சருகுகளின்_சபலங்கள்
பகுதி - 26
தலைப்பு : உணர்வுப்பேழை
# வணக்கமும்பையில் எனது இந்த வார பதிப்பு.
எனக்கு வாழவே விருப்பம் இல்லை லட்சுமி. ஒவ்வொரு நாளும் ஏன்டா உயிரோடு இருக்கிறோம் என்று இருக்கு. நான் என்ன அவ்ளோ பாவம் பண்ணவளா. ஏன் இவ்ளோ அவமானம், ஏன் இவ்ளோ கஷ்டம். சுத்தி சுத்தி ஏன்டா இருக்கிறோன்றளவு காயப்படுத்திக்கிட்டே இருக்காங்க மனுஷங்க.
உனக்கே என்னைப் பத்தி நல்லா தெரியும். சின்ன வயசுல இருந்து அப்பா சரி இல்லனாலும் அம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாங்க. எவ்வளவோ கஷ்டம் என்றது உனக்கு நல்லாவே தெரியும் ஒவ்வொரு நாளும் தவம் போல தானே வாழ்ந்தோம்.
காலேஜ் போயிட்டு வேலைக்கு போற வரைக்குமே நான் எந்த ஆசா பாசத்துக்காவது இடம் கொடுத்திருக்கேனா, குடும்ப கஷ்டம் புரிஞ்சு தானே நடந்து கொண்டேன். அப்படி கஷ்டப்படும்போது தோணும். சின்ன வயசுல கஷ்டப்பட்டா பெரிய வயசுல சந்தோஷமா இருப்போம் அப்படின்னு பெரியவங்க சொன்னதை நம்பி நாம சந்தோஷமா இருப்போம் இப்ப கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை அப்படின்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு.
ஆனா எல்லாமே ஒரு நாள் தலைகீழா மாறிப்போச்சு. ஒரு நாள் வேலைக்கு போயிட்டு ராத்திரி வரும்போது முகம் தெரியாத நபர்களால பலவந்தப்படுத்தப்பட்டேன். அதுக்கு மேல அங்க வேலை பார்க்க முடியாம சொல்லாம கொள்ளாம வேலையை விட்டுட்டு ஊருக்கு போயிட்டேன். அம்மா ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டவங்க அவங்களுக்கு இதுக்கு மேலேயும் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு அதை நான் சொல்லவும் இல்லை. இது போன்ற விஷயத்தை என்னனு சொல்லுறது. நானே கொஞ்சம் கொஞ்சமா அந்த வலியில் இருந்து வெளி வந்துட முயற்சி செய்து செய்து தோத்துக்கிட்டே இருந்த காலகட்டம் அது. நான் சொல்லலன்னாலும் யாரோ செஞ்ச தவறுக்கு எனக்கு கடவுள் தண்டனை கொடுத்துட்டாரு. காலத்துக்கும் கண்ணீர் விட்டு அழும் தண்டனை. ஆமா நான் இரண்டரை மாதங்கள் கற்பமாக இருந்தேன்.
வாழ்க்கையில செத்து பார்த்தால் தான் சாவோட வலி புரியும்பாங்க. அதுபோல செக்வல் அசால்ட் நடந்தா கூட ப்ரெக்னன்ட் ஆகும் அப்படி என்ற ஒரு பிரஞை கூட இல்லாம உயிர் வெறுத்த நிலையில இருந்தேன். சுருகாட்டுக்கு போய் இருந்தா தானே அதன் வலி புரியும். அந்த மாதிரி. சாகற வரை ஒரு பொண்ணுக்கு கடவுள் கொடுக்கவே கூடாதா வலினா அது இதுவா தான் இருக்கும். அந்த கடவுள் என்னை வஞ்சித்தான். நான் அவனை முழுவதுமாக மனதிலிருந்து தூக்கி எறிந்தேன்.
சின்ன வயசுல இருந்து எந்த வித ஆசா பாசத்துக்கும் இடம் கொடுக்காமல் வாழ்ந்து என்ன பிரயோஜனம் கடவுள் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாரு.
எத்தனை நாள் தூக்கத்தில் அலறி விழித்தேன் என்பதெல்லாம் கொடுமை. பதினைந்து வருடமாகிவிட்டது இன்று வரை தூக்கத்தில் எழுந்து பயந்து கத்துவேன்.
பொண்ணா பொறந்தது என் குத்தமா. இந்த ஆண்கள் ஏன் எப்பவுமே ஈவு இரக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த உலகமும் ஆண் என்ன பண்ணாலும் ஏன் எல்லா தப்புக்கும் ஒத்து ஊதுது. அனுசரிச்சு போக சொல்லுது. அவர்களை சப்போர்ட் பண்றதுக்கு ஒரு பெரும் கூட்டமே இருக்கு.
ஆண் தப்பே செஞ்சாலும் பிளேபாயா இருந்தாலும் ஒழுக்கம் கெட்டவனா இருந்தாலும் குடிகாரனா இருந்தாலும் முடிச்சவிக்கி இருந்தாலும் மொள்ளமாரியா இருந்தாலும் அவனை எப்படியாவது இந்த சமூகம் காப்பாத்துது.
ஆனா பொண்ணு தனக்கே தெரியாமே தனக்கு எத்தனை விதமான கொடுமைகள் நடந்தாலும் அதன் மூலமா அவளுக்கு ஏதாவது நடந்தாலும் இந்த உலகத்துல அத்தனை வித கேவலங்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கு. அவமானங்களை சந்திக்க வேண்டியதிருக்கு.
அதுக்கப்புறம் நிறைய அவமானங்களும் பட்டேன் அபார்ஷன் பண்ணாங்க. கல்யாணம் ஆகாம குழந்தை கன்சீவ் ஆகி அதை கலைக்கறது எல்லாம் எவ்வளவு கொடுமை. ரணம்.
வாழ்க்கையில எதுவுமே வேண்டாம்னு இருந்தேன். செத்துப் போயிடலாம் என்று தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தது மனசு. கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்ற கட்டாயத்தை குடும்பம் உருவாக்குச்சு.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக