ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 52

வெறுப்புணர்வு ஏன்?

திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும் அதே பெண்ணுடன் EMAவில் இருந்த ஆணிடம் வருவதில்லையே ஏன்?

அந்த கோவத்தை காட்ட அந்த பெண்ணை அதிகமாக புறக்கணிக்கவும் , அவங்களை பாக்குற இடத்தில் எல்லாம் எரிச்சலாய் பேசவும் தோன்றுகின்றதே ஏன்? என்று கேட்டாள் தோழி ஒருத்தி.

அவள் மட்டுமல்ல நிறைய பெண்களிடம் இதே தெளிவற்ற குணாதிசயத்தை பார்த்து இருக்கிறேன். 

முதல் விஷயம் ரொம்ப சிம்பிள் உலகில் எந்த உயிரினமும் தன்னை விட பலம் பொருந்திய ஒன்றிடம் தன் வெறுப்பை காண்பிப்பதில்லை. அதை எப்படியாவது தடவிக் கொடுத்து வாலாட்டச் செய்ய ஆசைப்படுவதின் ஆழ்மன நீட்சியே அது. அதன்படி பெரும்பாலும் பெண்கள் தான் சக பெண்களின் மீது வெறுப்பை கக்குவதும், ஆணிடம் தாழ்ந்து போக தயாராக இருப்பதும், அவர்கள் தான் ஒரு இரண்டாம் பாலினம், ஆணை விட பெண் வலிமை குறைந்தவள் என்று நம்புவதாலும் தாழ்மை உணர்ச்சியாலும் எண்ணத்தினாலும்  தான். 

இரண்டாவது ஒழுக்கம் என்பது பெண்ணுக்கானது மட்டும் தான் என்பது நம் மனதில் காலம் காலமாக DNAவிலும் ஜீனிலும் ஊறிப் போன விஷயம்.

தசரத ராஜாக்கள் அறுபதாயிரம் திருமணம் கூட செய்துக் கொண்டு வாழ முடிந்தது. ஆனால் இன்று வரை ஒரே ஒரு திரௌபதி தான். அதிலும் ஐவரை திருமணம் செய்துக் கொண்டதன் பொருட்டு அவள் பட்ட பாடுகள் ஏராளம். 

ஒரே உயிரினத்தில் men polygamyயாகவும், women monogamyயாகவும் அந்த காலக்கட்டத்தில் இருந்ததின் காரணம் என்ன? 

அந்த காலக்கட்டத்தில் போருக்கு போகும் பெரும்பாலான வீரர்கள் மடிந்துவிட ஒரு ஆணுக்கு சமமாக பெண் என்ற விகிதாச்சாரம் குறைந்து ஒரு ஆணுக்கு பல பெண்களை கட்டி வைக்க வேண்டிய சூழல். ஆண் விகிதாச்சாரம் குறைந்தும், பெண் விகிதாச்சாரங்கள் அதிகரித்ததின் போனதின் விளைவு அது.

உடலியல் ரீதியாக At a time,  ஒரு ஆணால் புணர்வின் மூலமாக நிறைய பெண்களை ஆர்கஸம் செய்ய முடியாது. If he ejaculated அவ்வளவு தான். மீண்டும் சிறிது நேரம் பிடிக்கும் அவன் தயாராக. அதற்கு பின்பும் இரண்டு முறை தான். ஆனால் பெண்ணின் உடல் அடுத்தடுத்து இரண்டு மூன்று ஆணின் உடலிற்கு ஆர்கஸம் தரும் வலிமை பெற்றது. இதை எல்லாம் நான் மட்டுமே சொல்லலை. பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. 

என் கேள்வி எல்லாம் ஒன்று தான், பெண் monogamyயாக இருக்க வேண்டும் என்று  வலியுறுத்துபவர்கள், இந்த காலக்கட்டத்திலும் polygamyயாக இருப்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆண் ஒழுக்கமற்ற இருக்கலாம் என்ற ஆணாதிக்க சிந்தனையின் அடித்தளம் தான் ஒரு பெண் ஏமாந்துட்டேனு சொன்னா அந்த பெண்ணை கேவலமாக பேசி காரி துப்பிவிட்டு, ப்ளே பாய்க்கு request கொடுத்தும், அவனுக்கு ஆசையாய் கமெண்ட் பண்ண கூடிய பெண்கள் அதிகம் தான் இங்கே. 

அதன் பொருட்டே EMAவில் ஈடுபடும் ஆணை ஆண் பாவம் இவள் இவ உடம்பை காண்பிச்சு மயக்கி இருப்பா என்று பெண்ணை குற்றவாளி ஆக்குகிறாள்கள். அவன் தான் ஆம்பிளை தடுமாறிட்டான், இவளுக்கு எங்கே புத்தி போச்சு என்று ஏசுகின்றார்கள். இங்கு பெண் மட்டுமே உணர்வை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆண் அப்படி தான் இருப்பான் என்ற கூற்றில் ஆண் என்றால் ஒழுக்கம் கெட்டு இருக்கலாம் தவறில்லை என்ற கூற்றும், அவன் தவறு செய்வதற்கான அத்தனை உரிமையும் அவனுக்கு இருப்பதாய் காலங்காலமாக சமூகத்தில் கட்டமைக்க பட்டிருக்கின்றன. 

பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள பெண் ஐம்பது வயது ஆணிடம் ஏமாந்தால் கூட அவளுக்கு எங்கே போச்சி புத்தி என்ற அதே கதை தான்.  பக்கம் பக்கமாக அறிவுரையையும் அவதூறுகளையும் அள்ளி வழங்க தயாராக இருக்கின்றோம்.

ஒழுக்கம் என்பது இரு சாராருக்கும் பொதுவானது என்பதை நம் ஆழ்மன ஜீன்கள் நம்புவதில்லை. ஒழுக்கம் என்பது காலம் காலமாக பெண்களுக்கானது என்று நம்புவதால் தான் சீதைகளை தீக்குளிக்க செய்ததில் இருந்து இன்று virginity test வரை பெண்ணுக்கான உடல் உள சோதனைகளை வைத்து வதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

ஒரு ஆண் ப்ளே பாய் என தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளலாம். அது அவனின் ஆண்மை என்று எண்ணும் உலகம்.

ஆக இந்த சமூகத்தில் ஆண் ஒழுக்கமானவனாக இல்லாமல் இருந்தாலும் அவனை பரிபூரணமான அன்புடன் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றீர்கள். இதை செய்வது பெரும்பாலான பெண்கள் தான். 

பலம் பொருந்தியதாய் நீங்கள் கருதும் ஒன்றின் மேல் உங்களால் எந்த விதத்திலும் எதிர்ப்பை காட்ட முடியாது. நீங்கள் ஆல்பா பீமேலாக இருந்தால் மட்டுமே பலம் பொருந்திய ஒன்றையும் எதிர்க்கும் துணிவு வரும். 

மனிதன் காலங்காலமாக தன்னை விட பலம் பொருந்திய ஒன்றிடம் தடவிக் கொடுத்து தான் காரியம் சாதிக்க விரும்புவான். 

ஒண்ணும் வேண்டாம், பேங்க்ல வெகு சாதாரண மிக சொற்ப பணத்தை கட்ட முடியாதவனை இந்த பேங்குகள் நடத்தும் விதமும், அதிக பணத்தை திருப்பி கட்ட முடியாதவனை நடத்தும் விதமுமே அதற்கு சாட்சி.

தன் கணவனோ, காதலனோ, தனக்கு பிடித்தவனோ இன்னொருத்தியோடு கூடிய களித்திருந்தான் என்று தெரிந்தால் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை தான் நீங்கள் அதீதமாய் வதைப்பீர்கள். ஆணுக்கு எப்போதும் சிவப்பு கம்பளத்தை தான் பெரும்பாலும் உங்களால் விரிக்க முடியும். 

எந்த ஒரு பெண்ணோடு ஆண் கள்ள உறவில் இருந்தான் என்று தெரிந்தாலும் உங்கள் மனம் பெண்ணை கேவலமாக பேசி ஆணுக்கு ஆதரவாக போகின்றதோ தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை இரண்டாம் பாலினமாக கருதும் பெண் தான். You may be beta or omega. எத்தனை புரட்சி பேசினாலும் சரிசமமாக நியாயம் எது அநியாயம் எது என்று உங்களால் பிரித்து பார்த்து எடை போட முடியவில்லை என்றால் நீங்கள் பெண்ணாய் பிறந்திருந்தாலும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர் தான் என்பதில் ஐயமில்லை. 

வெறுத்தால் இருவரையும் சரிசமமாக வெறுத்து விடுங்கள். ஆதரித்தால் இருவருக்கும் சரிசமமாக ஆதரவு தாருங்கள். ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் என்பது சமூகத்தில் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் கொண்டு வராது. மென்மேலும் ஆண்கள் தவறுகள் செய்துவிட்டு உங்கள் பாவாடைக்குள் குளிர்காய்வதை தவிர வேறு எதுவும் நிகழவே நிகழாது.

நன்றி: #வணக்கம்மும்பை

சருகுகளின் சபலங்கள் பகுதி - 51 Gaslighter

சருகுகளின் சபலங்கள் 

பகுதி - 51

Gas lighter

உங்கள்  பேச்சு, சிந்தனை, செயல் இவை எல்லாம் சரியாகவே இருப்பினும் அது தவறு என்று சொல்லி உங்களையே நம்ப வைப்பதுதான் gas lighting. 

Gas lighting என்ற வார்த்தை ஒருவரின் நினைவாற்றலை, யதார்த்தத்தை ஏமாற்றுவதை குறிப்பிடும் வார்த்தை. 

இன்னும் விளக்கி சொல்லப்போனால் manipulative behaviour மற்றும் emotional abuserஐ குறிப்பிடக் கூடிய வார்த்தை. 

1944ல் Gaslight என்ற படத்தில் narcissistic behaviour கொண்ட கணவன் அவளை எமோஷனல் அபியுஸ் செய்வான். Physical abuseஆவது வெளியே தெரியும். எமோஷனல் அபியூஸ் என்பது ஒருவரின் மனநிலையையே inability ஆக செய்து மனநோயாளி ஆக்குதல். 

உதாரணத்திற்கு அந்த கணவன் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளின் ஒளியின் வீரியத்தையும் குறைத்து வைத்திருப்பான். 

அவள் கேட்பாள், ஏங்க ஏன் நம்ம வீட்டில் வெளிச்சம் மட்டும் குறைவாக இருக்கிறது என்று. அவன் சொல்வான் இல்லையே நல்லா brightஆ தானே இருக்கு. உனக்கு தான் ஏதோ பிரச்சினை என்று. இதே போல் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அவள் மீது அவள் நினைவின் மீது இயல்பின் மீது தான் குற்றம் இருப்பதாய் அவளையே நம்ப வைப்பதால் அவளை ஒன்றுமே இல்லாமல் செய்வது. அந்த படத்தில் தான் இந்த எமோஷனல் அபியூஸை பற்றி முதன் முதலில் சித்தரித்ததால் emotional abuse செய்யும் narcissistic behaviour கொண்டவரை gas lighter என்ற சொல்லாடல் வந்தது.  

2010ன் மத்தியில் இந்த வார்த்தை மிகவும் பிரபலம். 

ஆனால் இது முதன் முதலில் தோன்றியது ஒரு மேடை நாடகத்தில் 1938 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் த்ரில்லர் நாடகமான பேட்ரிக் ஹாமில்டனின் கேஸ் லைட் ஆகும், இதுவே பின்னர் 1944 இல் அமெரிக்காவில் ரீமேக் செய்யப்பட்டது. 

விக்டோரியா காலத்தில் லண்டனின் மேல்தட்டு மக்களிடையே  வெளித்தோற்றத்தில் பண்பான கணவன் தன் மனைவியைத் தனிமைப்படுத்தவும், அவளிடம் இருந்து திருடலாம் என்பதற்காக அவள் மனநலம் சரியில்லாமல் இருக்கிறாள் என்று அவளை வற்புறுத்தவும் பொய்கள் மற்றும் சூழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறான். 

ஆக இந்த gas lighting என்பது வெறும் கணவன் மனைவிக்குள் மட்டும் நிகழ்வதில்லை. பெரும்பான்மையாக intimate relationshipல் நிகழக்கூடியது. வெறும் பணத்திற்காக மட்டுமே இதை ஒரு சிலர் நிகழ்த்துவதில்லை. ப்ளே பாய்களாக இருக்கும் பெரும்பாலான ஆண்களிடம் இது போன்ற narccistic behaviour இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றது. இவர்கள் பெரும்பாலும் பேச்சில் வல்லவர்களாக இருப்பார்கள். 

எல்லாரிடமும் இவர்களுடைய சுயரூபத்தை இவர்கள் காண்பிப்பதில்லை. அதிகபட்சமாய் மனைவி அல்லது காதலிகள். இந்த குணம் கொண்டவர்களிடம் இருக்கும் பெரும் ப்ளஸ் இவர்கள் உறவில் எடுக்கையில் பெண்ணை அத்தனை கொண்டாடுவார்கள். உறவில் எடுக்கையில் மறுக்க முடியாத நேர்மையாளனின் முகமூடி அணிந்திருப்பார்கள்‌. காதலிலும் சரி காமத்திலும் சரி பெண்ணுக்கு முக்கியத்துவம் தருபவர்களாய் திகழ்வார்கள். நாளாக ஆக அவர்கள் சுயரூபம் வெளிப்படும்.

எல்லா உறவுகளிலும் பழக பழக பாலும் புளிக்கும் தானே. தவறுகள் செய்யாதவர்கள் யார். ஆனால் இவர்களின் சூழ்ச்சுமம் இவர்களின் தவறுகளையும் எதிராளியின் மீதே திணிப்பது தான். அவர்களின் தவறுகளை கடைசிவரை அவர்கள் புரிந்துக் கொள்ளவும் மாட்டார்கள். நீ இப்படி நடந்துக்கிட்டே அதனால் தான் நான் அப்படி நடந்துக்க வேண்டியதாக போச்சு என்று கூறுவதில் எதிராளியும் ஆமாம் நம்ப தப்பு தான் அவன் சரியா தான் இருக்கிறான் என்று தன்னை தானே நொந்துக் கொள்ளுமாறு செய்வார்கள்.

எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அம்மு என்ற படத்தில் வரும் போலிஸ் கதாபாத்திரத்தில் வரும் கணவன் பொதுமக்களுக்கு நன்றாக சேவை செய்வதும், பிற பெண்களை மதிப்பதும் என்று இருப்பான். 

ஆனால் அதில் physical abuse காட்டப்படுகிறது. Physical abuse இல்லாமலும் எமோஷனல் அபியூஸ் செய்யப்படும். உதாரணத்திற்கு தன் நட்பு கூட்டத்தில் பெண்டாட்டியை கிண்டலடிப்பான். உணவு சரியான நேரத்திற்கு வராததை கண்டு அவளை அபியூஸ் செய்ய ஆரம்பிப்பான்.

அவள் தன் அன்பு போதாமையால் தான் கணவன் அப்படி நடந்துக் கொள்கின்றான் என்று எண்ணி அவனை திருப்திப்படுத்த முயன்று தோற்றுப் போவாள்.

இந்த gas lighterஆல் பாதிக்கப்படும் மனிதருக்கு ஏற்படும் மாபெரும் பிரச்சினை என்னவென்றால் தன்னம்பிக்கை உடைந்து ஒன்றும் இல்லாமல் போதல். அந்த உறவை நாம் ஒழுங்காக நடந்துக் கொண்டால் சரியாக போய்விடும் என்று நம்பி தன்னை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முனைதல். எவ்வளவு மாற்றிக் கொண்டாலும் அவன் ஏதோ ஒரு குறை சொல்லி மட்டம் தட்டத் தான் போகிறான் என்பதை அறியாமல் மனச்சிதைவுக்கு ஆளாதல். முன்னாடி அவன் என்னை கொண்டாடினானே இப்போது ஏன் இத்தனை குற்றம் குறை கூறுகிறான் நாம் தான் சரியில்லையோ என்ற எண்ணத்தை பாதிக்கப்பட்ட நபருக்கே‌ வர செய்தல். இது ஒரு வகையில் ஒரு உயிரை அடிமைப்படுத்தி அவர் தனக்காக கண்ணீர் விடுவதை கண்டு ஆனந்தம் கொள்ளும் குரூர மனநிலை கொண்டவனாக இருப்பார்கள் இந்த gas lighters. 

எந்தளவிற்கு இவர்களிடையே distance make செய்கின்றீர்களோ அந்தளவிற்கு  நல்லது.

அடுத்த வாரம் ஒரு case studyயோடு இதை விளக்குகிறேன்.

நன்றி: #வணக்கம்மும்பை

சருகுகளின் சபலங்கள் பகுதி - 50 Whamen are toxic

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 50

Whamen are toxic

என்னடா பதிவின் தலைப்பே இப்படி இருக்கின்றதே என்று நீங்கள் ஐயமுறலாம். 

நீங்கள் படித்த வரிகள் சரியானதே. பெரும்பான்மையான சுயமற்ற பெண்கள் விஷத்தன்மை மிக்கவர்கள். தன்னோடு பழகுபவர்களையே தன் தேவைகளுக்காக ஆசைகளுக்காக பலி கொடுக்க தயங்காதவர்கள் என்கின்றது உளவியல்.

சுயமற்ற பெண்களுக்கு எப்போதுமே ஒரு insecured feel இருந்துக் கொண்டே இருக்கும். அதன் பொருட்டே தன் வாழ்வில் சம்பந்தமேப்படாதவர்களை கூட அவர்களால் வார்த்தைகள் கொண்டே கொலை செய்துவிட முடியும். 

பாலின பேதத்தில் ஏன் பெண் இரண்டாம் இடத்தில் பெண் இருக்கிறாள் என்று சொல்லுங்கள். சக பெண் உயரத்திற்கு செல்வதை அவளால் சகித்துக் கொள்ளவே முடியாது. பெண்கள் உயரம் செல்ல செல்ல அவள் தனிமைப்படுத்தப்படுவாள் சக பெண்களால். அவதூறுகளால் அவமானங்களால் சக பெண்களாலே நொறுக்கப்படுவாள்.

ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவியை கழட்டிவிட ஹன்ஸிகா கேரக்டர் அவனுக்கு பெண் பார்க்கும் படலம் இருக்கின்றது பாருங்கள். அவன் நல்லவன் வல்லவன் என்று கூவி கூவி விற்க பார்ப்பாள். ஆனால் அதைப் பார்க்கையிலேயே எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. 

இங்கு பெரும்பாலான  பெண்கள் ஒருவன் நல்லவன் அவன் கூட பழகு என்றால் பழகமாட்டார்கள். இதுவே ஒருவனை கெட்டவன் அவன் ஒரு ப்ளே பாய் என்று சொல்லித் தான் பாருங்களேன். வரிசையில் நிற்பார்கள். 

ஒரு ஆண் மோசமானவன் என்று  சுயமற்ற பெண்களிடம் சென்று சொல்லித் தான் பாருங்களேன். அறிவை கழட்டி வைத்துவிட்டு பின்னோடே போய்விடுவாள்கள். நாம் தான் ஏமாந்துவிட்டோம் அடுத்த பெண்கள் ஏமாறக்கூடாது என்ற கருணையுடன் நீங்கள் சென்று சொல்வீர்கள். ஆனால் அவர்களோ ஒன்று எனக்கு அந்த அறிவு கூட கிடையாதா என்ன? இவள் வந்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நினைத்து சொல்லியவளை அவமானப்படுத்துவதும் அந்த ஆணிடமே சென்று அவள் உங்களை இப்படி சொன்னால் என்று போட்டுக் கொடுப்பதும் நடக்கும். இப்படி போட்டுக் குடுத்தே காதலை துவங்கிடும் பலே கில்லாடிகளும் உண்டு. 

சுயமுடைய பெண் என்ன செய்வாள், நிதானிப்பாள். அவன் செயல்களை கவனிப்பாள். எதற்கும் இருக்கட்டும் என்று அவனை தூர நிறுத்துவாள். 

ஆனால் இதிகாசங்களில் இருந்து இன்றுவரை குண்டலகேசி போன்ற முட்டாள்களால் நிறைந்தது இந்த உலகம். 

திருடன் என்று தெரிந்தும் திருடனை விரும்பி திருமணம் செய்துக் கொண்டவள் குண்டலகேசி. பிற்பாடு வேறு ஒரு பெண்ணுக்காக அவளையே அந்த கணவன் கொலை செய்ய துணிகையில் தான் மூளை விழித்துக் கொண்டு அவனை கொன்று தான் சந்நியாசம் செல்வாள். 

இங்கு பெண்ணுக்கு நல்லவன் தேவையே இல்லை. ஏமாற்றுபவன் மட்டுமே அவள் திருட்டுத்தனமான பாலியல் இச்சைக்கு தேவைப்படுகிறான். நல்லவனை கை விட்டு கெட்டவன்பால் வீழ்ந்து வீணாப் போன பல கதைகள் அறிந்திருந்தாலும் ப்ளே பாய்களுக்கு  இருக்கு மவுஸு குறைவதாயில்லை. 

இதே ஒரு பெண் ப்ளே கேர்ளாக இருந்தால் அவளை தே*வடியா என்று விளிக்கும் உலகம் ப்ளே பாய்களை, ப்ளே காட்களாக குருக்களாக மன்மதக்குஞ்சுகளாக மரியாதை செலுத்திக் கொண்டிருப்பது எல்லாம் காலங்காலமாக நிகழும் கொடூரம்.

ஒரு ஆண் அழுதால் முந்தானையை அவிழ்த்து துடைக்க தயாராகும் இது போன்ற பெண்கள் சக பெண்கள் வீழ்வதற்கே பெருங்காரணமாக இருக்கின்றார்கள்.  பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை சூழ்ச்சியின் மூலம் வீழ்த்துவதில் வல்லவர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. பெண்கள் ஏன் சமையல் அறையிலேயே முடங்கிப் போய்விடுகிறார்கள் என்ற என் பல நாள் ஆராய்ச்சியில் எனக்கு கிடைத்த விடை... முயற்சியின்மை, சொகுசு வாழ்க்கை, உழைக்க சோம்பேறித்தனம், பிரச்சினைகளை எதிர்கொள்ள திராணியின்மை என்பதை எல்லாம் தாண்டி இவர்கள் சக பெண்களை வீழ்த்தும் பாலிடிக்ஸ்.   பெண்கள் ஆண்களிடம் போராடுவதை விட சக பெண்களிடம் தான் அதிகம் போராட வேண்டும். 

ஒரு பெரும் சுயமற்ற பெண்கள் கூட்டத்தை எதிரியாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் ஒன்றும் செய்ய வேண்டாம் ஒரு கேடு கெட்ட ப்ளே பாயை எதிர்த்துக் கொண்டால் போதும். மொத்தமாய் கூடி கும்மியடித்து அழித்துவிட்டு போய்விடுவார்கள்.

சக பெண் உடை உடுத்துவதில் இருந்து முடி கலைவது வரை உன்னிப்பாக குற்றம் கண்டுபிடித்து குற்றவாளிகள் ஆக்கிவிட இவர்களால் முடியும்.

இதில் மட்டுமல்ல பெரும்பாலான விஷயங்கள் பெண் இதை எல்லாம் செய்யலாம் இதை எல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டமைப்புகளை உருவாக்குவதே பெரும்பான்மையாக பெண்கள் தான். ஆனால் ஆண் என்ன வேண்டுமானால் செய்யலாம். அடுத்தவன் பொண்டாட்டியை ஏமாற்றும் ஏகப்போக உரிமை அவனுக்கு உண்டு. ஒரே ஆணின் பின்னால் ஒன்பது பெண்கள் வெட்கமின்றி சுற்றுவதை பெருமையாக நினைப்பார்கள். காதலின் பொருட்டு சக தோழியின் கழுத்தறுத்து போடும் கலைகள் அறிந்தவர்கள் இது போன்ற பெண்கள். பெண் என்றென்றும் இது போன்ற பதர்களால் இரண்டாம் பாலினம் தான்.

சுயமிக்க அறிவார்ந்த தன்னம்பிக்கை பெண்கள், ஒரு பெண்ணை வெறுப்பேற்றுவதற்காக வதைப்பதற்காகவோ எந்த ஒரு ஆணையும் ஆதரிப்பவளாகவோ ஆராதிப்பவளாகவோ இருக்கமாட்டாள்.

நெருப்பை தலைக்கீழாக பிடித்தாலும் மேல் நோக்கித் தான் எரியும் அது போல உண்மையும் நேர்மையையும் கடைபிடிக்கும் பெண்கள்.

ஆக நேர்மையான சுயமரியாதை பெண்களை women என்றும் சக பெண்களை அவமானத்திற்குள் தள்ளும் பெண்களை whamen என்றும் அழைக்கலாம் தவறில்லை.

நன்றி : வணக்கம் மும்பை

சருகுகளின் சபலங்கள் பகுதி - 49 Male ego

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 49

 Male ego

தான் ஒதுக்கிய பின்பும் தன்னோடு நேசத்தில் இருந்த பெண் சந்தோஷமாக இருந்தால் மட்டும் அல்ல சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொண்டால் கூட the male ego shatters out. 

தான் சல்லாபித்த பெண்... தன்னால் சல்லாபிக்கப்பட்ட பெண் தான் வேண்டாம் என்று ஒதுக்கிய பின்பு துன்பக்கடலில் தான் அலைப்பாய்ந்திட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எண்ணுவதும் தான் The male ego.

பிரிவிற்கு பின்னும் சோகத்தில் மூழ்காமல் அந்த பெண் அதை இயல்பாக ஏற்றுக் கொண்டு வலம் வந்தால், முன்பை விட இன்னும் சந்தோஷமாக இருந்தால் அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். ஒரு‌ சைக்கோவிடம் எமோஷனல் அபியூசரிடம் அவள் சந்தோஷமாக வாழ்ந்ததை விட அதிக துக்கம் அனுபவித்திருக்கிறாள் என்று அர்த்தம். அவன் பிரிவிற்கு பின் நிதர்சனத்தை உணர்ந்து நிம்மதி அடைந்திருக்கிறாள் என்று அர்த்தம்.

தன்னோடு உறவில் இருக்கும் பெண்ணிடம் பொஸஸிவ்னெஸ் உண்டாக்குவதற்காக இவன் போன்றவர்கள் தரம் தாழ்ந்து போவதற்கும் துணிவார்கள். கேவலமான செயல்களில் ஈடுபட்டு தன்னை நேசித்தவளை துன்புறுத்தி இன்பம் காண்பார்கள். அவள் வேலைக்கு செல்லா மனைவியாக இருக்கும் பட்சத்தில் வெளி உலகில் ஜெயிக்கும் பெண்களை பாராட்டி இவர்களை மட்டம் தட்டி சந்தோஷம் கொள்வார்கள். வேலைக்கு செல்லாமல் வீட்டில் காலாட்டி உட்கார்ந்துக் கொண்டிருப்பதாய் அவமானப்படுத்தி கைக்குள் வைத்துக் கொள்வார்கள். கைகளால் அடித்து விடுவதை கூட பொறுத்துக் கொள்ள முடியும். இவர்கள் தன் வாழ்வில் சம்பந்தமே இல்லாத பெண்களை புகழ்ந்து புகழ்ந்து தன்னோடு தனக்காக வாழும் பெண்ணை மனதளவில் சிதைத்துக் கொண்டிருப்பதை மட்டும் நம்மால் சிந்தித்தே பார்க்க முடியாது. அத்தனை இரணம். அவள் மூளையில்லாத ஜடமாக இருந்தால் அதை உணராமலேயே காலத்திற்கும் வாழ்ந்துவிடுவாள். என்ன தான் திறன் மிக்க பெண்ணாய் இருந்தாலும் இவன்கள் தன் கைகளில் அவளை புழுவாக்கி இன்புற்று நீ முதுகெலும்பு இல்லாத புழு என்று தாழ்வு மனப்பான்மையில் தள்ளுவார்கள்.  புற உலகில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் வெறும் இல்லத்தரசியாக மட்டுமே சமையல்கட்டிலும் பிள்ளை வளர்ப்பிலும் மட்டுமே உருகி உருகி ஓய்ந்துப் போவார்கள் பாதிக்கப்பட்ட இது போன்ற பெண்கள். ஒரு பெண் சமூகவளைத்தளத்தில் கூட சுதந்திரமாக உலா வர முடியாமல் தன் கணவனின் நண்பர் நண்பிகளோடு மட்டுமே உரையாடக் கூடிய கட்டுக்குள் இருக்கிறாள் என்றால் அவள் Stockholm syndromeஆல் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று பொருள். அதிலிருந்து வெளியே வரும்வரை அவள் தான் ஒரு சைக்கோ எமோஷனல் அபியுசர் கணவனிடம் சிக்கி‌ சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறோம் என்று அறிந்துக் கொள்ள கூட முடியாது. 

ஆனால் அத்தனையும் மீறி இவன் போன்றவர்களை புரிந்து அறிந்து அந்த உறவில் இருந்து வெளியே வரும் பெண்ணுக்கு அவன்கள் இழைக்கும் அநீதியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 

ஒரு காதல் பிரிவிற்கு பின் பெண் சுதந்திர உணர்வை உணர்கின்றாள் என்றால் இத்தனை நாள் அவன் அவளை துன்பக்கடலில் அலைக்கழித்து இருக்கின்றான் என்று அர்த்தம். 

ஆனால் அவள் சந்தோஷமாய் வாழ்வதை, சுற்றி வருவதை உணரும் அந்த ஆணால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அந்த சந்தோஷத்தை எப்படியாவது பறித்து விட அவன் மனம் துடிக்கும். அதன் பொருட்டு அவளை லாக் செய்யக் கூடிய அத்தனையையும் செய்ய அவன் மனம் தயாராகின்றது. 

அவளை தவறானவளாக அவளை சுற்றி உள்ள சமூகத்திடம் நிரூபிக்க பிரயத்தனப்படுகின்றது. அவளது புகைப்படங்களை தவறான வெப்சைட்களிலோ தப்பிதமாகவோ பயன்படுத்த துணிகின்றது.

அவள் நெருங்க இயலா தூரத்தில் செல்ல செல்ல மனம்‌‌ அவளை அழித்துவிட துடிக்கின்றது. வேறு ஒருவனோடு மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாய் தெரிந்தால் அதை துவம்சம் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்கின்றது. இதன் நீட்சி தான் இது போன்ற கயவர்கள் ஆசிட் அடித்தல், கொலை வரை போதல். ஆனால் புத்திசாலி சைக்கோவோ அவளை தற்கொலைக்கு தூண்டுவான். அவன் மிருகத்தன்மையை பிறர் அறியாவண்ணம் அவளை நார்நாராக கிழித்து போட துணிவான்.

இதை அறியாத பேதைமனம் கொண்ட பெண்கள் அந்த இடத்தை விட்டே, அவன் கண்கள் படா தொலைதூரத்திற்கு தன்னை பாதுகாத்துக் கொள்ள தன்னை சுருக்கிக் கொள்கின்றாள்கள். அப்படி சில சைக்கோக்களால் காணாமலேயே சென்றிருக்கிறாள்கள்.

தன்னுடைய Male egoவை நொறுக்கிப் போடும் எந்த பெண்ணையும் ஆண் சும்மா விடுவதில்லை. சக பெண்களை வைத்தே அவள் கேரக்டரை தவறாக சித்தரித்து உலவ விடும் கேடுகெட்டத்தன சாக்கடைத்தனத்தை செய்கின்றான்.

அவளை முழுவதுமாய் அழித்து முடித்த பின்பே அவன் இயல்பு வாழ்க்கைக்கு மனதளவில் திரும்புகிறான். புற உலகில் பசுத்தோல் போர்த்தி இருந்தாலும் புலி என்பது புலி தான். அதன் குணம் வேட்டையாடுவது மட்டும் தான்.

எவன் நல்ல ஆண் தெரியுமா. தான் நேசித்தவள் தன்னை விட்டு பிரிந்து போனபின்னும், தன்னை தப்பிதமாக அவள் விளித்திருந்தாலும் மன்னித்து அவள் நன்றாக வாழட்டும் என்று நினைப்பவன் மட்டுமே தேவகுணம் கொண்டவன். ஆனால் அப்படி ஒரு குணாதிசயம் கொண்டவர்களை சினிமாக்களில் மட்டுமே காண முடியும். பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, உள்ளம் கொள்ளை போகுதே போன்ற கேரக்டர்கள். மற்றவை எல்லாம் வெறும் குப்பை மட்டுமே.

நன்றி : வணக்கம் மும்பை

சருகுகளின் சபலங்கள் பகுதி - 48 சுயமரியாதை பெண்கள்

சருகுகளின் சபலங்கள்

பகுதி - 48

சுயமரியாதை பெண்கள்

மஞ்சு வாரியாரை ரொம்பப் பிடிக்கும். 

அவர் அழகானவர் என்பதற்காக அல்ல. அவர் சுயமரியாதை மிக்க பெண் என்பதற்காக. 

பதினாறு வயதில் சினிமா, நடிகைக்கான விருது எல்லாம் பெற்று புகழின் உச்சத்தில் இருக்கும்போதே காதலின் பொருட்டு திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகள் குடும்பம் என்று தன்னை அந்த சின்னஞ்சிறிய கூட்டிற்குள் அடைத்துக் கொண்டார். 

பெண்கள் அப்படி தான் காதலுக்கு முன்னால் தன் பெருமை தான் எனும் சுயம் எல்லாம் பிற்பாடு தான். 

ஆனால் அவர் கணவரோ இவருடன் வாழ்ந்துக் கொண்டே வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருக்க துவங்கினார். அது தெரியாத வரை பாதகமில்லை. தெரிந்தபின் அவரை விட்டு பிரிந்து வந்ததில் தான் அவர் துணிச்சலான நிமிர்வான தைரியமான சுயமரியாதை மிக்க பெண்ணாக தெரிகிறார். 

நடிகர் நடிகைகள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று அவர் அனுசரித்து செல்லவில்லை. அதை தான் சுயம் என்கின்றேன். புருஷன் எத்தனை பேருடன் சென்று வந்தாலும் பரவாயில்லை, தனக்கு சோறு போட்டு துணி மணி எடுத்துக் கொடுத்து பிள்ளைகளுடைய தேவைகளை பார்த்துக் கொண்டால் போதும் என்று எண்ணுவது தான் பெரும்பாலான பெண்களின் குணம். ஆனால் சுயமரியாதை மிக்க எந்த பெண்ணும் தன் இடத்தில் இன்னொருத்தியை வைத்து பார்க்கும் ஒரு ஆணை எக்காலத்திலும் மீண்டும் அவள் மனம் விரும்பவே விரும்பாது. நீ எவ கிட்ட வேணா போயிட்டு வா நான் உனக்காக காத்திருப்பேன் என்பது எல்லாம் என்னைப் பொருத்தவரை சுயமற்ற வாழ வழியற்ற புழுக்கள் செய்யும் செயல். 

காதலில் காமத்தில் உங்களுக்கு பின்பும் உங்கள் இணை வேறு ஒருவரை நாடினால் நிச்சயம் அது உங்கள் சுயமரியாதையை பாதிக்கும் செயல் மட்டும் தான். அதற்கு பெயர் பொஸஸிவ்னஸ் கிடையாது.

காதலிலோ காமத்திலோ திருப்தி இல்லாமல் போகையில் தான் அவர்கள் வேறு ஒருவரை நாடுகிறார்கள். அதாவது நாம் அவர்களுக்கு போதவில்லை என்று அதற்கு அர்த்தம். 

அப்படிப்பட்ட காதலுக்கோ, காமத்திற்கோ ஏங்கி நிற்பதை விட எடுத்து எரிந்துவிட்டு சுயமாய் தனித்து வாழ்வதே சாலச் சிறந்தது. 

என் இடத்தில் உன்னால் வேறு ஒருத்தியை வைத்து பொருத்தி பார்க்க முடியுமென்றால், சல்லாபிக்க முடியுமென்றால் உன் வாழ்வில் நான் இனி எப்போதுமே இல்லை என்பது மட்டுமே சுயமரியாதை மிக்க பெண்கள் செய்யும் செயல்.

மாறாக அவர் பொறுத்து போய் இருந்தால் அவர் பத்தோடு பதினொன்றாக காணாமல் போய் இருப்பார்.

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...