திங்கள், 11 டிசம்பர், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி -43 தைரிய மேவ ஜெயதே.

சருகுகளின் சபலங்கள் 

பகுதி -43

தைரிய மேவ ஜெயதே.


மரணம் என்பது ஒரு வகை எல்லாவித சுகதுக்கங்களிலும் இருந்து மனிதனுக்கு கிடைக்கும் விடுதலை. 

நிஜத்தில் பிறப்பிற்கு தான் அழ வேண்டும். இறப்பிற்கு தான் சிரிக்க வேண்டும். (இனி அவன் எல்லா வலிகளிலும் இருந்தும் தப்பித்துக் கொள்கிறான் அல்லவா)

ஒவ்வொரு உயிரும் பிறக்கையில் இந்த உலகில் வலியது வாழும் என்று போராட தான் போகிறது. உடல் அளவிலோ மனதளவிலோ சந்தோஷமாக மட்டுமே வாழ்பவர்கள் என்று யாருமில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கேற்ப துன்ப இன்ப விகிதாச்சாரங்கள் மாறுபடும்.

மரணம் என்பது விமோசனம். ஒரு வகையில் வரம். மரணத்தின் மூலம் எல்லா வலிகளிடம் இருந்து தப்பித்து கொள்கிறான். 

ஆக நீ செத்து போ என்று நம்மை கூறுபவர்களையும், நாம சாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் நாம் நன்றியை தான் உரித்தாக்க வேண்டும். 

So say to them, more love and hugs ❤️ 

ஒரு பூ பூக்கையிலே தெரியும் அது அன்று இரவோடு வாடி விடும் என்று. மனிதனின் ஆயுளுக்கும் கூட அஃதே. என்றோ ஒரு நாள் மரணத்தை நோக்கி எல்லோரும் வரிசையில் நின்று கொண்டு தான் இருக்கின்றோம்.

யார் முன்னே என்பது தான் நம் கையில் இல்லை.

உள்ளார்ந்த தத்துவம் பேசுகையில் கொஞ்சம் பைத்தியம் மாதிரி தான் தோன்றும். ஆனால் உண்மைகள் நிர்வாணமானவை. முகத்தில் அறைய கூடியவை.

உங்களை துன்பக்காலங்களில் கைவிட்டு சென்றவர்களுக்கு நன்றியை சொல்லுங்கள்.

அவர்கள் தான் உங்கள் உளத்தசை எத்தனை மனவலிமை மிக்கது என்பதை உங்களுக்கு உணர்த்தி விட்டு சென்றவர்கள்.

உங்களை வெறுப்பவர்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். வெறுப்பவர்களுக்கு குறைகள் மட்டுமே தெரியும். அவற்றை பூதக்கண்ணாடியில் வைத்து உலகிற்கு உங்களை நீங்கள் அப்படிபட்டவர்கள் என்று பறைசாற்றுவார்கள்.

எதையும் இழப்பதற்கு தயாராக இருப்பவன் எந்த நிலையிலும் வீழமாட்டான். அவனை வீழ்த்த விரும்புபவர்கள் தான் காணாமல் போவார்கள். 

பயமற்றவனுக்கு இந்த வாழ்வு சொர்க்கம். ஆக தைரியமாக எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ளுங்கள். உயிர் இருக்கும் வரை வாழ்வு உங்களுடையதாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...