செவ்வாய், 22 டிசம்பர், 2020

செடிகள் வளர்க்கலாம் வாங்க - பகுதி 20

‌#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க 


பகுதி 20

#Jasminum_Nitatum

Common name : Angelwing Jasmine, Shining Jasmine

பிறப்பிடம்: Papua New Guinea

பெரும்பாலும் மல்லிகைனா ஆண் பெண் இருபாலருக்கும் பிடித்த ஒன்று. அதில் மொத்தம் 120 சிற்றின வரிசைகள் உண்டுன்னு தெரிஞ்சா நீங்க ஆச்சரியப்படுவீங்க. 

முல்லை, ஊசி மல்லி, காக்கட்டான், ஜாதி மல்லி, குண்டு மல்லி, பிச்சிப்பூ, நித்திய மல்லினு மல்லி யோட வகைகளை அடுக்கி கிட்டே போகலாம். 

இந்தியாவிலேயே பூக்கள் வியாபாரத்தில் மல்லிக்கு முதல் இடம். அதை ஏற்றுமதி செய்வதில் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது. ஆனாலும் பனி காற்றின் காரணமாக டிசம்பரிலிருந்து மார்ச் வரை மல்லி வகைகளில் பூ உற்பத்தி குறைவாக தான் இருக்கும். அதனால் தான் அந்த காலக்கட்டத்தில் பூக்கள் விலை உயர்வதும். 

ஜாதிமல்லியும், காக்கட்டானையும் கலந்த மாதிரி இருக்கும் இந்த ஜாஸ்மினம் நிட்டேட்டம். வாசனை ஜாதி மல்லி அளவிற்கு இருக்காது. அதே சமயம் காக்கட்டான் பூ போல வாசனை அற்றும் இருக்காது. ப்லுமேரியா சம்பங்கியையும் கலந்துகட்டிய ஒரு வாசனை இருக்கும். சம்பங்கி அளவு மனம் இல்லாவிடினும் முகர்ந்து பார்க்கையில் ஒரு மிதமான வாசனையை உணர முடியும்.

இந்த பூ மொட்டாக இருக்கும்போது இளஞ்சிவப்பு நிறத்திலும், மலர்ந்த பின்பு வெள்ளை நிறத்திலும் பல இதழ்களுடனும் நல்ல மணத்துடனும் காணப்படும். மலர் மொட்டு மூன்றிலிருந்து நான்கு சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். நீண்ட நேரம் வாடாமல் இருக்கும். 

இரண்டாண்டுகளுக்கு முன்புஸகோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள, மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறையில் இந்த மலர் சாகுபடி ஆராய்ச்சிகள் நிகழ்ந்து தற்போது வேளாண் விவசாயத்திற்கு பயன்பாட்டிற்காக வந்தாயிற்று. 

இந்த பூச்செடி  பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து இயற்கையாகவே தற்காத்துக்கொள்ளும் தன்மையினை பெற்றுள்ளது.

வண்டல் மண்ணில் நன்றாக வளரக் கூடியது. வறட்சியை தாங்க கூடியது. வாரத்திற்கு ஒரு நாள் நீர் ஊற்றினாலும் தாங்க கூடியது. அலங்கார செடியாக நடலாம். 15 அடி வரை வளர கூடியது. புதர் வடிவிலான தாவரம். புதர் வகையை சேர்ந்தது.

மருத்துவ பயன் : மல்லிகையின் நறுமணத்தைக் கொண்டு மனிதனின் மூளை செயல்பாடுகளைச் சரிசெய்யவும், ரத்த அழுத்தம். மன உளைச்சல், படபடப்பின் மூலம் ஆற்றல் இழப்புப் போன்றவைகளுக்கு மலர்கள் உதவவும் செய்கின்றது. 

முழு சூரிய ஒளியில் வைக்க வேண்டிய தாவரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்?

சருகுகளின் சபலங்கள் பகுதி - 52 வெறுப்புணர்வு ஏன்? திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் அல்லது இருந்த பெண்ணின் மீது வரும் ஆத்திரமும், வெறுப்பும்...