சருகுகளின் சபலங்கள்
பகுதி - 19
Online பொறுக்கிகள்
சமூக வலைதளங்களில் inboxஐ நோக்கி படையெடுக்கும் ஆண்களை தான் பொறுக்கி என்று முத்திரை குத்தி ssகள் பகிரப்படுகின்றன.
உதாரணத்திற்கு hi hello sapitiya போன்ற உப்பு சப்பற்ற conversation செய்பவர்களையும் நேரடியாக hi sexy, beauty, do you like sex போன்ற சாட் செய்பவர்களையும் கண்டு எரிச்சலைடைந்து ப்ளாக் செய்துவிடுவதோ, ss போட்டுவிடுவதோ பெண்கள் சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் காணும் உண்மை.
கொஞ்சம் யோசித்து பார்த்தோம்னா தத்திங்க அல்லது பெண்களை கரெக்ட் பண்ண தெரியாத பொறுக்கிகள் தான் இது போன்ற உத்திகளை பயன்படுத்தி பெண்களிடம் செருப்படி வாங்குவது.
ஆனால் இங்கு இருக்கும் intellectual பொறுக்கிகளிடம் தான் பெண்கள் சிக்கி சின்னாபின்னமாகி வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்றால் மிகையாகாது. இந்த intellectual பொறுக்கிகளை எப்படி கையாள்வது என்பதை பற்றி பெரும்பாலான பெண்களுக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது.
இந்த intellectual பொறுக்கிகள் மிகவும் திறமைசாலிகள். இங்கு இவர்கள் வருவதே பெண்களை வேட்டையாட மட்டுமே என்பதை பெண்கள் அவ்வளவு எளிதில் உணரவே முடியாது. ஏன் என்றால் இவர்கள் ஏமாற்றுவதற்கான அடித்தளமே பெண்கள் இவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை சும்மா வந்துவிடுவதில்லை. இவர்களின் புத்திசாலித்தனத்தினால் உருவாக்கப்படுகின்றது.
பெண்கள் என்றால் எல்லா பெண்களையும் இவர்கள் வேட்டையாடுவதில்லை. எந்த பெண்ணை வீழ்த்தினால் பின்னாடி பிரச்சினை ஏற்படுமோ அந்த பெண்களை இவர்கள் மரியாதையான நட்பு பட்டியலில் வைத்துவிடுவார்கள். அவர்களை எந்த காரணம் கொண்டும் sexual trap செய்ய முயலமாட்டார்கள். ஆனால் எல்லோரிடமும் ஒரு சகஜமான நட்பு பேணும் ரீதியாகவும் வீழ்த்தும் பின்னூட்டங்களையும் எழுதுவார்கள். ஆக அவன் என்னை பின்னூட்டத்தில் தவிர்த்து வேறு எங்கேயும் இடைஞ்சல் தருவதில்லை என்ற நம்பிக்கையையும் நல்ல எண்ணத்தை உருவாக்கிவிடுதல் இவர்கள் குறிக்கோள்.
முக்கியமாக அரைவேக்காட்டு பெண்ணியவாதிகளும், சமூக விழிப்புணர்வு அற்ற குழப்பநிலை கொண்ட பெண்களும் தான் இவர்களுடைய எளிதான டார்கெட். எவள் எதிர்த்தால் யாரும் அவள் பக்கம் வந்து குரல் கொடுக்கமாட்டார்களோ, எவளை ஏமாற்றினால் வெளியே சொல்ல அவமானத்திற்கு பயந்து காணாமல் போய்விடுவாளோ அவர்கள் தான் இவன்கள் டார்கெட். வாழ்க்கையில் தொடர்வலிகளில் வாழ்ந்து வரும் பெண்கள் இவன்கள் வலைகளில் எளிதில் விழுந்துவிடுவார்கள். இவன்கள் அவள்களை நேசிக்கும் போது காண்பிக்கும் முகமூடி வேறு. நிராகரிக்கும் போது காண்பிக்கும் முகம் வேறு.
ஆரம்பத்தில் தேவதை என்பதும் பிற்பாடு பயன்படுத்தி அலுத்து போய் தூக்கி எறிய முற்படும்போது தே*டியா என்று வார்த்தைகளால் சல்லடையாக்கி அனுப்புவதும் இவர்கள் சாமர்த்தியசாலிகள்.
அதாவது ஏற்கனவே மோசமான குடும்ப சூழல், பக்கபலமற்றவர்கள், அன்புக்கு ஏங்கி சாகும் பெண்கள் தான் இவர்கள் ஏமாற்றும் கோட்டுக்குள் வந்துவிடுவார்கள். Sometimes நன்றாக சம்பாதிக்கும் கணவர்கள் வைத்திருக்கும் மனைவிகளும் கூட இதில் வந்துவிடுவார்கள். நீங்க திருமணம் தாண்டிய காதலில் ஈடுபடும் பெண்களை மட்டும் தானே செ*ருப்பை கழட்டி அடிப்பீங்க. Psycho, toxic, possessiveness பட்டம் சூட்டி அழகு பார்ப்பீங்க. மாறாக அப்படி செய்யும் ஆண்களுக்காக வரிசையில் நட்பிற்காக கேடுகெட்டு காத்திருப்பீர்கள். அவன்களை ஒற்றை வார்த்தையாவது நாக்கை பிடுங்குமாறு கேள்வி கேட்பதற்கு இங்கு எந்த பெண்ணியவாதிக்கும் தைரியம் இல்லை. மாறாக கேட்பவளை அவமானப்படுத்தி அவளுக்கு தே*டியா பட்டம் அளித்து மூலையில் உட்கார வைக்கும் மூளைக்கார பெண்கள் உள்ள கிரிஞ்ச் உலகம் தானே இது.
ஏற்கனவே சந்தோஷமான வாழ்க்கையை வாழும் பெண்கள் மனோதிடம் உடையவர்களாகவே இருப்பதால் அந்த பெண்களிடம் பின்னூட்டத்தில் விளையாட்டாக கிண்டலடிக்கும் பின்னூட்டங்கள் மூலமும், இவர் எல்லாரிடமும் விளையாட்டாய் ஹாஸ்ய உணர்வோடு தான் விளையாடுகிறார், மத்தபடி இன்பாக்ஸ் பக்கம் வந்ததே இல்லை என்ற நம்பிக்கையை முதலில் ஊட்டுவது தான் இவர்களில் முதலீடு. பெண்கள் ஏதாவது சாதிக்கும் பதிவுகளில், பிறந்தநாள் பதிவுகளில் எல்லாம் முதலாக இருப்பர். அறிமுகமற்ற பெண்கள் துவளும்போது கை கொடுக்கும் தோழனாக ஒரு பிம்பம் ஏற்படுத்துவார்கள்.
இவர்கள் சமூக வலைதளங்களில் இவர்களை பற்றி உருவாக்கும் பிம்பங்கள்.
1. அவ்வளவு எளிதில் பெண்களோடு இவர்கள் இன்பாக்ஸில் உரையாடுவதில்லை. (இந்த கீரை முண்டைகளை கமெண்டுகளிலேயே படிய வைத்துவிடலாம் என்ற எண்ணம் இருக்கையில் இன்பாக்ஸ் எதற்கு. அது தானே போய் இவன்கள் மடியில் விழும் பெண்களுக்கான வரவேற்பரை ஆயிற்றே).
2. பெண்களுக்கு பொதுவாக எப்படிபட்ட ஆண்களை பிடிக்கும். தகுதி உடைய ஆண்களை பிடிக்கும். இவர்கள் நிச்சயம் தகுதி வாய்ந்தவர்களாக திறமைமிக்கவர்களாக இருப்பார்கள். அந்த தகுதிக்காகவே பெண்கள் பின்னே செல்வார்கள். உதாரணத்திற்கு வைரமுத்து போன்றவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தும் அவர்கள் கவிதைக்கான அவரை தூக்கி வைத்து கொண்டாடுவதில்லையா. அது போல.
3. பெண்களிடம் தனியாக இன்பாக்ஸிலோ, அல்லது நேரில் சந்தித்து பேசுகையிலோ இருவருக்கும் பொதுவான கருத்தை அளவளாவுதல். நிச்சயம் நடுவில் நடுவில் மானே, தேனே போன்று அவர்களை வீழ்த்தும் மந்திரங்களும் வார்த்தைகளும் கண்டிப்பாக இடம்பெறும். மெதுமெதுவாக வீழ்த்தப்படுவதை பெண்கள் உணர்வதேயில்லை அல்லது ஒரு ஆண் தன்னை வீழ்த்துவதை அவர்கள் மனம் விருப்பத்தின் செய்கிறது.
4. நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மகனாக, நல்ல குடும்பஸ்தனான பிம்பங்கள் இவர்கள் மீது பெரும் மதிப்பை உருவாக்கும்.
5. சிரிக்க வைக்கும் உணர்வோடு இவர்கள் உரையாடல் பெரும்பாலும் இருக்கும். ஆண் பெண் பாலின பேதமின்றி இவர்களோடு உரையாட ஆசைப்படும் உத்திகளை கையாள்வார்கள். அதெல்லாம் நீங்கள் அலுத்துக் போகும் வரை மட்டுமே. இவர்களுக்கு அலுத்துக் போகாதவாறு பார்த்துக் கொள்வது மிகக் கடினம். ஏன் என்றால் வேட்டை நா*மக்களின் கண்கள் எப்போதும் புதிது புதிதாய் வேட்டையாடுவதிலேயே குறியாயிருக்கும். எதிலும் நெடுங்காலம் திருப்தியுற மாட்டார்கள் இவர்கள்.
6. இவர்கள் எல்லா பெண்களையும் பழகும் வட்டத்திற்குள் கொண்டு வந்த பின் ஒருமையில் அழைப்பதும் பெயரை செல்லமாக அழைப்பதையும் பெண்களே விரும்பும் வண்ணம், எதிர்ப்பு தெரிவிக்காதவண்ணம் அவர்கள் பெண்கள் தங்களை நோக்கி நகர வைக்கும் வண்ணம் ஒரு ஆல்பா ஆணாக காட்சியளிப்பார்கள்.
இந்த பிம்பங்கள் ஓரிரு நாட்களில் அவர்கள் கட்டமைப்பதில்லை. பற்பல வருடங்களாக இதுவே அவர்கள் மேனரிசமாக மாறிப் போயிருக்கும். திருத்தவே முடியாது. தவறு என்று உணர்ந்தால் தானே திருந்துவதற்கு.
7. சமூக கட்டுப்பாடுகளுக்கும், ஒழுக்க நெறிகளை பின்பற்றும் பெண்களை இவர்கள் மரியாதையாகவே நடத்துவார்கள்.
8. இவர்கள் பத்து, பனிரெண்டு வருட பதிவுகளும் பின்னூட்டங்களும் அந்த பெண்களிடையே சென்று இவர் இட்ட பின்னூட்டங்களையும் அலசி ஆராய்ந்தால் நட்பு பட்டியலில் இவர்கள் வைத்திருக்கும் பெண்கள் நீண்ட காலமும், இவர்கள் உடலால் பயன்படுத்திய பெண்கள் காணாமலும் சென்றிருப்பார்கள். ஒரு உறவை போற போக்கில் பல வருடங்கள் காத்திருந்து பயன்படுத்தும் இவன்கள் அதை கழட்டிவிட்டுகையில் நேரம் எடுத்துக் கொள்வதில்லை. எமோஷனல் அபியூஸ் செய்து அந்த பெண்களையே குற்றம் சாட்டி ஓட வைக்கும் கில்லாடிகள்.
9. ஒரு உறவில் சேர்த்துக் கொள்ளும் போது அந்த பெண்களின் சின்ன சின்ன திறமைகளை பாராட்டி சீராட்டி கிடந்த இவர்கள் அந்த பெண்ணுடனான லௌகீக வாழ்க்கை அலுத்துப் போன பின் குறைகளை தேடி தேடி குற்றம் காண்பதும், அவர்களோடு பழகிய போது ஒப்புவித்த அந்தரங்க விஷயங்களையும், அவள்கள் பகிர்ந்த அவளது எதிரிகளோடும் சேர்ந்துக் கொண்டு கூத்தடித்துக் கொண்டு emotional imbalanceற்கு இவர்களை ஆட்படுத்துவார்கள். அதாவது மனப்பிறழ்வு ஏற்படும் நிலை. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட சப்போர்ட் பண்ணி உனக்கு நான் இருக்கேன், கவலைப்படாதே என்று தோள் கொடுத்த இவன்கள் பெரும் துயரிலும் ஈவு இரக்கமற்று இருப்பான்கள். அசிங்கமான வார்த்தைகளால் அவர்களை திட்டி வதை செய்வார்கள். அவர்கள் தன்னம்பிக்கையை உடைத்து போடுவார்கள்.
உடல் சுகத்திற்காக அந்த பெண்களை தேடி தேடி வேட்டையாடிய பின்பு விலக நினைக்கையில் தயவு தாட்சண்யமின்றி ஒரு மிருகத்தின் சாயலில் நடந்துக் கொள்வார்கள்.
உனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கானு அவமானப்படுத்துவார்கள். பேசுவதற்கான வாய்ப்பே வழங்கிடமாட்டார்கள். அப்படி பேசினாலும் அவர்கள் தவறுகளை பற்றி கேள்வி கேட்கவே விடாமல் உங்களை அவமானப்படுத்தும் வார்த்தைகளும் உங்களை ஒரு தே*டியா என்றும் சொல்ல தயங்குவதில்லை. மற்றவர்களிடம் அந்த பெண்களே இவர்கள் கைப்பிடித்து இழுப்பதாய், இழுத்ததாய் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் போய் சொல்வதில் சாமர்த்தியசாலிகள்.
என்ன பிரச்சினை என்றால் இந்த emotional traumaவில் பெண்கள் விழுந்து எழுவதற்குள் செத்து பிழைக்க வேண்டும். இவன்கள் தேவைகள் தான் அங்கு முடிந்துவிட்டனவே.
10. அதிலும் அம்மா பாசத்திற்கு ஏங்கும் ஆண்களிடம் சற்று ஜாக்கிரதையாகவே இருங்கள். ஒவ்வொரு பெண்ணின் காலுக்கு இடையில் தான் இவர்கள் அம்மா பாசத்தை தேடிக் கொண்டிருப்பார்கள்.
சிங்கமாவது ஒரு நேரத்தில் ஒரு புள்ளிமானை தான் வேட்டையாடும். இவன்கள் ஒரே நேரத்தில் பல பெண்களை வேட்டையாடுவதில் கில்லாடிகள்.
இவன்கள் பாவ புண்ணியத்தை பற்றி எல்லாம் பெரிதும் நினைப்பதில்லை. ஆனால் ஏமாற்றுவதில் கில்லாடிகளான இவர்கள், பேச்சில் வல்லவர்களாக இருப்பர். இவர்களை எத்தனை பலமான மனோதிடம் உள்ளவள்களாலும் எதுவும் செய்திட முடியாது.
மாட்டிக் கொள்ளாதவாறு தவறு செய்வதில் born criminalகளை ஒன்றுமே செய்திட முடியாது.
இவன்கள் அரிப்புக்கு பல பெண்கள் பலியானாலும் அவள்களால் வாய் திறந்து கத்தி அழக் கூட முடியாது. ஏன்னா சமூகம் அவற்றை மட்டுமே பழி சொல்லும் திறன் பெற்றது.
ஏன் தெரியுமா? ஏமாந்து போய் விரக்தி அடைந்து எதிர்த்து பேச வாய் திறக்கும் பெண்களை, அடுத்ததாக அவனிடம் ஏமாற இருக்கும் பெண்களும், நட்பு ரீதியாக மட்டுமே அவன்களுடன் பழகும் பெண்களும் சேர்ந்து வார்த்தைகளால் சல்லடையாக்கி விடுவதன் காரணமாக யாராலும் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது.
Playboy பிம்பங்கள் மீது காதலும் நேசமும் தோன்றும்வரை துன்பக் கடலில் மூழ்கும் பெண்களை யாராலும் காப்பாற்றிவிட முடியாது.
இங்கு எவனும் திரௌபதியை காப்பாற்றிய கிருஷ்ணன் இல்லை என்ற தெளிவு இருந்தால் போதுமானது.
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. அந்த விலை உங்கள் உயிராகவோ, எதிர்கால வாழ்வாகவோ இல்லாதிருக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக