பகுதி 17
#பொன்னாங்கண்ணி_கீரை.
பொன்னாங்காணி என்றும் அழைக்கப்படுகிறது. நீர் நிலை ஓரங்களில் சேர்களின் ஓரங்களில் வளரக் கூடிய இந்த கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.
Alternanthera sessilis என்பது botanical name. கிழக்கு ஆசிய கண்டங்களில் உணவாக பயன்படுத்தப்படுகிறது.
துளசியை மூலிகையின் ராணி என்று அழைப்பது போல பொன்னாங்கண்ணியை கீரைகளின் ராஜா என்று அழைக்கிறார்கள்.
தினமும் கீரையை சிறிய அளவிலாவது சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது என்பது சித்தர்கள் வாக்கு.
#பெயர்காரணம்:
மண்ணில் உள்ள பொன் சத்தை உறிந்துக் கொள்வதால் இதை ஏழைகளின் தங்கபஸ்பம் என்கிறார்கள். பொன்னிற மேனியை தரும் என்பதால் இதற்கு அந்த பெயர் வந்ததாம்.
பொன்னாங்கண்ணியில் இரு வகை உண்டு. நாட்டு பொன்னாங்கண்ணி பச்சை நிறத்தில் இருக்கும். எளிதில் வீட்டில் வளர்வதில்லை. நீர் தேங்கி நிற்கும் இடங்களில் வளரும். சீமை பொன்னாங்கண்ணி சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுவது. இதில் சத்தும் நாட்டு பொன்னாங்கண்ணியை விட குறைவு. நாட்டு பொன்னாங்கண்ணியில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்பு, பாஸ்பரஸ், காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன. இதற்கு வடக்கு பக்கம் copper leaf என்ற பெயரும் உண்டு.
சின்ன வயதில் சாப்பிட அடம்பிடிக்கையில் அம்மாவும், பாட்டியும் கண்ணுக்கு நல்லது என்று வாயில் திணிப்பார்கள் இந்த கீரையை. அதனால் தான் கண்ணாடி அணிய வேண்டிய தேவை வரவில்லையோ என்னவோ. ஒரு மண்டலம் இந்த கீரையை சேர்த்துக் கொண்டால் பகலில் கூட நட்சத்திரம் காணலாம் என்று ஒரு பழம் பெறும் கூற்று உண்டு.
ஆனால் தற்போது விளையும் பெரும்பாலான காய்கறிகள் பூச்சு மருந்து தான் தெளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் கீரைகளையாவது வீட்டில் விளைவித்து உண்ணலாம்.
காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்
என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்
பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று.
- அகத்தியர் கூற்று
இருமல்,சளி,கபம்,வாதநோய்கள், கண்நோய்கள், வெப்ப நோய்களை குணப்படுத்தவல்லது.
இது உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது. மஞ்சள் காமாலையை சரி செய்ய கூடியது.
ஞாபகசக்தியை கூட்டும். ஈரலை பலப்படுத்த கூடியது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்ய கூடியது.
Pc: my terrace garden
பச்சை பொன்னாங்கண்ணியை வீட்டிற்கு எதிரில் உள்ள புதரில் முளைத்து பெருகி கிடக்கின்றன. Quarantine முடிந்ததும் அதன் புகைப்படமும் பதிகிறேன்.