#பகுதி 24
#நித்ய_கல்யாணி
Botanical name: Catharanthus roseus(Apocynaceae) commonly known as bright eyes, Cape periwinkle, graveyard plant, Madagascar periwinkle, old maid, pink periwinkle, rose Periwinkle
வேறு பெயர்கள்: நயனதாரா அல்லது பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்றும் சுடுகாட்டுப்பூ, கல்லறைப்பூ என்றும் அழைக்கப்படுகிறது.
மடகாஸ்கரில் மட்டுமே இருந்த செடியானது பிற்பாடு வெப்பமண்டலங்கள் முழுக்க விரவி பரவியது.
இதன் இலை, பூ, வேர் அத்தனையும் மருத்துவ குணங்கள் கொண்டவை. நேரடியாக உட்கொண்டால் மிகுந்த நச்சுத்தன்மை உடையது என்பதால் ஆடு, மாடுகள் உண்ணாது. தெரு வாசலில் அழகுக்காக வளர்க்கலாம்.
அதன் விதைகள்
மருத்துவ பயன்கள்:
1. நீரிழிவுநோய்:
நித்யகல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.
சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.
நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதிமூத்திரம் போன்றவை குணமாகும். மருத்துவர் ஆலோசனையின்படி உட்கொள்ளுதல் நல்லது.
2. இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும்.
3. மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும்:
பெண்கள் பெரும்பாலும் மாதவிடாய் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நித்திய கல்யாணி பூக்கள் இதை சரி செய்வதில் முதலிடத்தில் உள்ளது. மாதவிடாய் வயிறு வலி, இரத்தப்போக்கு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும் டிஸ்மெனோரியாவையும் குறைக்க செய்கிறது.
நித்ய கல்யாணி இலைகள்6-8 எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் மாதவிடாய் சீராகும்.
4. நித்தியக் கல்யாணி நாடியைச் சமப்படுத்தவும், சிறுநீர் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.
5. புற்றுநோய்:
இரத்த புற்றுநோய் சரி செய்யும்.
இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.
6. உடல் அசதி குணமாக 5 நித்தியகல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் இட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி குடிக்கவேண்டும்.
7. சுவாச கோளாறுகள்:
இது சுவாச குழாயில் இருந்து சளி படிவுகளை அகற்ற உதவுகிறது. அனைத்து வித கபத்தையும் மோசமாக்கும் தன்மை கொண்டது. இந்த மலரில் இருக்கும் பெரும்பாலான செயலில் உள்ள உட்பொருள்கள் ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி, சிஓபிடி இருமல் மற்றும் சளி அறிகுறிகள் போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான இறுதி தீர்வை அளிக்கிறது.
இந்த பூக்கள் இருமல், தொண்டைப்புண் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த பூக்களை கஷாயமாக்கி எடுக்கலாம்.
8. நினைவாற்றல்:
இந்த தாவரத்தில் உள்ள நியூரோபிராக்டிவ் கூறுகள் மூளை செல்களின் ஆரம்ப வயதை குறைப்பதன் மூலம் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது. ஆனால் மூளை திசுக்களில் சரியான இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது. மூளையின் பதற்றத்தை நீக்குவதால் இது மூளையின் பணியை மேம்படுத்துகிறது.
9. உயர் இரத்த அழுத்தம்
வெள்ளை நிறத்தில் இருக்கும் நித்ய கல்யாணி பூ மற்றும் இலைகளின் சாறுகள் இலேசானது முதல் மிதமான உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த இலைகளின் சாறுகள் எடுக்கும் போது இது உயர் இரத்த அழுத்தத்துக்கு முந்தைய செயல்பாட்டை தடுப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இலைகளின் சாறு அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2- 3 மில்லி அளவு எடுத்து வரலாம்.
10. சரும பிரச்சினைகள்:
சருமத்தை மேம்படுத்தும் பண்புகள் இதில் உள்ளது. சூரியக்கதிர்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களுக்கு சிகிச்சையளிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள், புள்ளிகள், கருவளையங்கள் போன்ற முதுமையின் பல்வேறு அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. சரும பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
நித்திய கல்யாணி இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் எடுத்து மசித்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து மென்மையாக குழைத்து எடுக்கவும். இதை முகத்தில் தடவி உலரவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். முகப்பரு மற்றும் தோல் பிரச்சனை இருப்பவர்கள் மாற்றுநாளில் இதை செய்து வந்தால் தீவிரமாகாமல் தடுப்பதுடன் நோய்த்தொற்றை எதிர்த்து போராடவும் உதவும்.
11. காயம் குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது
இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் நிறைந்தவை. இது காயத்தை திறம்பட குணப்படுத்துகிறது. தோல் தொற்றுகளை தடுக்கிறது. அரிப்பு மற்றும் எரியும் உணர்வை தடுக்க செய்வதோடு தொற்று பரவாமலும் தடுக்கிறது.
காயம் ஆற்றலை எளிதாக்குகிறது. மஞ்சள் மற்றும் நித்ய கல்யாணி இலைகளை பேஸ்ட் செய்து காயங்கள் மீது 2- 3 முறை தடவினால் வேகமாக குணமாகும்.
12: வாய்ப்புண்களுக்கு.
இந்த இலைகளை மாதுளை மொட்டுக்களுடன் சேர்த்து அரைத்து சாறு எடுத்து மூக்கில் செலுத்தப்படுகிறது. மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க, ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்குக்கும் இதை பயன்படுத்தலாம்.
பக்க விளைவுகள்: வாந்தி, மயக்கம், முடி கொட்டுதல், காது கேளாமை, நரம்பு தளர்ச்சி, low BP ஏன் இறப்பு கூட நேரிடலாம்.
அருமருந்தான இதை சிகிச்சைக்காக பயன்படுத்துவதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக