ஞாயிறு, 21 மே, 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 21 தலைப்பு: உறவுகள் உடைபடும் காலமிது

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 21

தலைப்பு: உறவுகள் உடைபடும் காலமிது

இப்போது எல்லாம் உறவுகளுக்கிடையே சகிப்புத்தன்மை குறைந்து காணப்படுகிறது. எவரும் எவரோடும் அனுசரித்து வாழ தயாராகவே இல்லை.  அப்படி அனுசரித்து வாழ தயாராக இருப்பவரின் உணர்வுகள் emotional abuseற்கு ஆளாக்கப்படுகின்றது என்றால் மிகையாகா.

முக்கியமாக திருமணம், காதல் போன்ற intimacyயான வாழ்விற்கு முக்கிய தேவை ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துக் கொள்ளுதல். இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டாலும் ஒருவருடைய wavelength மற்றவரோடு ஒத்து போகவில்லை என்றால் அந்த உறவுக்கு ஆயுள் குறைவு மட்டுமே.

ஒரு காலத்தில் ஆண் dominantஆக இருந்தான். பெண்ணும் ஆண் வெளியே சென்று வேலை செய்துவிட்டு வருகிறானே என்று அத்தனையும் பொறுத்து போனாள். அவனுக்கேற்றவாறு இல்லத்தை நிர்வகித்தாள். அத்தனையும் சீராகவே போய் கொண்டிருந்தது. அவள் விட்டுக் கொடுக்கிறாள், அனுசரித்து செல்கிறாள் என்பதை புரியாத ஆண் இனம் அவளை அவள் அன்பை இளக்காரமாக கருதி அடிமையாக நடத்த ஆரம்பித்ததின் விளைவு தான் தற்காலத்தில் உறவுகள் எளிதில் உடைபடுவது.  திருமணம் என்பது ஒரு வண்டியில் பூட்டிய இரு மாடுகள் கதை தான். இரண்டு மாடுகளும் ஒத்திசைந்து சீரான வேகத்தில் சென்றால் மட்டுமே வாழ்க்கை என்ற வண்டி கவிழாமல் இருக்கும். 

ஆணை பொருத்தவரை வெளியே வேலைக்கு சென்று வருவது மட்டுமே உழைப்பு. பெண் அத்தனை உழைப்பை போட்டாலும் வருமானம் வராத உழைப்பு என்பதால் அவள் சும்மா கிடப்பதாகவே நினைக்கிறான். ஏன்னா அவன் வீட்டில் இருக்கையில் என்ன செய்கிறான், சும்மா‌ தானே இருக்கிறான். ஆகையால் தான் வேலைக்கு செல்லாமல் அதிகாலையில் இருந்து இரவு வரை பெண் உழைக்கும் உழைப்பை வீட்டில் சும்மா தான் இருக்கேன் என்று பதத்திற்கு அவளை அவளே வெளியில் வீட்டில் சும்மா தான் இருக்கேன் என்று சொல்லும் அளவு இட்டு செல்கின்றான்.‌

பல காலமாக பெண் இனம் ஆண் இனத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அனுசரித்து சென்று கொண்டிருந்தது. எத்தனை காலம் அனுசரித்து செல்வது அத்தனையையும் என்று பெண் இனம் தன் சுயமரியாதையை, சம உரிமையை, தன் தேவைகளுக்கென்று முக்கியத்துவம் தர முடிவு செய்துவிட்டனர். 

பல காலமாக பெண் சமைத்து போட்டு, துணி துவைத்து போட்டு வீட்டை பராமரித்து, பிள்ளையை பெற்றுப் போட்டு வெளியே வேலைக்கு சென்று வரும் ஆணுக்கு சகலவிதத்திலும் தன்னை தியாகம் செய்துக் கொண்டிருந்த வரை எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்தது. 

தனக்கென்று ஆசா பாசங்கள் உண்டு, தன்னாலும் சம்பாதித்து தன்னந்தனியாக சுயமரியாதையோடு வாழ முடியும் என்ற எண்ணங்கள் பெருவாரியான பெண்களுக்கு துளிர்த்த பின் உறவுகளுக்கும் உணர்வுகளுக்குமான விதிகள் மாற்றம் கொண்டிருக்கின்றன.‌

இனி வாழ்க்கை எனும் வண்டி நிலைகுலையாமல் ஓடணும்னா ஆணும் அனுசரித்து வாழ தான் செய்ய வேண்டும். 

ஆக ஒரு தலைமுறையே அப்படியே தலைக்கீழாக மாற்றம் பெற்று கொண்டு இருக்கின்றது. பெண்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.‌ ஆக இனிமேலும் காதல் என்றும், கடவுள் என்றும், தியாகி என்றும் கொண்டாடி பெண்ணின் உழைப்பை, உடலை சுரண்டி வாழ முடியாது என்பதை ஆண்களும் புரிந்துக் கொள்ள வேண்டும். 

ஆக இனி காதல் அல்லது திருமணபந்தங்கள் நெடுங்காலம் நீட்டிக்க வேண்டும் என்றால் அம்மா மாதிரி பொண்ணு தேடாதீங்க. கிடைக்காது. ஏன்னா இன்றைய தலைமுறை பெண்கள் கலாச்சார மாற்றத்தில் அத்தனை வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறார்கள். 

நெடுங்காலம் அடைத்து வைத்திருந்த பறவை கூண்டிலிருந்து விடுபடுகையில் ஏற்படும் ஆர்பரிப்பைப் போல.‌ அவள் சுற்றி திரிய ஆசைப்படுகிறாள். சுதந்திரமாக திரிய ஆசைப்படுகிறாள்‌. கிடைத்த சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்போது அவள் எந்த எல்லைக்கும் சென்று காப்பாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறாள். 


இன்னமும் போய் அவளிடம் சென்று குடும்ப பொம்பிளைன்னா இப்படி தான் இருக்கணும் என்று வரைமுறை தீட்டினீர்கள் என்றால் போய்யா பூமர் அங்கிள்‌ என்று உறவுகளை அத்தனை சீரியசாக எடுத்துக் கொள்ள தயாராக இல்லாமல் உறவை அறுத்து எறிந்துவிட தனக்கேற்ற மற்றொரு துணையை தேர்ந்தெடுக்க அவள் தயாராகவே உள்ளாள்.

ஆக இத்தனை காலம் பெண்கள் அனுசரித்து ஆண்கள் சுகபோகமாய் வாழ்ந்து வந்தீர்கள். இனி ஆண்கள் அனுசரித்து மட்டுமே செல்ல வேண்டும். அது மட்டுமே உங்கள் கண் முன்னே இருக்கும் only choice.

அக்காலத்தில் கல்வி, வேலை என்று இயங்காத பெண்கள் தற்காலத்தில் அத்தனையிலும் சிறந்து விளங்குகிறாள். அதன் விளைவு சுயபுத்தியுடன் இருக்கும் பெண்ணை பழைய காலங்கள் போல நடத்த முற்படுகையில் ஏற்படும் கோளாறுகள் உறவும் பாலங்களை சல்லி சல்லியாக உடைக்கப்படுகின்றன.‌எதிர்காலத்தில் சிங்கிள் பேரண்ட்ஸ் அதிகரிப்பதை எவராலும் தடுக்க இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...