#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க
#Silver_Cloud #Thunder_Cloud
#Leucophyllum_candidum or #Leucophyllum_frutescens or #Texas_sage or #purple_sage or silver leaf barometer bush, என்று விதவிதமாக கூறப்படும் குற்றுசெடி(shrub) இது. 5-8 அடி உயரம் வரை வளரும் செடி இது.
North America இதன் பூர்வீகம்.
கண்களுக்கு விருந்தாகும். தொட்டியில் வைப்பதை விட தரையில் வைத்தால் படரக் கூடியது. அயனம்பாக்கம் அபார்ட்மெண்ட்களின் பார்க்கில் அவ்வாறு படர்ந்து பூத்துக் குலுங்குவதை பார்த்திருக்கிறேன்.
வெயில் தாங்கக் கூடிய தாவரம். நிறைய தண்ணீர் ஊற்றினால் இறந்துவிடும் ஆபத்து உண்டு. இடிக்கு மறுநாள் காளானைப் போலவே மொட்டு விட்டு மொத்தமாக பூக்கக் கூடியது. I am verified it so many times.
விதைகள் மூலமாகவும் முதிர்ந்த கிளைகளை வெட்டி வைப்பதன் மூலமாகவும் துளிர்க்கக் கூடியது.
ஹெர்பல் தேநீராக இதன் காய்ந்த இலைகளை கொதிக்க வைத்து குடிக்கலாம். ஜலதோஷத்தை நோக்கக் கூடியது.
Medicinal ( Dried leaves and flowers can be brewed into herbal tea, mildly sedative, good as bedtime drink and treating colds.)
#PC: two years back my terrace garden. புது வீடு மாற்றத்தில் பறிகொடுத்த செடிகளில் இதுவும் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக