ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

சருகுகளின் சபலங்கள் பகுதி - 51 Gaslighter

சருகுகளின் சபலங்கள் 

பகுதி - 51

Gas lighter

உங்கள்  பேச்சு, சிந்தனை, செயல் இவை எல்லாம் சரியாகவே இருப்பினும் அது தவறு என்று சொல்லி உங்களையே நம்ப வைப்பதுதான் gas lighting. 

Gas lighting என்ற வார்த்தை ஒருவரின் நினைவாற்றலை, யதார்த்தத்தை ஏமாற்றுவதை குறிப்பிடும் வார்த்தை. 

இன்னும் விளக்கி சொல்லப்போனால் manipulative behaviour மற்றும் emotional abuserஐ குறிப்பிடக் கூடிய வார்த்தை. 

1944ல் Gaslight என்ற படத்தில் narcissistic behaviour கொண்ட கணவன் அவளை எமோஷனல் அபியுஸ் செய்வான். Physical abuseஆவது வெளியே தெரியும். எமோஷனல் அபியூஸ் என்பது ஒருவரின் மனநிலையையே inability ஆக செய்து மனநோயாளி ஆக்குதல். 

உதாரணத்திற்கு அந்த கணவன் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளின் ஒளியின் வீரியத்தையும் குறைத்து வைத்திருப்பான். 

அவள் கேட்பாள், ஏங்க ஏன் நம்ம வீட்டில் வெளிச்சம் மட்டும் குறைவாக இருக்கிறது என்று. அவன் சொல்வான் இல்லையே நல்லா brightஆ தானே இருக்கு. உனக்கு தான் ஏதோ பிரச்சினை என்று. இதே போல் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அவள் மீது அவள் நினைவின் மீது இயல்பின் மீது தான் குற்றம் இருப்பதாய் அவளையே நம்ப வைப்பதால் அவளை ஒன்றுமே இல்லாமல் செய்வது. அந்த படத்தில் தான் இந்த எமோஷனல் அபியூஸை பற்றி முதன் முதலில் சித்தரித்ததால் emotional abuse செய்யும் narcissistic behaviour கொண்டவரை gas lighter என்ற சொல்லாடல் வந்தது.  

2010ன் மத்தியில் இந்த வார்த்தை மிகவும் பிரபலம். 

ஆனால் இது முதன் முதலில் தோன்றியது ஒரு மேடை நாடகத்தில் 1938 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் த்ரில்லர் நாடகமான பேட்ரிக் ஹாமில்டனின் கேஸ் லைட் ஆகும், இதுவே பின்னர் 1944 இல் அமெரிக்காவில் ரீமேக் செய்யப்பட்டது. 

விக்டோரியா காலத்தில் லண்டனின் மேல்தட்டு மக்களிடையே  வெளித்தோற்றத்தில் பண்பான கணவன் தன் மனைவியைத் தனிமைப்படுத்தவும், அவளிடம் இருந்து திருடலாம் என்பதற்காக அவள் மனநலம் சரியில்லாமல் இருக்கிறாள் என்று அவளை வற்புறுத்தவும் பொய்கள் மற்றும் சூழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறான். 

ஆக இந்த gas lighting என்பது வெறும் கணவன் மனைவிக்குள் மட்டும் நிகழ்வதில்லை. பெரும்பான்மையாக intimate relationshipல் நிகழக்கூடியது. வெறும் பணத்திற்காக மட்டுமே இதை ஒரு சிலர் நிகழ்த்துவதில்லை. ப்ளே பாய்களாக இருக்கும் பெரும்பாலான ஆண்களிடம் இது போன்ற narccistic behaviour இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றது. இவர்கள் பெரும்பாலும் பேச்சில் வல்லவர்களாக இருப்பார்கள். 

எல்லாரிடமும் இவர்களுடைய சுயரூபத்தை இவர்கள் காண்பிப்பதில்லை. அதிகபட்சமாய் மனைவி அல்லது காதலிகள். இந்த குணம் கொண்டவர்களிடம் இருக்கும் பெரும் ப்ளஸ் இவர்கள் உறவில் எடுக்கையில் பெண்ணை அத்தனை கொண்டாடுவார்கள். உறவில் எடுக்கையில் மறுக்க முடியாத நேர்மையாளனின் முகமூடி அணிந்திருப்பார்கள்‌. காதலிலும் சரி காமத்திலும் சரி பெண்ணுக்கு முக்கியத்துவம் தருபவர்களாய் திகழ்வார்கள். நாளாக ஆக அவர்கள் சுயரூபம் வெளிப்படும்.

எல்லா உறவுகளிலும் பழக பழக பாலும் புளிக்கும் தானே. தவறுகள் செய்யாதவர்கள் யார். ஆனால் இவர்களின் சூழ்ச்சுமம் இவர்களின் தவறுகளையும் எதிராளியின் மீதே திணிப்பது தான். அவர்களின் தவறுகளை கடைசிவரை அவர்கள் புரிந்துக் கொள்ளவும் மாட்டார்கள். நீ இப்படி நடந்துக்கிட்டே அதனால் தான் நான் அப்படி நடந்துக்க வேண்டியதாக போச்சு என்று கூறுவதில் எதிராளியும் ஆமாம் நம்ப தப்பு தான் அவன் சரியா தான் இருக்கிறான் என்று தன்னை தானே நொந்துக் கொள்ளுமாறு செய்வார்கள்.

எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அம்மு என்ற படத்தில் வரும் போலிஸ் கதாபாத்திரத்தில் வரும் கணவன் பொதுமக்களுக்கு நன்றாக சேவை செய்வதும், பிற பெண்களை மதிப்பதும் என்று இருப்பான். 

ஆனால் அதில் physical abuse காட்டப்படுகிறது. Physical abuse இல்லாமலும் எமோஷனல் அபியூஸ் செய்யப்படும். உதாரணத்திற்கு தன் நட்பு கூட்டத்தில் பெண்டாட்டியை கிண்டலடிப்பான். உணவு சரியான நேரத்திற்கு வராததை கண்டு அவளை அபியூஸ் செய்ய ஆரம்பிப்பான்.

அவள் தன் அன்பு போதாமையால் தான் கணவன் அப்படி நடந்துக் கொள்கின்றான் என்று எண்ணி அவனை திருப்திப்படுத்த முயன்று தோற்றுப் போவாள்.

இந்த gas lighterஆல் பாதிக்கப்படும் மனிதருக்கு ஏற்படும் மாபெரும் பிரச்சினை என்னவென்றால் தன்னம்பிக்கை உடைந்து ஒன்றும் இல்லாமல் போதல். அந்த உறவை நாம் ஒழுங்காக நடந்துக் கொண்டால் சரியாக போய்விடும் என்று நம்பி தன்னை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முனைதல். எவ்வளவு மாற்றிக் கொண்டாலும் அவன் ஏதோ ஒரு குறை சொல்லி மட்டம் தட்டத் தான் போகிறான் என்பதை அறியாமல் மனச்சிதைவுக்கு ஆளாதல். முன்னாடி அவன் என்னை கொண்டாடினானே இப்போது ஏன் இத்தனை குற்றம் குறை கூறுகிறான் நாம் தான் சரியில்லையோ என்ற எண்ணத்தை பாதிக்கப்பட்ட நபருக்கே‌ வர செய்தல். இது ஒரு வகையில் ஒரு உயிரை அடிமைப்படுத்தி அவர் தனக்காக கண்ணீர் விடுவதை கண்டு ஆனந்தம் கொள்ளும் குரூர மனநிலை கொண்டவனாக இருப்பார்கள் இந்த gas lighters. 

எந்தளவிற்கு இவர்களிடையே distance make செய்கின்றீர்களோ அந்தளவிற்கு  நல்லது.

அடுத்த வாரம் ஒரு case studyயோடு இதை விளக்குகிறேன்.

நன்றி: #வணக்கம்மும்பை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...