#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க
பகுதி 21
கொடிகளும் வளர்க்கலாம் வாங்க
#அடப்பங்கொடி
அடும்பு, அடம்பு, ஆட்டுக்கால் குளாம்பு, குதிரை குளாம்பு என்று அழைக்கப்படும் இத்தாவரம் படரும் வகையை சார்ந்தது. நிறைய மருத்துவ குணங்கள் இருக்க கூடியது இந்த தாவரம்.
இதனுடைய botanical name Ipomoea pes-caprae, family Convolvulaceae வகையை சேர்ந்தது. இதற்கு beach morning Glory , Goat's foot vine என்ற பெயர்களும் உண்டு.
கடற்கரையில், ஆற்றங்கரை ஓரங்களில் மணலில் படர்ந்திருக்கக் கூடியது. உப்புக் காற்றிலும் தண்ணீரிலும் வீணாகாத தாவரம். இதன் கொடி கொஞ்சம் தடிமனாகவும் வேர் கிழங்கு போன்றும் இருக்க கூடியது. இதில் பூக்கும் ரோஜா அல்லது ஊதா நிற பூக்கள் அழகாக இருக்கும். வீட்டில் மருத்துவ குணத்திற்காகவும் அழகுக்காகவும் இதை வளர்க்கலாம். "Creeping vine என்பதால் வீட்டு பால்கனியில் ஏற்றி விடலாம். வெறும் அழகுக்காக என்றில்லாமல் பல நோய்கள் தீர்க்கும் தாவரமும் கூட. இலை முதல் வேர் வரை மருத்துவக்குணம் நிரம்பிய தாவரம்.
ஒரு பூவில் இருந்து நான்கு விதைகள் கிடைக்கும். விதைகள் கடல்நீரில் மிதந்து அக்கரைக்கு சென்று வளரக்கூடியது. உப்பு நீரினால் வீணாகாது. தண்டுகளிலேயே வேர்கள் இருப்பதால் கிள்ளி வைத்தாலே வளரக்கூடியது.
நெய்தல் நிலத்து பெண்கள் இப்பூவை தலையில் சூடிக் கொள்வார்கள். இதன் மலர்கள் தெய்வ வழிப்பாட்டுக்கு ஏற்றவை.
கணையம், கல்லீரல், சிறுநீரக பிரச்சினைகளை சரி செய்ய கூடியது.
ஆஸ்திரேலியா, பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் இதன் மருத்துவக்குணங்களுக்காக பயிரப்படுகின்றன.
குறிப்பாக மூட்டுவலியை போக்கும், சிறுநீர் பெருக்கும், வயிறு சம்பந்தமான பிரச்சினையை தீர்க்கும், அல்சருக்கு சரியான மருந்து, வீக்கம் தணிக்கும் இத்தனை மருத்துவக் குணங்கள் நிறைந்ததை வீட்டில் படரும் கொடியாக வைப்பதில் பாதகமில்லை.
நம் சங்க கால இலக்கியங்களிலும் இவற்றை கடலாறை, காட்டாறை என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகாரம், நற்றிணை, பட்டினப்பாலை, பெரியபுராணம், திருப்புகழ், கல்லாடம், குறிஞ்சிப் பாட்டு போன்ற சங்க இலக்கியங்களில் இதற்கான குறிப்புகள் உள்ளன.
இதன் இலைகள் குதிரையின் கால்தடம் போன்று உள்ளதால் குதிரை குளம்பு என்று அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இதன் காலடி ஆட்டின் காலடி போன்று தோன்றுவதால் Goats foot vine என்ற பெயரும் உண்டு.
இதன் சுவை துவர்ப்பும் கார்ப்பும் ஒரு சேர உள்ளது.
தமிழகத்தில் அழிந்து வரும் மூலிகைகளிலும் இதுவும் ஒன்று.
பின்வரும் நோய்களை குணப்படுத்த இவை உதவுகின்றன:
1. முடக்குவாதம் (Rheumatoid arthritis)
2. தோல்வியாதிகள்(psoriasis)
3. பைல்ஸ்
4. இருமல்
5. பித்தம்
6. வாதம்
7. எலும்பு முறிவு
8. மலக்குடல் இறக்கம்
9. அல்சர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக