#செடிகள்_வளர்க்கலாம்_வாங்க
பகுதி 22
#செம்பருத்தி -
Botanical name - Hibiscus- malvacea வகையை சார்ந்தது.
இந்த தாவரம் Shoeblack plant, Chinese rose, rose mallow என்றும் அழைக்கப்படுகிறது. குற்று மரவகையை (shrub) சார்ந்தது.
பறவைகள் இதன் வண்ண நிறங்களால் அழைக்கப்படும். குறிப்பாக humming bird எனும் பறவைகள் இத்தாவரங்கள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில் ஈர்க்கப்படுமாம்.
செம்பருத்தி வகையிலேயே நாட்டு செம்பருத்தி, கலப்பு இன செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி, ஜிமிக்கி செம்பருத்தி, தூங்குமூஞ்சி செம்பருத்தி என்று வெவ்வேறு வகைகள் உண்டு. பற்பல வண்ண நிறங்களோடு வாசனையற்று இருக்கும்.
வித விதமான செம்பருத்தி வகைகள்:
நாட்டு செம்பருத்தி 👇👇
ஜிமிக்கி செம்பருத்தி 👇👇
தூங்குமூஞ்சி செம்பருத்தி 👇👇
கலப்பின செம்பருத்திகள் (Hybrid hibiscus)👇
நிறைய மருத்துவ பயன்கள் உள்ளதால் இயற்கை தங்கபஸ்பம் என்றும் அழைக்கப்படுகிறதாம்.
ஹிந்து கடவுள் காளியின் இஷ்டப்பூவாக விரும்பப்படுகிறது.👇👇
மலேசியாவின் தேசியப்பூவும் கூட.
செம்பருத்தி பயன்கள்
இதில் சிவப்பு செம்பருத்தி பூக்களை உண்பதால் Hibiscus Rosa sinensis👇👇
1.ரத்த அணுக்களை அதிகரிக்கும். 2.ஆண்மையையும் அதிகரிக்கும். விந்தணுக்களின் வேகத்தையும் உற்பத்தியையும் அதிகரிக்கும்.
3.பெண் மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கை குறைக்க உதவும்.
4. உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
5. கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
6. உணவில் சேர்ப்பதால் சோர்வு நீங்கும்.
7. சரும பளப்பளப்பை அதிகரிக்கும்.
8. வயிற்றுப்புண் ஆறும்.
9. இதயம் பலம் பெறும்.
10. வெள்ளைப்படுதலை குறைக்க உதவும்.
11. அல்சரை போக்கும்.
இதன் இலைகளை தேனீராக்கி பருகுவதால் ரத்த அழுத்தம் குறையும், கொழுப்பு கரையும். கூந்தல் கருமைக்கு உதவும்.
இதில் அமிலங்கள்,குளுகோசைடுகள், ரிபோஃப்ளேவின், கரோட்டின் என பல வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
சிறுவர்களுக்கு தருகையில் அதில் உள்ள மகரந்த காம்பை மட்டும் நீக்கிவிட்டு தரலாம்.
இந்த வகை செம்பருத்தி தொட்டிகளிலேயே அதிகளவு பூக்களை தரக்கூடியது. 👇👇👇
வெறும் குச்சியை நட்டு வைத்தோ, வேரோடு நடுவதாலோ வளரக் கூடியது. இதற்கு விதைகள் கிடையாது. விதைகள் இருக்கும் செம்பருத்தி அதாவது hibiscus வகைகளும் உண்டு. அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.