சருகுகளின் சபலங்கள்
பகுதி - 24
Broken heart syndrome
வாழ்க்கையிலே நிறைய தோல்விகளை சந்திக்கிறோம். ஆனால் காதல் தோல்வி மட்டும் ஏன் இதயத்தை நொறுக்கிப் போட்டுவிடுகிறது என்று கேட்டாள் தோழி ஒருத்தி.
அதற்கு காரணம் நம் ஹார்மோன்கள் தான். காதலிக்கும்போது உடலில் சுரக்கும் happy hormone ஆன dopamine தான் இதற்கு காரணம். காதலில் இருக்கும் மனது அதில் இருக்கும் த்ரில் , குறுகுறுப்பு, ஆத்மார்த்தமான ஒரு வித கிளர்ச்சி மனதிற்கினியவர்களை பார்க்க பார்க்க, அவர்களை சந்திக்கையில், முத்தமிடுகையில், சரசமாடுகையில் அதன் சுரப்புகள் அதிகரித்து அவர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும். அந்த உற்சாகம் மற்ற வேலைகளை சோர்வின்றி செய்ய உதவும். விடுதலை படத்தில் நாயகியிடம் நாயகி சொல்வான். உன்னை பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்பதே இத்தனை வலிகளையும் காணாமல் போக செய்கின்றது என்று.
ஆக வாழ்வில் எத்தனை தோல்விகள் வந்தாலும் மனம் காதலில் இருப்பின் மற்ற விஷயங்களினால் ஏற்படும் தொய்வை சோர்வை அவை நீக்கி நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
ஆனால் காதல் தோல்வியடைந்தால் அந்த happy hormone கடகடவென சரிந்து டோபோமைன் சுரப்பை குறைத்துவிடும். அதன் பொருட்டு emotional stressற்கு ஆளாக்கப்படுவார்கள். விளைவு இதயம் நொறுங்குவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
Broken heart syndromeல் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் காதல் தோல்வியால் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் காதல் தோல்வியை நெடுங்காலத்திற்கு தூக்கி சுமப்பவர்களுக்கு கண்டிப்பாக broken heart syndromeற்கு ஆளாகுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்துவதே இந்த பதிவின் நோக்கம்.
Broken heart syndromeற்கு காரணம் இயல்பிலேயே இதயம் பலவீனமாக இருப்பவர்கள், short tempers, Low BP உள்ளவர்களுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் It's all about emotional stress. பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகையில், ஒரு முக்கிய உறவை இழந்து போகையில், அவமானத்திற்குள் ஆளாகுகையில், வேலை இழக்கையில், திடீரென விபத்து நேரிடுகையில் என்று சிக்கல்களை சமாளிக்க இயலாத மனம் அந்த சிக்கல்களிலேயே உழன்று காதல் செய்வதை கூட நிறுத்திவிடும். அதன் விளைவாக சந்தோஷ ஹார்மோன் சுரப்பதை நிறுத்தி mind block ஆகக் கூடும்.
எந்த ஒரு மன அழுத்தத்தில் இருந்தும் எவ்வளவு எளிதாக வெளியே வந்துவிடுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஒரு சிலருக்கு காதல் தோல்வியோ, வாழ்க்கையில் தோல்வியோ, பொருளாதார நெருக்கடியோ ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் என்று வெளிவந்துவிடுவார்கள்.
மனித மனம் என்பது அத்தனை மனசிடுக்குகளை கொண்டது. எல்லா தியரிகளும் எல்லாருக்கும் ஒத்து வராது. ஒருவரின் உணவை மற்றொருவர் ஜீரணம் செய்ய இயலாது அல்லவா. அது போல.
ஆக மற்ற தோல்விகளில் இருந்து வெளி வர காதல் என்ற அருமருந்து உதவுவது போல, காதல் தோல்விக்கு மற்றொரு காதலே அருமருந்து.
ஆனால் ஒரு காதலில் ஏமாற்றப்படும் விதமானது மற்றொரு காதலை நோக்கி அடி எடுத்து வைக்கும் தெம்பை தராது.
முதல் காதல் தோல்வியுற்றால் கூட இரண்டாம் காதல் தேற்றிவிடும். இரண்டாம் காதல் தோற்கையில் தன் மீதே தனக்கு அவநம்பிக்கை கூடும். தன்னை தான் வெறுக்கும் நிலை ஏற்படும். தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளும் நிலைக்கும் சிலர் தள்ளப்படுவார்கள். அதன் பொருட்டு தேவதாஸ் கதைகள் உருவாவது. தற்கொலைகள் செய்துக் கொள்வது எல்லாம்.
இந்த ஹாப்பி ஹார்மோனை மீண்டும் சுரக்க வைக்க இயலாத போது உடல் சார்ந்த நோய்கள் அதிகரிக்கும். அதன் பொருட்டு உடல் வலிகளும் நரம்பு மண்டலங்களும் சரிவர வேலை செய்யாது. உடல் சொல்லொண்ணா வலிகளுக்கு உட்படும். சிலர் இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளி வராவிட்டால் emotional stress அதிகரித்து broken heart syndromeன் காரணமாக நூறில் 1 சதவீதம் மரணம் கூட சம்பவிக்கலாம் எனகின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆக ஹாப்பி ஹார்மோன் சுரக்க வைக்க மற்றொரு காதலில் ஈடுபட இயலாதவர்களுக்கு நிச்சயம் வேறு வகையில் ஹாப்பி ஹார்மோனை சுரக்க வைக்க வேண்டியதுள்ளது. Medication, meditation, yoga, குழந்தைத்தனமாக நடந்துக் கொள்ளுதல், ஊர் சுற்றுதல், வித விதமான உணவுகளை உண்ணுதல் என்று அதன் தோல்வியை மறக்க மாற்று ஏற்பாடு செய்துக் கொள்வது ஒன்றே இது போன்ற வலிகளில் இருந்து மீள வழி.
ஆக ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றால் அவரை அப்படியே விட்டுவிடாமல் அதிலிருந்து வெளியேறுவதற்கு துணை நில்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக