சருகுகளின்_சபலங்கள்
பகுதி - 18
Digital space depression
Article published in vanakkam mumbai
இரண்டாயிரத்திற்கு பின் எங்கும் கணினி எதிலும் கணினி என்று ஆக்கப்பட்ட பின் தான் சைபர் க்ரைம்கள் மெல்ல மெல்லமாக அதிகரிக்க துவங்கியது.
Orkut போன்ற வலைதளங்கள் 2004ல் துவங்கப்பட்ட போது வெறும் மெயிலிலும் Google chatலும் personalஆக பேசிக் கொண்டிருந்த மனிதர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தன் முகங்களையும் உணர்வுகளையும் பகிரங்கமாக பதிவுகள் மூலம் நண்பர்களோடு பகிர ஆரம்பித்தனர்.
2004லேயே டேட்டிங் ஆஃப் ஆன முகநூல் பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும் 2006லிருந்து தான் இந்தியாவில் புழங்க ஆரம்பித்தது.
Twitterம் 2006லும், வாட்சப் செயலிகள் 2009லும், Instagram 2010லும் செயல்பாட்டுக்கு வந்து தற்போது எல்லோராலும் கணினியில் இருந்து செல்போன் திரைகளுக்கான வளர்ச்சிகளின் காரணமாக பயன்படுத்த முடிகின்றன.
டெக்னாலஜியின் வளர்ச்சியின் காரணமாகவும் கொரோனாவிற்கு பின்னான ஆன்லைன் கிளாஸ்களினாலும், demonetisation, பணமற்ற பரிவர்த்தனைகளான digital transactionகளுக்கும் தெரிந்தோ தெரியாமலோ அனைவரும் செல்போன் பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தின் பெயரில் தொண்ணூறு சதவீதம் மக்கள் கைபேசியை பயன்படுத்தி வருகிறோம்.
இனி நாம் மறுத்தாலும் மறுக்காவிட்டாலும் இனி இது டிஜிட்டல் உலகம் தான்.
1980ல் சுஜாதா அவர்கள் எழுதிய என் இனிய இயந்திரா என்ற நாவல் மிகவும் பிரபலமானது. எதிர்காலத்தில் டிஜிட்டல் உலகமயமாக போவதை அடித்தளமாக வைத்து எழுதிய science fiction novel. 1991ல் தூர்தர்ஷனில் நாடக பாணியில் வெளியான இந்த நாவலில் அந்த இயந்திரம் பேசும் வசனம் நான் சிபி, நீ நிலா என்ற வசனம் மிகவும் பிரபலமும் கூட. சிவா, சிவரஞ்சனி, சாருஹாசன் மற்றும் ஆனந்த் நடித்திருந்த அந்த நாடகம் இன்றைய 2k kidsகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
90களில் டிவி பார்ப்பதே குற்றம். தற்போது நம்மை சுற்றி எங்கெங்கு பார்த்தாலும் டிஜிட்டல் மயம் தான்.
டைப்ரைட்டிங் மெஷின்கள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டன. இனி வரும் பெரும்பாலான காலங்களில் virtual உலகத்தை நோக்கி தான் நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தற்போதெல்லாம் சோஷியல் மீடியாக்கள் மூலம் சினிமாக்களிலும், நாடகங்களில் வாய்ப்பு பெறுபவர்கள் ஏராளம். பேரிடர்காலங்களில் இந்த சோஷியல் மீடியாக்கள் மூலம் தான் எங்கெங்கோ இருந்தவர்களுக்கு பெரும் நல்ல உள்ளங்கள் மூலம் உதவிகள் கிட்டின. இன்றும் இந்த சமூக ஊடகங்கள் நல்ல விஷயங்களுக்காகவும், தொலைவில் உள்ளபவர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் சாதனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முன்னெல்லாம் வெளிநாட்டுக்கு போன புருஷன் வருவானா எப்போ வருவான் போன்ற எந்த ஒரு தொடர்பும் இன்றி தவித்த மனைவிகள் உண்டு. தற்போது அப்படி அல்ல, எவ்வளவு தொலைவில் இருந்தாலும் ஒரு நெருக்கமான உணர்வை இந்த கைபேசி தந்துவிடுகிறது. முன்னெல்லாம் மணி ஆர்டர் அனுப்பி அது வந்து சேர்வதற்கு காலம் ஆகும். தற்போது பண பரிவர்த்தனைகள் அனைத்தும் பொடிப் பொழுதில்.
ஆக நாம் ஒத்துக் கொண்டாலும் மறுத்தாலும் இனி இந்த டிஜிட்டல் உலகத்தை நாம் பயன்படுத்த மறுத்தால் காணாமல் போய்விடுவோம்.
கடவுள் இருந்தால் சாத்தானும் இருக்கணுமே என்ற ஒப்பீட்டிற்கு ஏற்ப ஒரு விஷயத்தினால் இவ்வளவு நன்மைகள் இருக்க தீமைகளும் அதே அளவு இருக்கும் அல்லவா.
கத்தியின் பயன் என்பது அதை பயன்படுத்துபவரின் மனநிலையை பொருத்து தானே. கத்தியை ஒரு நல்ல மனநிலையில் உள்ளவனிடம் தந்தால் அவன் காய்கறி, அல்லது கேரட், ஆப்பிள் போன்றவற்றை அறுத்து தின்பான். அதுவே ஒரு மனப்பிறழ்ந்தவன் கைகளில் கிட்டினால் வேறு உயிரையோ, தன்னை தானோ இம்சித்துக் கொள்வான். ஒரு கொலைகாரனிடமோ கசாப்புக் கடைகாரனிடம் இருந்தால் அது செவ்வனே ஒரு உயிரை கொல்லும். ஆக கத்தியின் பயன்பாடு என்பது அதை வைத்திருப்பவனின் மனநிலையை பொருத்ததே. அதை போல தான் இந்த சமூகவலைதளங்களும் அதன் பயன்பாடுகளும் அதை யார் கையில் வைத்திருக்கின்றார்களோ அதை வைத்து தான் அதன் பயன்களும், பலன்களும்.
நீங்கள் இந்த உலகில் ஏமாறாக தயாராக இருந்தால் உங்களை ஏமாற்றிட தயாராகவே இருக்கும். யாரையும் ஏமாற்றாமல் யாரிடமும் ஏமாறாமல் தப்பி பிழைக்க கற்றுக் கொள்வதே முதன்மையாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியது.
கைப்பேசியின் மூலமாக ஏற்படக் கூடிய க்ரைம்கள் தான் எத்தனைக்கு எத்தனை.
தற்போது சைபர் க்ரைம் ஆபிஸ்களின் கிளைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே அளவில் கம்ப்ளைண்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
பண மோசடியில் இருந்து ஆள் கடத்தல் வரை, கொள்ளையிலிருந்து கொலைகள் வரை, உள்ளத்தில் இருந்து உடல் வியாபாரம் வரை என்று இதன் பட்டியல் ஏராளம். அதன் பொருட்டு ஏற்படக் கூடிய மன உளைச்சல்களும் தற்கொலைகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதிலிருந்து விடுபடுவதற்கு விழிப்புணர்வு தேவைப்படுகின்றன.
செல்போன்னால் தானே இத்தனை பிரச்சினை. அதை தூக்கி போட்ருவோமானு பிற்போக்காக யோசித்தால் வளர்ச்சியை நோக்கி ஒரு அடி கூட முன்னேற முடியாமல் காணாமல் போய்விடுவோம். ஆக இதை பயன்படுத்தி தான் ஆக வேண்டும்.
அதன் விளைவாக ஏற்படும் மன உளைச்சல்களும், மன அழுத்தங்களும், அதை எப்படி கையாள்வது என்பதும் நாம் ஒவ்வொருவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை பொறுத்து இந்த தொடரை எழுதுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக