பகுதி 33
சுயமரியாதைப் பெண்கள்
பொறுக்கிகளை பொறுக்கித்தனமான பெண்களே ஆதரிப்பார்கள்.
நீங்க வேணா பாருங்களேன்....
நேர்மையான பெண்கள் பொறுக்கிகளை இடது கையால் டீல் செய்துவிட்டு, தூர விலக்கிவிட்டு தன் முன்னேற்றத்தை, தன் வியாபரத்தை, தொழிலை, தன் அரசியல் வாழ்வைப் பற்றி யோசிப்பதை மட்டுமே செய்வர்.
சோஷியல் மீடியா போன்ற தளத்தில் எவரை ஆதரிக்க வேண்டும் எவரை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்ற தெளிவு இருக்கும் பெண்கள் முன்னேற்றப் பாதையில் வீறுநடைப் போடுவதை காணலாம்.
ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான்னு வச்சுக்கங்க மற்ற ஆண் நண்பர்கள் என்ன செய்வாங்க அந்த பெண்ணை சக தோழியாவோ, சகோதரியாகவோ பாவிப்பாங்க. ஆனா பெண்கள் பார்த்தீங்கன்னா தன் தோழி விரும்பும் காதலனை தானும் நேசிக்கக் கூடிய குயபுக்தி பெண்ணிடம் அதிகம் உண்டு.
தான் கிட்ட ஒரு நல்ல உடுப்பே இருந்தாலும் இன்னொருத்தர் கிட்ட ஒரு உடுப்பு இருந்தா அது தனக்கு வேணும்னு நினைக்கும் பெண்களை நீங்கள் அதிகம் காணலாம்.
பெண்களில் ஆல்பா வகை பெண்கள் மிகக்குறைவு. பீட்டா வகை பெண்கள் தான் மிக மிக அதிகம்.
பெண்ணின் குண நலன்களை வைத்து உளவியலாளர்கள் அவர்களை மூன்று வகையினராக பிரிக்கின்றனர். ஆல்பா, பீட்டா, ஒமேகா...
ஏற்கனவே ஆல்பா பெண்களை பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன்.
தற்போது பீட்டா வகை பெண்களை காணலாம்.
1. தான் ஆணால் பேணிக்காக்கப்பட வேண்டியவள் என்ற எண்ணம் உடைய எல்லா பெண்களும் இதில் அடங்குவர்.
2. தன்னை தனக்கு பிடித்த ஆண் சுற்றி வர வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருப்பர்.
3. தன் அழகை பற்றிய அதீத பயம் உடையவராய் இருப்பார்கள்.
4. புறம் பேசுதல், பொறாமைப்படுதல், அடுத்தவர் வாழ்க்கையை கொடுத்தல் இவர்களது பொழுதுபோக்கு.
5. தன் முன்னேற்றத்திற்காக எதையும் செய்ய தயங்காத பெண்களாக இவர்கள் இருப்பர்.
6. இவர்கள் குணத்தில் நஞ்சு கலந்திருந்தால் இவர்கள் உறவுகளுக்குள் அரசியல் செய்து தனக்கு தேவையானதை பெற்றுக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள் ஆக இருப்பர்.
7. இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள்.
8. இவர்களிடம் ஏதாவது துன்பங்களை பகிர்ந்தால் நாங்களும் தான் அதை எல்லாம் கடந்து வந்தோம் என்பார்கள்.
9. ஆணாதிக்க சிந்தனை இவர்கள் மனதில் ஊன்றி இருப்பதால் ஆண்களுக்கு ஆதரவாகவே இருக்கும் இவர்கள் நியாயங்கள். உதாரணத்திற்கு ஆண் பெண்ணை ஏமாற்றினால் அவன் அப்படித்தான் இருப்பான் இவளுக்கு எங்கே புத்தி போச்சு என்பார்கள். ஏன் எங்க பின்னாடியும் நிறைய பேர் சுத்த தான் செய்யறாங்க. நாங்க என்ன ஏமாந்தா போயிட்டோம் என்று victim blaming செய்பவர்கள் எல்லாம் இந்த வகையறா பெண்கள் தான்.
10. ஒரு ஆண் மோசமானவன் என்று தெரிந்தாலும் கூட இவர்கள் பெண்ணுக்கு ஆதரவாக நிற்க மாட்டார்கள்.
11. பீட்டா வகை பெண்கள்னா ஏதோ வீட்டு வேலை செய்துக்கொண்டு புறம் பேசிக்கிட்டு திரியறவங்க மட்டுமல்ல. அவங்க பெரிய பெரிய பதவியில் கூட இருக்கலாம். மேல் நிலையில் கூட இருக்கலாம். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கையில் இவர்கள் ஆண் ஒரு படி மேல் தான் என்ற சிந்தனை வெளிப்படும்.
12. தனக்கு பிடித்த ஆணுக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ அவை எல்லாம் இவர்களுக்கும் பிடிக்கும். எதுவெல்லாம் பிடிக்காதோ அவை எல்லாம் இவர்களுக்கும் பிடிக்காது. உதாரணத்திற்கு ஒரு இடத்தில் புதிதாக வேலைக்கு சேரும் பெண்ணை இது போன்ற சக பெண்கள் பெரும்பாலும் ஆதரிப்பதில்லை. இதுவே அவர்களுக்கு பிடித்த ஆணின் பார்வை அந்த பெண்ணின் மீது பட்டால் இவர்களும் அவளுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்துவிடுவர் உள்ளுக்குள்ளேயே புகைந்தாலும் கூட. ஒரு வேளை அவளுக்கும் அந்த ஆணுக்கும் பிரச்சினை என்றாலும் நடுநிலையாக யோசிக்காமல் அந்த பெண்ணை அந்த ஆணோடு சேர்ந்து துவேஷிக்க ஆரம்பித்துவிடுவர்.
இதன் விளைவே பெண் பெண்ணால் வதைபடுவது.
கேடுகெட்ட பொறுக்கித்தனமான ஆண்கள் இது போன்ற பெண் வகையினராக ஆதரவாக வைத்துக் கொண்டு தான் பழி வாங்க வேண்டிய பெண்ணை எளிதில் பழி வாங்கி விடுகின்றனர்.
பெண் பாலின பேதத்தில் கீழிருப்பதற்கு முக்கிய காரணமே அவளிடம் இருக்கும் இந்த கீழ்மையான நேர்மையற்ற குணங்கள் தான். சுயநலமும் தற்சார்பு இல்லாத குணமும் சக மனிதர்களை வதம் செய்ய பயன்படுகின்றது.
ஒமேகா வகை பெண்கள் என்று ஒரு வகை உண்டு. சோம்பேறிகளாகவும், வாழ்வில் எந்த முன்னேற்றமும் அடையாமல் பிறரைச் சார்ந்து வாழ்பவர்கள் இவர்கள். இவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள். குயபுக்தி என்று பெரும்பாலும் எதுவும் இருக்காது. வெள்ளந்தியான உலகம் அறியாத, சமூகம் நட்டு வைத்த அத்தனையையும் ஏன் எதற்கு என்று கேள்விக் கேட்காமல் அப்படியே பின்பற்றுபவர்கள். இவர்களால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது. சண்டைன்னா சட்டைக் கிழிஞ்சுடும்னு எல்லாத்துலேயும் ஒதுங்கிப் போய்விடுவார்கள். நமக்கு எதுக்குடா வம்பு கேட்டகரி இவர்கள்.
பிறரைப் பற்றி உண்மையற்ற தகவலை பற்றி புறம்பேசி, மிகக் கொடூரமாக நடந்து கொள்ளும் பெண்ணைப் பார்த்தால் உறுதியாகச் சொல்லலாம் அவள் ஆல்பா பெண் இல்லை என்று சொல்லலாம்.
நமக்கு முந்தைய ஜெனரேஷன்களில் ஒமேகா பெண்கள் அதிகமாகவும் பீட்டா பெண்கள் அவர்களை விட குறைவாகவும், ஆல்பா பெண்கள் எங்கோ ஒன்றும் என்று இருந்தார்கள்.
தற்போது கல்வி, புத்திசாலித்தனத்தில் சிறந்து விளங்கும் பெரும்பாலான பெண்கள் ஆல்பா குணம் பொருந்தி வாழ்வதால் தான் ஆண்கள் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.
எங்க அம்மா எங்க அப்பத்தா எல்லாம் இப்படி இல்லையே என்று தடுமாறுகின்றனர் இச்சமூக மாற்றத்தால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக