.
அதிலும் தன்னம்பிக்கை உடைந்த மனதை சரி செய்து பழைய படி வாழ்வதற்கும், வேலைக்கு செல்வதற்கும் பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியதிருக்கும்.
தற்போதெல்லாம் மன நலம் கெட்டு போக வேறெங்கும் செல்ல வேண்டாம். சோஷியல் மீடியாவில் புழங்கினாலே போதுமானதாக இருக்கின்றது.
ஒரு காலத்தில் மக்களை மக்கள் பார்த்துக் கொள்வதும் அரிது. பார்த்துக் கொண்டாலும் இத்தனை அளவளாவது குறைவு.
மனநலம் கெட்டால் உடல் நலமும் குன்றிப் போய்விடும்.
ஒருத்தனுக்கு விபத்து ஏற்படுத்துனா அது வெளியே தெரியும். அதற்கேற்றவாறு மருந்தும் அனுசரணையும் தந்து தேத்திவிட முடியும். மனதில் ஏற்படும் விபத்து அதாவது மன அழுத்தமானது வெளியே தெரியவே தெரியாது.
இரண்டுமே காயங்கள் தான் புற காயங்களுக்கு எப்படி மருந்து உட்கொள்கிறோமோ அது அளவு அகத்தின் காயங்களுக்கும் மருந்தும் அனுசரணையும் ஆறுதலான வார்த்தைகளும் தேவை.
அது தேர்வின் தோல்வியாக இருக்கலாம், வேலையில்லா திண்டாட்டமாக இருக்கலாம், பண நெருக்கடியாக இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்துக் கொள்பவர்கள் அந்த நொடியில் அந்த முடிவெடுத்து விடுவதில்லை.
மன அழுத்தங்கள் நெடுங்காலமாகவே அவர்கள் மனதை அரித்துத் தின்றுக் கொண்டிருக்கும். மன அழுத்தம் அதீதமாகி மைண்ட் ப்ளாக் கண்டிஷன் ஏற்படுகையில் இதை தவற வேறு வழி தென்படுவதில்லை அவர்களுக்கு என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அதீத மன அழுத்தம் காதலையோ காமத்தையோ கூட தேடாது. அப்ப தான் கவலையா இருக்கிற அவங்க கிட்ட போய் sex chatற்கோ wet chatற்கோ அழைப்பவர்களும் உண்டு. நான் நல்ல மனநிலையில் இல்லை என்றால் உன்னை கூல் பண்ண தான் உன்ன பண்ண கூப்பிடுகிறன் என்பார்கள்.
பொருளாதார ரீதியாக சிக்கி சின்னபின்னமாகி கொண்டிருக்கும் ஆணிடம் சென்று காமத்தை நோக்கி காத்திருக்கும் மனைவியருக்கு கிடைக்கும் பொல்லா வார்த்தைகளுக்கு பல சமயம் காரணம் கூட இதே. அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான். அதை குறைக்க பொருளாதார ரீதியாக எதாவது முன்னேற உதவலாம். அதை விட்டுட்டு என்னை எதுவும் செய்யவே மாட்டேன்கிறான் என்று மூன்றாம் தர ஆண்களிடம் சென்று சிக்கி சீரழியும் பெண்கள் அதிகமாகி வருகிறார்கள்.
ஆக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு பிதற்றுபவர்களை நீ என்ன மனநோயாளியா என்று கேட்டு ஒதுக்கி வைக்காமல் அவர்களுக்கான ஆறுதலையும் மருந்துகளையும் உட்கொள்ள செய்தல் மட்டுமே மனஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
மனநல மருத்துவமனை பெருகிவிட்டது. ஒரு காலத்தில் மனநல பிரச்சினை என்று அறியாமல் பில்லி, சூனியம், பேயோட்டுதல், சாமியாடுதல் போன்ற நிகழ்வுகளை நாம் காண முடியும். அத்தனையும் மனநலம் சார்ந்த பிரச்சினையின் விளைவே. என்ன அந்த காலத்தில் மன நலம் சார்ந்த பிரச்சினைகளை பற்றி அறிவதற்கான புற வெளி இல்லை.
ஆனால் இக்காலத்தில் மனநலமே உடல்நலம். ஆக உடலை பேணும் அளவிற்கு மனதையும் பேணி உடல் உள்ள ஆரோக்யம் காக்க வேண்டியது அவசியமாகிறது.
மனநலம் குறைய குறைய மக்களுக்குள் வன்மங்களும், காழ்ப்புணர்ச்சியும், துவேஷங்களும் அதிகரிக்கும்.அது அதிகரிக்க அதிகரிக்க ஒருவரை ஒருவர் கத்தியின்றி ரத்தமின்றி வார்த்தைகளாலும் புரளிகளாலுமே வெட்டிக் கொண்டு மனநலம் குன்றிய சாய்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக