வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

செடிகள்_வளர்க்கலாம்_வாங்க - பகுதி 15

#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க

மணத்தக்காளி கீரை

பகுதி 15

#மணத்தக்காளி_கீரை
#black_night_shade

இது செடியாக(herbs) மட்டுமே வளரக் கூடியது.

இதன் பூர்வீகம் Eurasia.  ஆனால் காடு மேடுகளில் தானாகவே முளைத்திருக்கும்.

மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, சுக்குட்டிக் கீரை, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.

இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள்.

ஓராண்டு தாவரம்.

பயன்கள்: 

1. உடலுக்கு குளிர்ச்சி தரும்.
2. வாய்ப்புண், வயிற்றுப்புண் போக்கும்.
3. வாயில் புண் இருந்தால் நான்கு இலையை பறித்து வெறும் வயிற்றில் மென்று தின்றால் போதும். இரண்டு நாட்களில் வாய்ப்புண் காணாமல் போகும்.
4. அல்சர் உள்ளவர்கள் இந்த கீரையை கூட்டு செய்து சாப்பிடலாம்.
5. சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை உள்ளவர்கள் இதில் சூப் செய்தும் சாப்பிடலாம்.
6. சிறு சிறு தக்காளிப் போல இருக்கும் இந்த பழத்தை அப்படியே பறித்தும் சாப்பிடலாம். 
7. இதன் பழத்தை காய வைத்து வத்தக்குழம்பில், மொச்சக்கொட்டை குழம்பில் இடித்து தாளித்து போட்டு சாப்பிட்டால் திவ்யமாக இருக்கும்.
8. இதன் பழத்தை காயவைத்து வைத்தால் விதையாக பயன்படுத்தலாம்.
9.சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும்.
10.  நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது.
11.  கர்ப்பிணி பெண்கள் இதை குறைவாக பயன்படுத்தலாம்.

சமையலில்:
1. கீரையை துவையலாக அரைத்து உண்ணலாம்.
2. கீரை கூட்டு
3. சாம்பாரில் தாளித்து போடலாம்.
4. பொரியல் செய்யலாம்.
5. இதன் பழங்களை காய் வைத்து வத்தக் குழம்பில், கார்க் குழம்பில் சேர்த்து சமைக்கலாம்.

இந்த கீரையை பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் பின்னூட்டத்தில் பகிரவும்.

சனி, 15 ஆகஸ்ட், 2020

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 14



சிலர் அழகுக்காகவும், சிலர் அதன் மூலம் பயன் பெறவும் செடி, கொடி, மரங்களை வளர்க்கின்றோம்.

நான் எல்லாம் முதலில் ஆசைகளுக்காக பற்பல செடிகளை வைத்து ஆசை தீர ரசித்துவிட்டு பிறகு பயன்பாட்டிற்காக செடிகளை வைக்க ஆரம்பித்தவள்.

செடி, விதைகளை காசு கொடுத்து வாங்கி வைப்பதை விட நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்தே விதைப்பது எப்படி என்பதை பார்ப்போம். 

நீங்கள் வாங்கும் புதினாவில் கீரையை மட்டும் கிள்ளிவிட்டு பார்த்தால் அதில் சிறு சிறு வேர்கள் முளைத்திருக்கும். அந்த காம்பை நீள் வாக்கில் மண்ணில் புதைத்தீர்களானால் அதிலிருந்து புதினா முளைத்திட ஆரம்பிக்கும். தேவையான பொழுது கீரையை மட்டும் கிள்ளிக் கொள்ளலாம். இதற்கு என்று தனி தொட்டி கூட வேண்டியதில்லை. பூச்சி அடிக்கும் செடிகளோடு இந்த தண்டுகளை நட்டு வைத்தால் புதினா முளைக்க முளைக்க அந்த செடிகளில் பூச்சி அடிக்காது.

புதினாவின் மருத்துவ பயன்கள்: 

1. சளி, கப கோளாறுகளுக்கு‌ புதினா ஒரு நல்ல மருந்து.
2. புத்துணர்ச்சியை கொடுக்கும்.
3. உடல் சூட்டைத் தணிக்கும்.
4. மூட்டுவலியை கட்டுப்படுத்தும்.
5. இதை அரைத்து பற்று போட்டால் தலைவலி குணமாகும், தொண்டைப்புண் குணமாகும்.

சமையலில் புதினா:
1. தேனீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
2. பிரியாணியில் சேர்க்கலாம்.
3. துவையல் அரைத்தும் சாப்பிடலாம்.
4. குளிர்பானத்தில் கலந்து குடிக்கலாம்.
இன்னும் பல.

சனி, 1 ஆகஸ்ட், 2020

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 13


#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க

#pointsettia

#wild_pointsettia or #christmas_flower or #japanese_pointsettia

#Euphorbia_cyathophora_Murray or #Euphorbia_heterophylla

1.முதல் புகைப்படத்தில் இருக்கும் தாவரத்தை நான் 12th படிக்கும்போது எங்கள் வீட்டில் இருந்தது. ஒரு காய் வெடித்து நான்கு விதைகள் விழுந்து அப்படியே வெறித்தனமாக பல்கி பெருகும். கண்ணுக்கு விருந்தாகும். மலமிளக்கியாகவும் இதன் கீரையை சமைத்து தந்திருக்கிறார் என்னோட அம்மா.

2.இரண்டாவது மற்றும் மூன்றாவது புகைப்படத்தில் இருக்கும் செடியை நர்சரியில் Christmas flower என்று அழைக்கப்படும் poinsettiaவை பார்த்த போது எங்கள் வீட்டில் அப்போது வளர்ந்திருந்த பால்பெருக்கி(wild poinsettia) நியாபகம் வந்தது. 

சரி அதே மாதிரி கொஞ்சம் வித்தியாசமா அழகாக பெரிய பெரிய இலைகளோடு இருக்கின்றதே என்று கேட்டபோது 350ரூபாய் என்றார்கள். அடேய் காட்டுல வளர்ற செடிக்கு இம்புட்டு அலப்பறையா‌ என்று நினைத்தேன். ஆனாலும் Christmas flower or pointsettia 100 நிறங்களில் கிடைக்கின்றது. இந்தியாவில் சிவப்பு மற்றும் ரோஜா வண்ணத்தில் மட்டுமே கிடைக்கின்றது.. ஆனால் பல வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

3.நான்காவது மற்றும் ஐந்தாவது புகைப்படம்  japanese pointsettia or Devils backbone என்று மற்றொரு பெயரும் உள்ளது இதற்கு. நிறைய இடங்களில் அழகுக்காக வைத்திருப்பார்கள். நிழலில் பச்சைப் பசேல் என்றும் வெயிலில் இலைகள் அற்று சிவப்பு கிளிமூக்கு போன்று இலைகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.  

இவை அனைத்தும் euphorbiacea familyயை சார்ந்தது.

இணையத்தகவல்:
#பால்பெருக்கி  இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கள்ளி குடும்ப தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ நாட்டின் பகுதியாகும். மேலும் கலிபோர்னியா, டெக்சஸ், மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. பருத்தி உற்பத்தி சாகுபடிகளின் ஊடாக களை போல் வளரும் தன்மை கொண்ட இத்தாவரம் தாய்லாந்து, இந்தியாவில் பல பகுதிகளில் அலங்கார தாவரமாக தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. 

சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் தாமாக வளரும் தன்மைகொண்ட இத்தாவரம் 30 செமீ, முதல் 70 செமீ வரை உயரம் கொண்டதாக உள்ளது.

#தித்திலிப்பூ அழகு வண்ணம் கொண்டதால் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது; புண்களை ஆற்றும் மருத்துவக் குணமும் இதற்கு உண்டு.

Internet source: 

Euphorbia cyathophora, known by various names including dwarf poinsettia, fire-on-the-mountain, and paintedleaf, is native to North and South America and naturalized elsewhere. They belong to the Cyathium type of inflorescence. Here, the inflorescence axis is convex in shape.

The dwarf poinsettia has green stems and alternate lobed leaves, the uppermost with irregular red blotches near the base. The terminal flowers are yellowish with 1-2 small glands or nectaries.

Fire-on-the-mountain is a member of the spurge family (family Euphorbiaceae). Spurges are commonly herbs, with milky sap; in the tropics also includes shrubs or trees. There are about 290 genera and 7,500 species, mostly of warm or hot regions. Among the valuable products of the family are rubber, castor and tung oils, and tapioca. Most members of the family are poisonous, and their milky sap will irritate the membranes of the eyes and mouth.

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 12

#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க 💜💜💜

#Barleria_repens_nees

#small_violet_bush

பார்ப்பதற்கு டிசம்பர் பூ போலவே இருக்கும். டிசம்பர் பூவின் botanical name கூட Barleriaவில் தான் தொடங்கும்.

இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா. கொடி போல படரக் கூடியது. சிறிய அலமெண்டா பூக்களை போல பூக்கக் கூடியது. கண்ணுக்கு தெரியாத சிறு சிறு விதைகள் விழுந்து நிறைய செடிகள் முளைக்கும். 

நான் வாங்கி வந்து இந்த செடியை 25 ரூபாயில் வைத்தேன். மூன்று வருடங்களுக்கும் மேலாக ஒரு நாள் கூட பூக்கத் தவறியதே இல்லை. வெயில் தாங்கக் கூடியது. மழை காலங்களிலும் நிமிர்ந்து நிற்கும்.  இதுவும் சிமெண்ட் விழுந்து பாதிக்கப்பட்டு ஒரு சிறு வேர் சில இலைதுளிர்கள் தான் மிச்சம் இருந்தது.ஒரு பெரிய பிளாஸ்டிக் அன்னக்கூடையில் வைத்தேன்.
தினமும் பூத்துக் கொண்டே தான் இருக்கின்றன. கிளைகள் மண்ணில் படர்ந்தால் வேர்விடும்.

#orange,#purple, #white and #yellow நிறங்களிலும் இருக்கின்றதாம். எனக்கு கிடைத்தது ஒரே ஒரு கலர் தான்.

Source:net

Barleria repens, the small bush violet, is a plant in the family Acanthaceae. It occurs in forests and woodlands from tropical Africa to South Africa.

This plant is easily propagated from cuttings - pinch out young shoots to encourage bushiness. An even easier method is to lift rooted runners - plant into individual containers (size depends on size of roots attached) and water carefully until properly established. Don't let them dry out completely, but don't keep them saturated. When growing strongly, transfer to the garden.

Fast-growing and wonderfully easy-going, Barleria repens will adapt to a number of situations. Plant it in a large container, or on top of a low wall, where its foliage and flowers can cascade down and show to advantage. Mass plant it in partial shade under trees to form a groundcover, or plant along the edge of an informal border, or in a lightly shaded rockery. When planted in very deep shade it tends to become lanky and untidy and does not produce as many flowers. Always provide good, light, well-drained soil and plenty of compost and other organic material. Spread a layer of mulch on the surface of the soil after planting, and renew regularly. Water well in summer, but much less in winter. Plants thrive when fed with slow release 3: 1: 5 at intervals of 6-8 weeks (throughout growing season). Prune the plant back hard after flowering (at the end of autumn/winter) to keep it neat. Regard the prunings as free mulch!

Pest-free and fairly frost-tolerant, it can take sun or light shade, and can handle temperatures ranging from about -2°C to 36°C

The small bush violet produces masses of pretty tubular flowers and will happily scramble up into surrounding vegetation if conditions are good.

It usually forms a rounded to spreading bushy shrub, 0.7 m high by 1 m wide, but sometimes also climbs/leans into nearby trees and shrubs (up to 2 m!). New branches tend to root as they touch ground, so this plant can quickly increase its territory if not kept under surveillance! Evergreen, it has soft, shiny, dark green leaves. Flowers are fairly large, and are a deep purple-mauve or pink-red, appearing from late summer to autumn (February to April). The fruit is an explosive, club-shaped capsule, forming in autumn (March to May).

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 11


#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க

#Silver_Cloud #Thunder_Cloud

#Leucophyllum_candidum or #Leucophyllum_frutescens or #Texas_sage or #purple_sage or silver leaf  barometer bush, என்று விதவிதமாக கூறப்படும் குற்றுசெடி(shrub) இது. 5-8 அடி உயரம் வரை வளரும் செடி இது. 

North America இதன்‌ பூர்வீகம்.

கண்களுக்கு விருந்தாகும். தொட்டியில் வைப்பதை விட தரையில் வைத்தால் படரக் கூடியது. அயனம்பாக்கம் அபார்ட்மெண்ட்களின் பார்க்கில் அவ்வாறு படர்ந்து பூத்துக் குலுங்குவதை பார்த்திருக்கிறேன்.

வெயில் தாங்கக் கூடிய தாவரம். நிறைய தண்ணீர் ஊற்றினால் இறந்துவிடும் ஆபத்து உண்டு. இடிக்கு மறுநாள் காளானைப் போலவே மொட்டு விட்டு மொத்தமாக பூக்கக் கூடியது. I am verified it so many times. 

விதைகள் மூலமாகவும் முதிர்ந்த கிளைகளை வெட்டி வைப்பதன் மூலமாகவும் துளிர்க்கக் கூடியது.

ஹெர்பல் தேநீராக இதன் காய்ந்த இலைகளை கொதிக்க வைத்து குடிக்கலாம். ஜலதோஷத்தை நோக்கக் கூடியது.

Medicinal ( Dried leaves and flowers can be brewed into herbal tea, mildly sedative, good as bedtime drink and treating colds.)

#PC: two years back my terrace garden. புது வீடு மாற்றத்தில் பறிகொடுத்த செடிகளில் இதுவும் ஒன்று.

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 10

#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க

#மயில்மாணிக்கம்

#cypress_vine
சிவப்பு, பிங்க் மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கள் பூக்கும். அழகா சின்னதா மூக்குத்திப் போல பூக்கள் இருக்கும். மயில் தோகையைப் போல இலைகள் இருக்கும். பார்க்க அத்தனை அழகு. விதைகள் நிறைய செடிகளை உருவாக்கும். 

இதுவும் என்னிடம் இருந்தது தற்போது இல்லை. இணையத்தில் தேடினால் 140 லிருந்து ‌150 வரை விற்கிறார்கள். அவ்வளவு விலை அநாவசியம். நர்சரிகளில் 25ற்கு கிடைக்கலாம். அம்மா வீட்டில் நான் எம்.எஸ்.சி படிக்கும்போது வைத்திருந்தார்கள். நாட்டுமருத்துவத்தில் இந்த தாவரத்தை பயன்படுத்துவதாக இணையத்தில் போட்டிருந்தது. 

Internet source: Ipomoea quamoclit belonging to Convolvulaceae family is an annual, herbaceous plant, commonly known as mayil manikkam, akasamulla, kunjalata, tarulata, kamalata, getphul in India and distributed throughout the tropical areas of the world. Ipomoea quamoclit is used as folk medicine around the world for various illnesses. This paper reviews the important biological activities of I. quamoclit reported over the last few decades. These include antioxidant activity, antimicrobial activity, anticancer activity, antidiabetic activity as well as insecticidal activity. These studies reveal that I. quamoclit have various biological activities; hence, it is encouraging to find its new therapeutic uses.

#pc: two years back. My terrace garden

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 9


#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க

#தூதுவளை

தூதுவளை சுரம் மற்றும் சளித்தொல்லைக்கு மிக நல்லது. கபம், பித்தம் அனைத்திற்கும் நல்லது.

துவையல் அரைத்து சாப்பிடலாம். அல்லது ரசத்தில் இடித்து போடலாம். காடு மேடுகள்ள முளைத்து கிடக்கும். தண்டு, இலைகள் என்று எல்லா இடங்களிலும் முள் இருக்கும். படரக் கூடியது. இதை கற்பக மூலிகை என்றும் காயகல்பம் என்றும் அழைக்கிறார்கள்.

இப்போ சின்ன தொட்டியில் வைத்திருக்கிறேன்.

தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து. தூதுவளைக் காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பக முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும்.
தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.
மேற்கண்ட கற்பக முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

The plant is full of thorns, including the leaves. It is important to remove these thorns before cooking as the thorns are considered to be mildly toxic. The herb can be stored in powdered form by drying the leaves under shade and making a powder out of it. It is used to treat fever and common cold. Its native range is India, Sri Lanka and Indochina.

#Pc: 2 yrs back, rental house

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 8


#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க

#பிரண்டை

#veld_grape

Pirandai is very useful for stomach as well as heart. It will set right gastric disorder and protect the heart. 

வீட்டில் எளிதாக வளர்க்கக் கூடிய தாவரத்தில் இதுவும் ஒன்று. வயிற்று உப்புசம், ஜீரணக் கோளாறுக்கு இதன் இளம் தண்டை பறித்து துவையல் செய்து சாப்பிட்டால் நன்று. மூட்டுவலிக்கும் சிறந்தது.

இதை நான் சின்ன தொட்டியில் வைத்ததோடு சரி, பெரிதாக கண்டுக்கொண்டதே இல்லை. ஆனாலும் அதன் தண்டுகள் மாதத்திற்கு ஒருமுறை நன்மை செய்வதை நிறுத்துவதே இல்லை.

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 7

 #செடிகள்_வளர்க்கலாம்_வாங்க


#bushytype

South America இதன் புகழிடம். மூன்று‌ வருடங்கள் வரை இதன் வாழ்நாள். தானாக விதைகள் விழுந்து முளைக்கக் கூடியது. 

கண்களுக்கு விருந்தாகும். குளிர்காலத்தில் நிறைய பூ எடுக்கும். வெயில் தேவை. தொங்கும் தொட்டிகளிலும், வீட்டு பால்கனிகளையும் அலங்கரிக்கக் கூடியது.

குழந்தைகளைப் போல பார்த்துக் கொள்ள வேண்டிய தாவரம். 

இரண்டு வருடத்திற்கு முந்தைய படங்கள் தான். அப்போது வேலைக்கு செல்லாத போது வைத்திருந்தேன். தற்போது முடியவில்லை.

#Eventhough_I_am_obsessed_with_this_plant. 

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 6




மேலே இருக்கும் லிங்கில் வீடியோ இருக்கின்றது.


#portulaca

இந்த செடியை எளிதாக வளர்க்கலாம். கிள்ளி நட்டாலே பிழைச்சிக்கும். வித விதமான கலர்களில் உள்ளது. கண்களுக்கு விருந்தாகும்.

#positivevibes

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 5


#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க❤️❤️❤️

வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய செடிகள்னு பார்த்தா‌ நிறைய இருக்கு.
வரிசைப்படி பார்த்தால் என் லிஸ்ட்ல துளசிக்கு தான் முதலிடம்.

#துளசி
இதை #மூலிகைகளின்_ராணி என்றும் அழைப்பார்கள்.

கருந்துளசியை விஷ்ணு துளசி என்பார்கள், பச்சையாக இருப்பது லக்ஷ்மி துளசி என்பார்கள். இரண்டையும் ஒரே தொட்டியில் வைக்கலாம். விதைகள் செடியிலேயே காய்ந்ததும் பறித்து உதிர்த்து விட்டால் போதும் நிறைய செடிகள் முளைக்கும்.

 மிண்ட் துளசி என்று ஒரு புது வகை துளசியும் உண்டு . அதற்கு விதை கிடையாது. புதினாவையும் துளசியையும் கலந்து hybrid பண்ணபட்டது.

பயன்கள்: மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

எளிதாக வளர்க்க கூடிய தாவரம்.

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 4


Watermelon in my terrace garden.

என் கிட்ட இருக்கிற பழக்கம் என்னன்னா காய்கறி கழுவின தண்ணி, அரிசி கழுவிய தண்ணி, பாவக்காய், தக்காளி, பப்பாளி, தர்பூசணி விதைகள் இதோட சேர்த்து செடியில் ஊத்திடுவேன். 

இப்ப அப்படி ஊற்றிய தர்பூசணி விதைகளில் இருந்து உயிர்பெற்ற விதையின் காய் கனியாவதற்காக காத்திருக்கின்றது.

செடிகள் வளர்க்கலாம்‌ வாங்க - பகுதி 3


#பகுதி 3

❤️❤️❤️❤️❤️❤️
#பாரிஜாதம்❤️
❤️❤️❤️❤️❤️❤️

இந்த பூவையும் தேவலோக பாரிஜாதம்னு தான் சொல்வாங்க. மல்லி, முல்லை, பவளமல்லியை எல்லாம் தூக்கியடித்துவிடும் இதன் வாசனை. ஒரு பூவே அவ்வளவு வாசனைனா மரமா வச்சா எப்படி இருக்கும். முகப்பேர்ல இருக்கற ஒரு வீட்டு வாசல்ல இருக்கும். வாசனை பிடிக்கவே அந்த தெரு பக்கமா தம்பி வீட்டுக்கு போவேன். 

ஒரு வித மயக்கம் போதை தரும் இதன் வாசம் எனக்கு. ஆனால் மரமா வைக்க இடம் இல்லை 
என்ன பண்ணட்டும்னு கேட்கறீங்களா, நர்சரியில hybrid செடி விக்கறாங்க. சின்னதா தான் இருக்கும், நிறைய பூ பூக்கும்.

திருமாலுக்கு எனக்கடுத்தது🤪 பிடித்த மலர் என்று பாரிஜாதத்தை குறிப்பிடுவார்கள்.

ஒரே ஒரு கஷ்டம் என்னன்னா அணிலுக்கும் இதை பிடிக்கும். மொட்டுலேயே கடிச்சு வச்சுடும்.

மனசுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா குடுக்கணும்னா இதை கொடுங்க. ஒவ்வொரு பூவின் வாசனையிலேயும் உங்க நினைவு வருவதற்கு வாய்ப்பு இருக்கு.

இந்திரலோகத்து பாரிஜாத மலராக இதை தான் குறிப்பிடுவார்கள்.

இந்த ஒரு பூ போதும்னு நினைக்கிறேன், மனம் கவரும் கள்வனை களவாட 😍😍😍

ஆனால் இணையத்தில் பாரிஜாதத்தை தேடினால் பவளமல்லியை காண்பிக்கும்.

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 2


#பகுதி 2

#Adenium

Adenium arabica, adenium obsessum, Adenium bonsai, etc., இப்படி வித விதமான varietyயில் கிடைக்கிறது. விதவிதமான நிறங்களிலும், அடுக்குகளிலும் கிடைக்கும். ஒரே செடியில் இரண்டு முதல் ஐந்து வித நிறங்கள்(grafted) உள்ள பூக்கள் கூட பூத்திடும். 

இதன் பூர்வீகம் தென்ஆப்பிரிக்கா. மற்றொரு பெயர் #desert_rose தமிழில் #பாலைவன_ரோஜா.

இதன் பராமரிப்பிற்கான நேரம் மிக குறைவே. வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும். நிழலில் இலைகள் அதிகமாகவும், வெயிலில் அதிக பூக்களும் பூக்க கூடியது. 

Grafted adenium bonsai தண்டுகள் வித விதமாக கவன ஈர்ப்பை ஏற்படுத்த வல்லது. Bonsai அல்லாத மரங்கள் நான்கடி வரை வளர கூடியது. 

வேகமான வளர்ச்சி இல்லை. ஆனால் அழகிய பூக்கள் தினமும் பார்வைக்கு குளிர்ச்சியை தரவல்லது.

சாதாரண மண் இதற்கு பயன்படுத்த கூடாது. செம்மண்,உரம், தேங்காய் நார் கலவையை இதற்கு பயன்படுத்த வேண்டும். தேங்காய் நார் ஈரத்தை மண்ணோடு தக்க வைத்துக் கொள்ளவும், மாடியில் வைக்கும் பட்சத்தில் தொட்டியின் எடை குறைப்பிற்கும் பயன்படுத்துகிறோம்.

முதல் படம்: என்னிடம் இருக்கும் அந்த வெளிர்ரோஜா வண்ணம் நான்கடி வளர கூடியது. என்னிடம் வந்து மூன்றாண்டுகள் ஆகிறது. இரண்டாண்டுகள் ஆனாலே விதை கிடைக்கும். முதல்முறையாக விதை உருவாகி இருக்கின்றது. ஒரு குச்சியை போல் இருப்பது தான் விதை. இன்னும் ஒரு வாரத்தில் முற்றிய பின் ஒரு கவரில் கட்டி வைத்தால் வெடித்து அதில் குச்சியை போன்று விதைகள் கிடைக்கும்.  

இரண்டாவது படம்: Adenium bonsai. Grafted hybrid. அதனால் விதைகள் உருவாகாது.

Onlineல் குறைந்தபட்சம் 600ரூபாய், அருகே உள்ளே நர்சரியில் 200 ரூபாய்க்கு விற்கப்படும். Multicolour எல்லாம் குறைந்தபட்சம் 500ரூபாய் வரை. 

மொத்தமாக குறைந்த விலையில் கிடைக்க Ayan என்பவர் onlineல் வியாபாரம் செய்கிறார். அவர் லிங்கிற்கு என்னுடைய க்ரூப் (sell and buy seeds) join பண்ணிக்கலாம்.

நேரமில்லை ஆனால் அழகிற்காக வளர்க்க ஆசைப்படுபவர்கள் இதை வளர்க்கலாம்...❤️❤️

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 1


❤️❤️❤️

எல்லோருக்குமே மரம் வளர்க்கணும், காய்கறி தோட்டம் போடணும், பூச்செடிகள், அழகு செடிகள் வளர்க்கணும்னு ஆசை இருக்கும். அதனால் தான் மனிதன் தன் விடுமுறை நாட்களில் இயற்கை இணைந்த சூழலுக்கு நகர துடிக்கிறான். ஆனால் நாம் இருக்கும் தற்போதைய சூழலுக்கு வீட்டை விட்டு வெளியே வருவது என்பதே ரொம்ப கஷ்டம்.

நம் வீட்டை சுற்றி வாகாக இடம் இருந்தால் மரம் நடலாம். வித விதமாக செடிகள் வைத்து ரசிக்கலாம். சென்னை போன்ற ஜன நெருக்கடியான இடங்களில் அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. அதுவும் அபார்ட்மெண்ட் போன்ற குடியிருப்பில் இருப்பவர்கள் பால்கனியில் அதி தேவையான செடிகள் (துளசி,கற்பூரவல்லி,தூதுவளை, வல்லாரை,புதினா,கீரைகள் போன்றவை) வளர்க்கலாம். 

அழகுக்கு என்றால் அதற்கும் விதவிதமான தாவரங்கள் உள்ளது(money plant, peace lily,etc.,). ஆக்ஸிஜனும் தரவல்லது.

நான் முதன் முதல்ல செடி வைக்க ஆரம்பிச்சது பக்கெட், பிளாஸ்டிக் சாக்குப்பை, கேன் போன்றவற்றில் தான். 

உங்கள் நேரத்தை பொறுத்தும், இடத்தை பொறுத்தும்,உங்களால் செலவு செய்ய முடியும் அல்லது முடியவில்லை என்றாலும் கூட உங்கள் விருப்பத் தாவரங்களை வளர்க்க முடியும். 

சின்ன வயசில் இருந்தே வாடகை வீட்டில் இருந்தபோது கூட வீட்டிற்க்கு தேவையான தாவரங்கள் எங்கள் வீட்டில் இருக்கும். அதற்கான கிரெடிட் எங்கம்மா மற்றும் பாட்டியிற்கும் தான்...

#பகுதி 1
#மாடிதோட்டம்
#காய்கறிதோட்டம்
#அழகுசெடிகள்

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...