திங்கள், 11 டிசம்பர், 2023

சருகுகளின் சபலங்கள் பகுதி - 27 தலைப்பு : உணர்வுப்பேழை 2

சருகுகளின்_சபலங்கள்

பகுதி - 27

தலைப்பு : #உணர்வுப்பேழை 2


#வணக்கமும்பையின் இந்த வார பதிப்பு. சென்ற வார தொடர்ச்சி. போன வார பதிப்பின் லிங்க் பின்னூட்டத்தில்.

இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்ச நண்பன் ஒருவன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான் அவன் சொன்னது உண்மைன்னு நம்பி எங்க அப்பா அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கினேன் ஆனா அவன் அவங்க அப்பா அம்மா கிட்ட பேசினதுல அவங்க அம்மா ஒத்துக்கல. இதுபோன்ற மனநிலையில காதல விட காமத்தை விட அன்பும் ஆதரவும் காட்ற ஒரு உறவு தான் ரொம்ப முக்கியமா பட்டது. ஆனா இவனும் நம்பிக்கை கொடுத்து ஏமாத்திட்டத்துல மனசு ரொம்பவே ஒடிஞ்சு போயிட்டேன். 

இது போன்ற விஷயத்தில் பிரச்சனை என்னன்னா அவங்க பலகீனமான மனதோடு நாம் இருக்கிறப்போ கொடுக்கிற நம்பிக்கை.  நம்ம எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வாழ்ந்துட்டு இருப்போம் ஆனால் அவங்களா வருவாங்க, கஷ்டத்தை  கேட்பாங்க, ஆறுதல் சொல்லுவாங்க, அரவணைச்சுப்பாங்க, திடீர்னு மேல இருந்து கீழ போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. ஏன் கையில் எடுத்தாங்க ஏன் அன்பு காட்டினார்கள், காயத்துக்கு மருந்து போடுறேனு வந்துட்டு அந்த காயத்தை இன்னும் நல்லா போட்டு குத்தி குத்தி கிளறி விட்டுட்டு போறாங்க அப்படின்னு மட்டும் புரியவே புரியாது. 

ஆனா உலகம் அந்த ஆண் பின்னாடி போயிட்டோம்னா அந்த அன்பை எதிர்பார்த்து உடம்பு அரிப்புக்கு அலைகிறோம்னு சொல்லும். ஒரு நாய் குட்டிக்கு பிஸ்கட் போட்டா வச்சுக்கோங்க அந்த நாய்க்குட்டி என்ன பண்ணும் அதுக்கப்புறம் எப்ப நீங்க கிராஸ் பண்ணினாலும் உங்க பின்னாடியே வாலை ஆட்டி சுத்தி சுத்தி வரும். ஏன்னா அன்புக்கு மட்டும் தான் ஏங்கி மனசு அல்லோல்கலப்படும். வாழ்க்கையில பலவீனமான நேரத்துல எப்படிப்பட்டவங்களும் வந்து நம்மள  ஈஸியா ஏமாத்திட்டு போயிடலாம். கலங்கிய குட்டையில மீன் பிடிக்கிறது தான் ஈஸி இல்லையா அதே போல தான் பெண் கஷ்டத்தில் இருக்கும் போது எளிதாக அவளை பலவீனமான நேரத்தில் ஆணால்  பயன்படுத்திக்கொள்ள‌ முடிகின்றது. 

யார்னே தெரியாதவங்க உடலை சிதைச்சிட்டு போனாங்கன்னா, நம்ம பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டவங்க மனசை உருக்குலைஞ்சுட்டு போயிடுறாங்க தேறவே முடியாதபடி.

சரி அப்பா அம்மா சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவங்க பார்த்த மாப்பிள்ளையையே பொண்ணு பார்க்க வர சம்மதிச்சேன். அவங்களும் வந்து பார்த்துட்டு போனாங்க. மாப்பிள்ளை நல்லா தான் இருந்தாரு நல்ல வேலையில இருந்தாரு நல்ல குடும்பம் தான் ஆனா எனக்கு கல்யாணம் பண்ணிக்க சுத்தமா விருப்பம் இல்லை. எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது நான் நார்மல் ஆகுறதுக்கு. 

ஆனா அந்த நேரத்தை எங்க அம்மா தர தயாராக இல்லை. அதனால நானே போன் பண்ணி அந்த மாப்பிள்ளை கிட்ட எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டேன். அவருக்கு திக்குவாய் இருந்திருக்குன்னு எனக்கு தெரியாது.  நான் அதனாலதான் அவர வேணான்னு சொல்றேன்னு சொல்லிட்டு அவரும் நாலு நாள் சாப்பிடாம இருந்திருக்காரு. 

அந்த வரன் கொண்டு வந்த தரகர் கிட்ட அவங்க அம்மா இதையெல்லாம் சொல்ல அவர் வந்து எங்க அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு. எங்க அம்மா என் மேல ரொம்ப கோபமாக அன்னைக்கு ராத்திரியே  வீட்டில் இருக்க கூடிய மாத்திரைகளை மொத்தமா போட்டுகிட்டு தற்கொலை பண்ணி முயற்சி பண்ணேன். 

நடுராத்திரி போட்டுக்கிட்டாலும் அதிகாலையில் அரை மயக்க நிலையில் மாத்திரைகளோடு இருக்கிறத பார்த்துட்டு கூட்டிட்டு போய் ஹாஸ்பிடல்ல வெச்சி என்னை காப்பாத்திட்டாங்க. ஆனாலும் சாகனும் என்ற எண்ணம் மட்டும் சுத்தமா போகவே இல்லை. அடிக்கடி வெவ்வேறு விதமா முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தேன். 

அப்புறம் எங்க சொந்தத்தில் ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து எனக்கு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே அவர்கிட்ட நானே எனக்கு நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன் அந்த நண்பன் வந்து பொண்ணு கேட்ட விஷயம் வரைக்கும்.

- தொடரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...