சருகுகளின் சபலங்கள்
பகுதி - 50
Whamen are toxic
என்னடா பதிவின் தலைப்பே இப்படி இருக்கின்றதே என்று நீங்கள் ஐயமுறலாம்.
நீங்கள் படித்த வரிகள் சரியானதே. பெரும்பான்மையான சுயமற்ற பெண்கள் விஷத்தன்மை மிக்கவர்கள். தன்னோடு பழகுபவர்களையே தன் தேவைகளுக்காக ஆசைகளுக்காக பலி கொடுக்க தயங்காதவர்கள் என்கின்றது உளவியல்.
சுயமற்ற பெண்களுக்கு எப்போதுமே ஒரு insecured feel இருந்துக் கொண்டே இருக்கும். அதன் பொருட்டே தன் வாழ்வில் சம்பந்தமேப்படாதவர்களை கூட அவர்களால் வார்த்தைகள் கொண்டே கொலை செய்துவிட முடியும்.
பாலின பேதத்தில் ஏன் பெண் இரண்டாம் இடத்தில் பெண் இருக்கிறாள் என்று சொல்லுங்கள். சக பெண் உயரத்திற்கு செல்வதை அவளால் சகித்துக் கொள்ளவே முடியாது. பெண்கள் உயரம் செல்ல செல்ல அவள் தனிமைப்படுத்தப்படுவாள் சக பெண்களால். அவதூறுகளால் அவமானங்களால் சக பெண்களாலே நொறுக்கப்படுவாள்.
ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவியை கழட்டிவிட ஹன்ஸிகா கேரக்டர் அவனுக்கு பெண் பார்க்கும் படலம் இருக்கின்றது பாருங்கள். அவன் நல்லவன் வல்லவன் என்று கூவி கூவி விற்க பார்ப்பாள். ஆனால் அதைப் பார்க்கையிலேயே எனக்கு ஒரு விஷயம் தோன்றியது.
இங்கு பெரும்பாலான பெண்கள் ஒருவன் நல்லவன் அவன் கூட பழகு என்றால் பழகமாட்டார்கள். இதுவே ஒருவனை கெட்டவன் அவன் ஒரு ப்ளே பாய் என்று சொல்லித் தான் பாருங்களேன். வரிசையில் நிற்பார்கள்.
ஒரு ஆண் மோசமானவன் என்று சுயமற்ற பெண்களிடம் சென்று சொல்லித் தான் பாருங்களேன். அறிவை கழட்டி வைத்துவிட்டு பின்னோடே போய்விடுவாள்கள். நாம் தான் ஏமாந்துவிட்டோம் அடுத்த பெண்கள் ஏமாறக்கூடாது என்ற கருணையுடன் நீங்கள் சென்று சொல்வீர்கள். ஆனால் அவர்களோ ஒன்று எனக்கு அந்த அறிவு கூட கிடையாதா என்ன? இவள் வந்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நினைத்து சொல்லியவளை அவமானப்படுத்துவதும் அந்த ஆணிடமே சென்று அவள் உங்களை இப்படி சொன்னால் என்று போட்டுக் கொடுப்பதும் நடக்கும். இப்படி போட்டுக் குடுத்தே காதலை துவங்கிடும் பலே கில்லாடிகளும் உண்டு.
சுயமுடைய பெண் என்ன செய்வாள், நிதானிப்பாள். அவன் செயல்களை கவனிப்பாள். எதற்கும் இருக்கட்டும் என்று அவனை தூர நிறுத்துவாள்.
ஆனால் இதிகாசங்களில் இருந்து இன்றுவரை குண்டலகேசி போன்ற முட்டாள்களால் நிறைந்தது இந்த உலகம்.
திருடன் என்று தெரிந்தும் திருடனை விரும்பி திருமணம் செய்துக் கொண்டவள் குண்டலகேசி. பிற்பாடு வேறு ஒரு பெண்ணுக்காக அவளையே அந்த கணவன் கொலை செய்ய துணிகையில் தான் மூளை விழித்துக் கொண்டு அவனை கொன்று தான் சந்நியாசம் செல்வாள்.
இங்கு பெண்ணுக்கு நல்லவன் தேவையே இல்லை. ஏமாற்றுபவன் மட்டுமே அவள் திருட்டுத்தனமான பாலியல் இச்சைக்கு தேவைப்படுகிறான். நல்லவனை கை விட்டு கெட்டவன்பால் வீழ்ந்து வீணாப் போன பல கதைகள் அறிந்திருந்தாலும் ப்ளே பாய்களுக்கு இருக்கு மவுஸு குறைவதாயில்லை.
இதே ஒரு பெண் ப்ளே கேர்ளாக இருந்தால் அவளை தே*வடியா என்று விளிக்கும் உலகம் ப்ளே பாய்களை, ப்ளே காட்களாக குருக்களாக மன்மதக்குஞ்சுகளாக மரியாதை செலுத்திக் கொண்டிருப்பது எல்லாம் காலங்காலமாக நிகழும் கொடூரம்.
ஒரு ஆண் அழுதால் முந்தானையை அவிழ்த்து துடைக்க தயாராகும் இது போன்ற பெண்கள் சக பெண்கள் வீழ்வதற்கே பெருங்காரணமாக இருக்கின்றார்கள். பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை சூழ்ச்சியின் மூலம் வீழ்த்துவதில் வல்லவர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. பெண்கள் ஏன் சமையல் அறையிலேயே முடங்கிப் போய்விடுகிறார்கள் என்ற என் பல நாள் ஆராய்ச்சியில் எனக்கு கிடைத்த விடை... முயற்சியின்மை, சொகுசு வாழ்க்கை, உழைக்க சோம்பேறித்தனம், பிரச்சினைகளை எதிர்கொள்ள திராணியின்மை என்பதை எல்லாம் தாண்டி இவர்கள் சக பெண்களை வீழ்த்தும் பாலிடிக்ஸ். பெண்கள் ஆண்களிடம் போராடுவதை விட சக பெண்களிடம் தான் அதிகம் போராட வேண்டும்.
ஒரு பெரும் சுயமற்ற பெண்கள் கூட்டத்தை எதிரியாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் ஒன்றும் செய்ய வேண்டாம் ஒரு கேடு கெட்ட ப்ளே பாயை எதிர்த்துக் கொண்டால் போதும். மொத்தமாய் கூடி கும்மியடித்து அழித்துவிட்டு போய்விடுவார்கள்.
சக பெண் உடை உடுத்துவதில் இருந்து முடி கலைவது வரை உன்னிப்பாக குற்றம் கண்டுபிடித்து குற்றவாளிகள் ஆக்கிவிட இவர்களால் முடியும்.
இதில் மட்டுமல்ல பெரும்பாலான விஷயங்கள் பெண் இதை எல்லாம் செய்யலாம் இதை எல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டமைப்புகளை உருவாக்குவதே பெரும்பான்மையாக பெண்கள் தான். ஆனால் ஆண் என்ன வேண்டுமானால் செய்யலாம். அடுத்தவன் பொண்டாட்டியை ஏமாற்றும் ஏகப்போக உரிமை அவனுக்கு உண்டு. ஒரே ஆணின் பின்னால் ஒன்பது பெண்கள் வெட்கமின்றி சுற்றுவதை பெருமையாக நினைப்பார்கள். காதலின் பொருட்டு சக தோழியின் கழுத்தறுத்து போடும் கலைகள் அறிந்தவர்கள் இது போன்ற பெண்கள். பெண் என்றென்றும் இது போன்ற பதர்களால் இரண்டாம் பாலினம் தான்.
சுயமிக்க அறிவார்ந்த தன்னம்பிக்கை பெண்கள், ஒரு பெண்ணை வெறுப்பேற்றுவதற்காக வதைப்பதற்காகவோ எந்த ஒரு ஆணையும் ஆதரிப்பவளாகவோ ஆராதிப்பவளாகவோ இருக்கமாட்டாள்.
நெருப்பை தலைக்கீழாக பிடித்தாலும் மேல் நோக்கித் தான் எரியும் அது போல உண்மையும் நேர்மையையும் கடைபிடிக்கும் பெண்கள்.
ஆக நேர்மையான சுயமரியாதை பெண்களை women என்றும் சக பெண்களை அவமானத்திற்குள் தள்ளும் பெண்களை whamen என்றும் அழைக்கலாம் தவறில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக