#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க
பகுதி 18
#சங்குபூ #clitoria_ternatea
Butterfly pea, blue pea, Asian pigeonwings, bluebellwine என்று பல ஆங்கில பெயர்களால் அழைக்கும் தாவரம் fabacea வகையை சார்ந்தது.
சங்குபுஷ்பம், கருவிளை, செருவிளை, மாமூலி, நிலகாக்கட்டான் என்று வேறு பெயர்களும் உண்டு.
நீல நிறமும் வெள்ளை நிறமும் அதிகமாக காணப்படுகிற நிறங்கள். தற்போது ரோஜா வண்ணத்தில் ஓரிதழ், அடுக்கு பூக்களாகவும் காண கிடைக்கின்றன.
பெண்ணின் யோனியை(clitoris) ஒத்து இருக்கும் இந்த பூ விதவித நிறங்களில் ஒற்றை இதழ் முதல் அடுக்குகள் வரை பூக்கக் கூடியது.
விதைகள் மூலம் பரவக் கூடியது. ஏறு கொடி வகை சார்ந்தது. உங்கள் வீட்டு மாடிகளிலோ வேலிகளிலோ படரவிட்டால் கண்கொள்ளாக் காட்சியாக பூத்துக் குலுங்கும்.
இதன் பூர்வீகம் தெற்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா.
சங்கு புஷ்பம் தேநீர்:
சங்கு பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் காய்ந்த லெமன் கிராஸ் பொடித்து கலந்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
பயன்கள்:
1. இந்த தாவரம் மண்ணில் நைட்ரஜனை உற்பத்தி செய்கின்றன. இந்த தாவரத்தை ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்கங்களில் அழகுக்காகவும் நைட்ரஜன் உற்பத்தி செய்யும் தாவரமாகும் வளர்க்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. இயற்கை உணவு நிறமிகளாக (food colouring) தாய்லாந்து மற்றும் பர்மாவில் பல உணவகங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
3. தாய்லாந்தில் சங்குப்பூ தேநீர் (butterfly pea flower tea) பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.
காய்ந்த லெமன் புல்லை தூளாக்கி சங்குப்பூவின் காய வைத்து பதப்படுத்திய பூக்களை போட்டு கொதிக்க விட்டு தேன் அல்லது உப்பு கலந்து சூடாகவோ குளிர்பானமாகவோ பரிமாறப்பட்டுள்ளது.
சோடோவோடு இந்து பூவின் நிறமி கலக்கப்படுகையில் நீல நிறம் ரோஜா நிறமாக மாற்றம் அடைகிறது அதன் pH அளவீடால்.
4. ஆயுர்வேத மருத்துவத்தில் மறதியை குணமாக்கவும், மன அழுத்தத்தை போக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
5. சீன மருத்துவத்தில் யோனியின் வடிவத்தில் உள்ளதால் அதன் சம்பந்தப்பட்ட நோய்தனை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
6. குடல் புழுக்களைக் கொல்லும், வெப்பத்தை தணிக்கும், மந்தத்தை போக்கும். தலை நோய், கண் நோய் குணப்படுத்தும்.
7. மலர்ச்சாறு கல்லீரலை குணப்படுத்தும்.
8.யோனிப் புண்கள் குணமாக சங்குப்பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களைக் கழுவலாம். பால்வினை நோய், வெள்ளை படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றமும் கட்டுப்படும்.
9.வாந்தி, பேதி உண்டாக்கும். சிறுநீரை உண்டாக்கும். மந்தத்தை போக்க கூடியது.
10. அக்குள் மற்றும் பிறப்புறுப்புகளில் நெறிகட்டி கொள்வதை போக்கவல்லது.
11. யானைக்கால் நோயை குணப்ப என்ன
பூ, இலை, காய் முதல் வேர் வரை மருத்துவத்தில் பயன்படுகிறது.
சங்குப்பூ தேநீர் துவர்ப்பு சுவை உடையது. வெள்ளை ஒற்றை இதழ் சங்குப்பூவிற்கு மருத்துவகுணம் அதிகம்.
Medicinal uses From Internet source 👇👇
மருத்துவம்:
1. பேதியாக சங்குப்பூ வேர் 10 கிராம், திப்பிலி 10 கிராம், சுக்கு 15 கிராம், விளாம் பிசின் 10 கிராம் ஆகியவற்றைக் கல்வத்தில் அரைத்து குன்றி மணி அளவான மாத்திரைகளாகச் செய்து நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் 1 மாத்திரை வீதம் காலை வேளையில் உள்ளுக்குள் வெந்நீருடன் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு அரை மாத்திரை அளவாகும்.
2. 40கிராம் சங்குப்பூ வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி 3 தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 6 முறைகள் ஒரே நாளில் சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
3.சங்குப்பூ வேர், கீழா நெல்லி முழுத் தாவரம், யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், இவை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடியுடன் 5 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவாக தயிரில் கலக்கி உட்கொள்ள வேண்டும். காலையில் 10 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட வெள்ளை படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
4. தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்ட வீக்கம் கட்டுப்படும்.நெய்யில் வறுத்து இடித்து தயார் செய்த சங்கப்பூ விதைத் தூள், ஒரு சிட்டிகை அளவு வெந்நீருடன் உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பு நோய் குணமாகும்.
தெய்வங்கள்:
நல்ல பதிவு
பதிலளிநீக்குநன்றி
நீக்குமிக அருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்கு