சருகுகளின் சபலங்கள்
பகுதி - 46
மனசிதைவு நோய்
Schizophrenia எனும் மனச்சிதைவு நோயும் மன அழுத்தமும் ஒன்றல்ல.
நமக்கு உடம்பு சரியில்லைனா எந்தந்த பகுதியில் பிரச்சினைகள்னு தெரிஞ்சு அதற்கு ஏற்ற ட்ரீட்மெண்ட் எடுத்துக்க முடியும். மனம் என்பது அப்படிப்பட்டது அல்ல.
மூளையில் டோபமைன் அதீதமாக சுரப்பதினால் ஏற்படும் நோய் இது.
இந்தியாவில் நூறில் ஒருவருக்கு இந்த மனச்சிதைவு நோய் இருப்பதாக கணக்கெடுப்பு சொல்கின்றது.
கஞ்சா மற்றும் பிற போதை பொருள்கள் உபயோகிப்பவர்களுக்கு இந்நோய் அதிகமாக வரும்.
ஆண், பெண் இருபாலரையும் இது சமமாகவே தாக்கும்.
இது தொற்று நோய் அல்ல.
மரபு வழியாக இந்நோய் வரலாம். இந்த நோய் புற சூழலில் ஏற்படும் கடும் மன அழுத்தத்தினாலோ அன்றி genetic மூலமாகவோ அதாவது மூதாதையர்களுக்கோ முன் தலைமுறையினர் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலோ இவர்களுக்கும் அதன் தாக்கம் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்கின்றார்கள் விஞ்ஞானிகள்.
மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சொல் வேறு செயல் வேறு எண்ணம் வேறு என்று இருப்பார்கள். பாதிப்பின் அளவீட்டை பொருத்து இவர்களது எண்ணமும் செயல்பாடும் மாறுபடும்.
உதாரணத்திற்கு இவர்களால் இவர்களது அன்றாட செயல்பாடுகளையே சரிவர செயல்படுத்த முடியாமல் இருப்பர்.
இன்னும் உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஆள வந்தான் படத்தில் மொட்டை கமலுக்கு ஏற்படும் நோயின் பெயர் தான் schizophrenia. அது உச்சகட்ட மனச்சிதைவு நோயின் அறிகுறி. அந்த படம் அந்த நோயின் தீவிரத்தை பற்றி தான் சொல்லியிருக்கும். படம் பெரும்பான்மையினவருக்கு புரிந்திருக்காது.
சைக்கோவும் மனச்சிதைவு நோயிற்கு ஆளானவரும் ஒன்றல்ல. பெரும்பாலும் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர் மற்றவர்களை விட தன்னைத் தான் அழித்துக் கொள்வது தான் அதிகம். அதீத பாதிப்பு ஏற்பட்டவர்களால் மட்டுமே பிறருக்கு பாதிப்புகள் ஏற்படும்.
மனச்சிதைவு நோய் வந்தவர்களுக்கான அறிகுறிகள்:
அவர்கள் நடவடிக்கையில் திடீரென்று மாற்றம் ஏற்படும்.
தனக்கு தானே அதிகம் பேசும் பழக்கம் அதிகரிக்கும், குழப்பமான சிந்தனை உடையவர்களாக இருப்பர், அடிக்கடி கை கழுவது அல்லது சுத்தம் பேணாமல் இருப்பது, தினமும் செய்யும் செயல்களில் கூட சுணக்கம் ஏற்படும், படிக்கும் மாணவர்களோ, வேலைக்கு செல்பவர்களோ அதை தொடர முடியாத மனநிலை ஏற்படுவது, தேவையற்ற சந்தேகங்கள் எழுவது, வீட்டை விட்டு எங்காவது சென்றுவிடும் மனநிலை அடிக்கடி ஏற்படுவது, தன்னை யாரோ பழி வாங்குவது போல், பின் தொடர்வது போல, வாழ முடியாமல் செய்வது போல் பிரஞைகள் ஏற்படும். இரவில் நெடுநேரம் தூக்கம் இன்றி அவதிப்படுவதும், பகலில் உறங்குவதும் ஒழுங்கற்ற தன்மையும் இவர்கள் வாழ்வில் காணப்படும். அவர்களை பொருத்தவரை அது நிஜமும் கூட.
மனச்சிதைவு நோய் என்பது பைத்தியம் அல்ல. Bipolar or multipersonality disorderம் அல்ல.
இந்த நோய் வந்தவர்களை ஒரு நல்ல சைக்கியார்டிஸ்ட்டிடம் சென்று மருந்து உட்கொள்ள செய்தால் மூளையில் சுரக்கும் ரசாயனம் குறைந்து அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவர்.
மருந்து உட்கொள்வதால் அதீத தூக்கமும், அதிக பசியும் உண்டாகும். அதன் பொருட்டு உடல் எடை கூடுவதும் ஏற்படலாம்.
தகுந்த மனப்பயிற்சி, யோகா, தியானம், ஆரோக்கியமான நல் உணவுகள் அவர்களை மற்ற மனிதர்களை போல இயல்பான வாழ்க்கைக்கு திருப்பும்.
Schizophreniaவில் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் மருந்து உட்கொள்வது அவசியம். இந்தியாவில் நூறில் ஒன்று என்ற கணக்கெடுப்பு இரண்டு என்று கடந்த ஐந்து வருடங்களில் மாறிவிட்டதற்கு சோஷியல் மீடியாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்கிறார்கள் மனோதத்துவியலார்கள்.
எதையும் அளவாக பயன்படுத்துவது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது.
நன்றி: வணக்கம்மும்பை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக