புதன், 8 நவம்பர், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 41 Mother's guilt

சருகுகளின் சபலங்கள் 

பகுதி - 41

Mother's guilt

இந்த சமூகம் ஒரு பிள்ளை சரியா வளரல்லைன்னா அவங்க அம்மாவை தான் திட்டும். 

பொதுவாகவே ஆணை ஒப்பிட்டு பார்க்கையில் பெண்ணுக்கு குழந்தைகள் மீது இருக்கக் கூடிய பிணைப்பு அதிகம். கருவில் சுமந்து அது பெரியவனாக வளரும் வரை அதன் அத்தனை செயல்களுக்கும் பெரும்பான்மையாக அதன் தாயை தான் குறைக் கூறி கேள்விப்படுகிறோம்.

ஒரு குழந்தை புகழ்பெறுகையில் பங்குங்கு வரும் அத்தனை கூட்டமும் அதை வளர்ப்பதில் பெரும்பாலும் பங்கெடுத்துக் கொள்வதில்லை. 

இந்த சமூகம் பிள்ளை வளர்ப்பு, வீட்டுக் கடமைகள் அத்தனையையும் பெண்ணின் மீது சுமத்திவிட்டு, ஆணுக்கு சமமாக உழைக்கும் இடத்திலும், தனது லட்சியத்தை நோக்கியும் ஓடச் சொல்கின்றது.

ஒரு ஆண் வேலைக்கு செல்கின்றான் என்றால் திருமணத்திற்கு பின் மனைவியும், திருமணத்திற்கு முன்பு குடும்பமும் அவனுக்கான புறவெளியை திறந்து வைக்கிறது.

உதாரணத்திற்கு ஆணும் வேலைக்கு செல்கின்றான், பெண்ணும் வேலைக்கு செல்கின்றாள். வேலையை விட்டு வீட்டுக்கு வந்தபின் பெரும்பாலான ஆணிற்கு வீட்டில் சுட சுட உணவு கிடைக்கும். வீட்டிற்கு வந்தவுடன் அவன் ஓய்வெடுத்துக் கொள்கின்றான். 

ஆனால் பெண் வீட்டிற்கு வந்தபின்னும் சமையல் அறையிலும், குழந்தைகள் இடத்திலும், வீட்டு வேலைகளிலும், பிள்ளைகளின் கல்வியிலும் ஈடுபட்டு ஆக வேண்டும்.

ஒரு பெண் தன் வேலையில் மென்மேலும் வளர முடிகின்றது என்றால் அதற்கு காரணமாக அவள் குடும்பம் இருக்கின்றதோ இல்லையோ, அவள் தோல்விக்கு முன்னேற்றம் இல்லாத நிலைமைக்கு பெரும்பான்மையாக அவளது கணவனும் அவனின் பெற்றோர்களும் தான் காரணமாக இருக்கின்றனர். 

விவாகரத்து ஆன பெண்கள் கூட ஓரளவிற்கு தன் பிள்ளைகளை வளர்ப்பதோடு தன்னையும் தன் லட்சியத்தை நோக்கியும் முன்னேறிவிட முடியும். 

முட்டாள்த்தனமும், மூடநம்பிக்கையுமாய், அடிமைத்தனமுமமாய் பெண்ணை நடத்தி இன்புறும் குடும்பங்களில் பெண்ணால் எந்த ஒரு முன்னேற்றமும் கண்டுவிட முடியாது. 

பெரும்பாலான பெண்களுக்கு குடும்பம் என்பது காலில் கட்டிவிட்ட பாரம். அவள் தனக்கு எந்த வகையிலும் உதவாத ஒத்துழைக்காத குரூர புத்தியுடைய ரத்தத்தை உறிஞ்சுவதைப் போல அத்தனையையும் அட்டையாய் உறிஞ்சும் குடும்பத்திற்குள் தன்னை ஒப்படைத்துவிட்டு அத்தனை திறமைகள் இருந்தும் முன்னேற முடியாமல் தவிக்கிறாள். 

ஆனால் புற உலகம் ஆண் பெண் இருவருக்கும் ஒரே தளத்தை அமைத்துக் கொடுத்து சரிசமமான பலத்துடன் ஓடச் சொல்கிறது. 

நன்றாக யோசித்துப் பார்த்தால் குடும்பம் என்ற ஒன்று எந்த விதத்திலும் தன் லட்சியத்தை நோக்கி ஓட ஆசைப்படும் பெண்களுக்கு உவப்பானதாக இல்லை. 

ஏதோ ஒரு முகம் தெரியாத குடும்பத்திற்குள் சென்று ஓடாய் உழைத்துப் போட அவர்களின் தவறுகளுக்கு பழி ஏற்க பெரும்பாலான குடும்பங்களுக்கு பெண் தேவைப்படுகிறாள். 

ஒரு பெண் தன் லட்சியத்தை நோக்கி ஓடுகையில் குடும்பம் குழந்தை என மொத்த பாரத்தையும் முதுகில் ஏற்றிக் கொண்டு தான் ஓடியாக வேண்டியிருக்கிறது. 

இதில் குழந்தை வளர்ப்பில் சிறு தவறுகள் நடந்துவிட்டாலும் அவளை சிலுவையில் அறைந்து விடாக் குறையாக அவளை வதைத்துவிட தயாராகவே இருக்கிறது. 

குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கும் சமபங்கு உண்டு. இனி பிள்ளைகள் சரியில்லாமல் போனால் தே*வடியா பையா, விருந்தாளிக்கு பிறந்தவனே என்று திட்டாதீர்கள். தற்குறிக்கு பிறந்தவனே என்று திட்டுங்கள்.

Mother's guiltஐ போல father's guiltம் உருவாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...